ஹூண்டாய் கிரெட்டாவின் ஆதிக்கத்தை உடைத்த மாருதி எஸ்யூவிகள்.. இனிமே நாங்க தான் இங்க கிங்கு!

இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனம் என்றால் அது மாருதி தான். பெரும்பான்மையான கார் விற்பனை பிரிவுகளில் மாருதியே முன்னணியில் இருக்கும். ஆனால் ஒரே ஒரு பிரிவில் மட்டும் மாருதியை பின்தள்ளி ஹூண்டாய் ஆதிக்கம் செலுத்தி வந்தது. தற்போது அந்தப் பிரிவிலும் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது மாருதி சுஸூகி.

அது வேறெந்தப் பிரிவும் கிடையாது, மிட்-சைஸ் எஸ்யூவி பிரிவு தான். இந்தக் கார் பிரிவில் கிரெட்டா மாடலுடன் ஹூண்டாயே ஆதிக்கம் செலுத்தி வந்தது. ஆனால் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் அந்த ஆதிக்கத்தை உடைக்கும் வகையில் புதிய விக்டோரிஸ் எஸ்யூவியை மாருதி வெளியிட்டது. அதன் பின்பு இந்தப் பிரிவில் தற்போது மாருதியே அதிக கார்களை விற்பனை செய்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

Maruti Victoris

கடந்தாண்டு, அதாவது 2025ம் ஆண்டு மே மாதம் இந்த மிட்-சைஸ் எஸ்யூவி பிரிவில் வெறும் 5,197 கார்களை மட்டுமே மாருதி விற்பனை செய்திருந்து. அப்போது கிராண்டு விட்டாரா என்று ஒரு மாடலை மட்டுமே இந்தப் பிரிவில் மாருதி விற்பனை செய்து வந்தது. விக்டோரிஸ் அப்போது வெளியாகியிருக்கவில்லை. இதனால் நிறைய வாடிக்கையாளர்கள் கிரெட்டாவையே பிரதானமாகத் தேர்ந்தெடுத்து வந்தனர். கடந்தாண்டு மே மாதம் ஹூண்டாய் நிறுவனமானது 14,860 கிரெட்டா கார்களை விற்பனை செய்திருந்தது.

அப்படியே இந்தாண்டு மே மாதத்திற்கு, அதானது கடந்த மாதத்திற்கு வருவோம். கிரெட்டாவின் விற்பனை கணிசமான அளவில் 15,235 யூனிட்டுகளாக உயர்ந்திருக்கிறது. ஆனால் மாருதியின் விக்டோரிஸ் மற்றும் கிராண்டு விட்டாரா ஆகிய இரண்டு மிட்-சைஸ் எஸ்யூவிக்களும் சேர்ந்து மொத்தமாக 20,219 யூனிட்டுகள் விற்பனையாகியிருக்கின்றன.

Hyundai Creta

இந்த விற்பனை அளவுடன் கடந்தாண்டு மே மாதம் இந்த மிட்-சைஸ் எஸ்யூவி பிரிவில் நான்காம் இடத்தில் இருந்த மாருதி சுஸூகி, கடந்த மே மாதம் முதலிடத்திற்கு முன்னேறியிருக்கிறது. கடந்த மே மாதம் விக்டோரில் எஸ்யூவி கிரெட்டாவை விட குறைவாக 10,853 யூனிட்டுகள் மட்டுமே விற்பனையாகியிருக்கிறது. ஆனால் கிராண்டு விட்டாராவும் கொஞ்சம் கொடுத்து 9,366 யூனிட்டுகள் விற்பனையாக, ஒட்டுமொத்தமாக 20,000 யூனிட்டுகளுக்கு மேலாக மிட்-சைஸ் எஸ்யூவிக்களை கடந்த மாதம் மாருதி விற்பனை செய்திருக்கிறது.

மாருதியின் மிட்-சைஸ் எஸ்யூவிக்கள் மட்டுமின்றி, கியா செல்டோஸ், டொயோட்டா ஹைரைடர் ஆகிய கார்களின் விற்பனை கணிசமான அளவு உயர, புது வரவான டாடா சியராவும் நல்ல விற்பனை எண்களைப் பதிவு செய்ய தற்போது பதற்றத்தில் இருக்கிறது ஹூண்டாய். கிரெட்டாவின் ஆதிக்கம் உடைந்து விடுமோ என்ற அச்சத்தில் அந்நிறுவனம் இருக்கிறது.

விரைவில் கிரெட்டாவை அந்நிறுவனம் மேம்படுத்தவிருக்கும் நிலையில், தற்போது விற்பனையில் இருக்கும் கிரெட்டா காருக்கும் விற்பனையை அதிகரிக்க 1 லட்சம் ரூபாய் வரையிலான சலுகைகளை வழங்கி வருகிறது. புதிதாக அப்டேட் செய்யப்படும் கிரெட்டா மாடலானது தற்போதைய காரை விட சற்று பெரிதாக, கூடுதலான சிறப்பம்சங்களைக் கொண்டிருக்கும் எனத் தெரிகிறது.

புதிய கிரெட்டா வெளியான பின்பு தற்போதைய மாருதியின் ஒட்டுமொத்த விற்பனை அளவை விட கிரெட்டாவின் விற்பனை அளவு அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்ற வகையில் மாருதியும் கிராண்டு விட்டாராவை மேம்படுத்தத் தயாராகி வருகிறது. அப்கிரேடு செய்யப்பட்ட ஹூண்டாய் கிரெட்டா மற்றும் மாருதியின் இரண்டு மிட்-சைஸ் எஸ்யூவிக்களுக்கு இடையிலான போட்டி சுவாரஸ்யமாக இருக்கப் போகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மிட்-சைஸ் எஸ்யூவி பிரிவில் சரியான ட்ராக்கைப் பிடித்து சென்று கொண்டிருக்கிறது மாருதி. விக்டோரிஸ் எஸ்யூவியில் இதுவரை சந்தையில் இல்லாத சில புதிய அம்சங்களுடன், இதுவரை தங்களது கார்களில் இல்லாத சில புதிய அம்சங்களையும் மாருதி கொடுத்திருப்பது வாடிக்கையாளர்களை ஈர்த்திருக்கிறது. அப்கிரேடு செய்யப்பட்ட கிரெட்டாவை இந்த மாருதி கார்கள் எப்படி எதிர்கொள்கின்றன என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

Article Published On: Monday, June 15, 2026, 18:46 [IST]
English summary
Maruti suvs breaks hyundai creta dominance in mid size suv segment
மேலும்... #maruti suzuki #hyundai #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out