ஒரு கிமீ ஓட்ட வெறும் 1 ரூபா மட்டுமே செலவாகும்! 7 பேர் போற மாதிரி புது காரை களமிறக்கும் மாருதி! எப்போ தெரியுமா?

இந்தியாவில் 7 சீட்டர் எம்பிவி ரக கார்களுக்கு (7 Seater MPV Cars) நல்ல 'டிமாண்ட்' உள்ளது. எனவே பல்வேறு நிறுவனங்களும் இந்த செக்மெண்ட்டில் கார்களை விற்பனை செய்து வருகின்றன. ஆனால் மாருதி சுஸுகி நிறுவனம்தான் இந்த செக்மெண்ட்டில் முழுமையாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga) கார்தான் இதற்கு காரணம்.

இது ஐசி இன்ஜின் மூலம் இயங்க கூடிய கார் ஆகும். இதை தொடர்ந்து இதே போன்றதொரு வெற்றியை எலெக்ட்ரிக் கார் செக்மெண்ட்டிலும் பெற வேண்டும் என மாருதி சுஸுகி நிறுவனம் விரும்புகிறது. எனவே 7 சீட்டர் எலெக்ட்ரிக் எம்பிவி ரக கார் (7 Seater Electric MPV Car) ஒன்றை மாருதி சுஸுகி நிறுவனம் கூடிய விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.

Maruti Suzuki Ertiga Airbags

தற்போதைய நிலையில் ஒய்எம்சி (YMC) என்ற குறியீட்டு பெயரில் அழைக்கப்பட்டு வரும் இந்த கார், இந்திய சாலைகளில் தீவிரமாக சோதனை செய்யப்பட்டு வருகிறது. எனவே நடப்பு 2026ம் ஆண்டின் இறுதிக்குள்ளாக மாருதி சுஸுகி நிறுவனத்தின் புதிய 7 சீட்டர் எலெக்ட்ரிக் கார் பொது பார்வைக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை தொடர்ந்து அடுத்த ஆண்டு (2027) இந்த கார் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மாருதி சுஸுகி நிறுவனம் தற்போதைய நிலையில் ஒரே ஒரு எலெக்ட்ரிக் காரை மட்டுமே விற்பனை செய்து வருகிறது. அது மாருதி சுஸுகி இ விட்டாரா (Maruti Suzuki e Vitara) ஆகும்.

Maruti Suzuki e Vitara

இது மிட்-சைஸ் எஸ்யூவி (Mid-size SUV) ரகத்தை சேர்ந்தது. இந்த கார் உருவாக்கப்பட்டுள்ள அதே Heartect-e பிளாட்பார்ம் அடிப்படையில்தான், மாருதி சுஸுகி நிறுவனத்தின் 7 சீட்டர் எலெக்ட்ரிக் எம்பிவி காரும் உருவாக்கப்படுகிறது. எனவே மாருதி சுஸுகி இ விட்டாரா எலெக்ட்ரிக் காரில் வழங்கப்பட்டுள்ள அதே 49 kWh மற்றும் 61 kWh பேட்டரி ஆப்ஷன்கள்தான் (Battery Options), புதிய 7 சீட்டர் எலெக்ட்ரிக் எம்பிவி காரிலும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாருதி சுஸுகி இ விட்டாரா எலெக்ட்ரிக் காரில் இதன் டிரைவிங் ரேஞ்ச் (Driving Range) முறையே 440 கிலோ மீட்டர்கள் மற்றும் 543 கிலோ மீட்டர்களாக உள்ளது. ஆனால் 7 சீட்டர் எலெக்ட்ரிக் எம்பிவி காரின் டிரைவிங் ரேஞ்ச் சற்று குறைவாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அனேகமாக இதன் டிரைவிங் ரேஞ்ச் சுமார் 400 மற்றும் 500 கிலோ மீட்டர்களாக இருக்கலாம்.

பேட்டரி ஆப்ஷன்கள் தவிர, மாருதி சுஸுகி இ விட்டாரா எலெக்ட்ரிக் காரில் வழங்கப்பட்டுள்ள பல்வேறு வசதிகளும் (Features), மாருதி சுஸுகி நிறுவனத்தின் புதிய 7 சீட்டர் எலெக்ட்ரிக் எம்பிவி காரில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே 10.1 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் போன்ற வசதிகளை, 7 சீட்டர் எலெக்ட்ரிக் எம்பிவி காரிலும் நாம் அப்படியே எதிர்பார்க்கலாம்.

மேலும் மாருதி சுஸுகி இ விட்டாராவில் வழங்கப்பட்டுள்ள லெவல் 2 அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems), டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், 360 டிகிரி கேமரா, வென்டிலேஷன் வசதியுடன் கூடிய இருக்கைகள், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே மற்றும் சன்ரூஃப் போன்ற வசதிகளையும், மாருதி சுஸுகி 7 சீட்டர் எலெக்ட்ரிக் எம்பிவி காரிலும் எதிர்பார்க்க முடியும்.

மாருதி சுஸுகி 7 சீட்டர் எலெக்ட்ரிக் எம்பிவி காரின் நீளம் சுமார் 4.5 மீட்டர்கள் என்ற அளவில் இருக்கலாம். குஜராத் மாநிலத்தில் உள்ள தொழிற்சாலையில் இந்த கார் உற்பத்தி செய்யப்படவுள்ளது. இங்கிருந்து வெளிநாடுகளுக்கும் இந்த கார் ஏற்றுமதி செய்யப்படும். அத்துடன் இதன் டொயோட்டா (Toyota) வெர்ஷனும் விற்பனைக்கு வரவுள்ளது.

சுஸுகி மற்றும் டொயோட்டா நிறுவனங்கள் கூட்டணி அமைத்து செயல்பட்டு வருகின்றன. எனவே மாருதி சுஸுகி இ விட்டாரா எலெக்ட்ரிக் காரின் டொயோட்டா வெர்ஷன் டொயோட்டா அர்பன் க்ரூஸர் இபெல்லா (Toyota Urban Cruiser Ebella) என்ற பெயரில் விற்பனைக்கு வரவுள்ளது. அதே பாணியில் மாருதி சுஸுகி நிறுவனத்தின் 7 சீட்டர் எலெக்ட்ரிக் எம்பிவி காரின் டொயோட்டா வெர்ஷனும் விற்பனைக்கு வரும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் கியா கேரன்ஸ் க்ளாவிஸ் இவி (Kia Carens Clavis EV) எலெக்ட்ரிக் காருக்கு நேரடி போட்டியாக, மாருதி சுஸுகி 7 சீட்டர் எலெக்ட்ரிக் எம்பிவி கார் இருக்கும். இதன் ஆரம்ப விலை (Price) அனேகமாக 17 லட்ச ரூபாய் என்ற அளவில் நிர்ணயம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

ஆனால் மாருதி சுஸுகி நிறுவனம் பாஸ் (BaaS - Battery-as-a-Service) திட்டத்தின் கீழும், இந்த காரை விற்பனை செய்யவுள்ளது. இந்த முறையில் மாருதி சுஸுகி 7 சீட்டர் எலெக்ட்ரிக் எம்பிவி காரின் ஆரம்ப விலை வெறும் 12 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த முறையை நீங்கள் தேர்வு செய்தால், ஒரு கிலோ மீட்டருக்கு சுமார் 4 ரூபாயை கட்டணமாக செலுத்த வேண்டியதிருக்கும்.

இவை அனைத்தும் எதிர்பார்க்கப்படும் விலைகள் மட்டுமே. விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் நாளில்தான் அதிகாரப்பூர்வமான விலை அறிவிக்கப்படும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. மாருதி சுஸுகி 7 சீட்டர் எலெக்ட்ரிக் எம்பிவி காரை ஒரு கிலோ மீட்டர் இயக்குவதற்கு (Running Cost) 1-1.50 ரூபாய் வரை மட்டுமே செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே குறைவான செலவில் அதிகம் பேர் பயணம் செய்ய கூடிய ஒரு காரை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு இது நல்ல ஆப்ஷனாக இருக்கும்.

Article Published On: Tuesday, May 12, 2026, 14:21 [IST]
English summary
Maruti suzuki 7 seater electric mpv unveil launch timeline expected price range running cost
மேலும்... #maruti suzuki #electric vehicles #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+