உலகிலேயே விலை குறைவான கார்! 34 கிமீ மைலேஜ்! மாருதியால் மிரண்டு போன போட்டி நிறுவனங்கள்!
இந்திய சந்தையில் மிகவும் குறைவான விலையில் ஒரு புத்தம் புதிய காரை வாங்க வேண்டும் என்றால், அனைவரின் மனதிற்கும் முதலில் நினைவிற்கு வருவது, கண்டிப்பாக மாருதி சுஸுகி ஆல்டோ கே10 (Maruti Suzuki Alto K10) காராகதான் இருக்கும். இது இந்திய அளவில் மட்டுமல்லாது, உலகிலேயே மிகவும் விலை குறைவான கார்களில் ஒன்றாக உள்ளது.
மிகவும் விலை குறைவான காராக இருந்தாலும் கூட, 7 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல் மற்றும் இபிடி உடன் ஏபிஎஸ் போன்ற வசதிகள் (Features) எல்லாம் மாருதி சுஸுகி ஆல்டோ கே10 காரில் கொடுக்கப்பட்டுள்ளன.

அத்துடன் ஹார்ட்டெக்ட் பிளாட்பார்ம் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள மாருதி சுஸுகி ஆல்டோ கே10 காரில், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார் போன்ற வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன. மேலும் லக்கேஜ்களை கொண்டு செல்வதற்கு ஏதுவாக 214 லிட்டர் பூட் ஸ்பேஸ் (Boot Space) இடவசதியும் மாருதி சுஸுகி ஆல்டோ கே10 காரில் கொடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மாருதி சுஸுகி ஆல்டோ கே10 காரின் சிஎன்ஜி வேரியண்ட்கள் ஒரு கிலோவிற்கு 33.40 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்க கூடியவையாக உள்ளன. மைலேஜ் விஷயத்தில் இதன் பெட்ரோல் வேரியண்ட்களும் சளைத்தவை அல்ல. மாருதி சுஸுகி ஆல்டோ கே10 காரின் பெட்ரோல்-மேனுவல் வேரியண்ட்கள் ஒரு லிட்டருக்கு 24.39 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்க கூடியவையாக இருக்கின்றன.

அதே நேரத்தில் பெட்ரோல்-ஏஜிஎஸ் வேரியண்ட்கள் ஒரு லிட்டருக்கு 24.90 மைலேஜ் வழங்குகின்றன. இவை அனைத்துமே மாருதி சுஸுகி நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படும் அராய் மைலேஜ் (ARAI Mileage) என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. ஒட்டுமொத்தத்தில் குறைவான விலையில், அதிக மைலேஜ் வழங்க கூடிய, அதே நேரத்தில் ஓரளவிற்கு அத்தியாவசியமான வசதிகளையும் கொண்ட ஒரு காரை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு, மாருதி சுஸுகி ஆல்டோ கே10 மிகச்சிறந்த ஆப்ஷனாக உள்ளது.
குறைவான விலை, நிறைவான மைலேஜ் மற்றும் அத்தியாவசியமான வசதிகள் வழங்கப்படுவது போன்ற காரணங்களாலும், ஜிஎஸ்டி வரி (GST) குறைப்பிற்கு பிறகு, விலை மேலும் கடுமையாக சரிவடைந்த காரணத்தாலும், தற்போது மாருதி சுஸுகி ஆல்டோ கே10 காரின் விற்பனை சிறப்பாக இருந்து வருகிறது.
AUTO PUNDITZ தளத்தில் தற்போது வெளியாகியுள்ள சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) மூலமாக இது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி பார்த்தால், கடந்த 2025ம் ஆண்டு டிசம்பர் மாதம் 10,829 மாருதி சுஸுகி ஆல்டோ கே10 கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன. ஆனால் கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெறும் 7,410 மாருதி சுஸுகி ஆல்டோ கே10 கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன.
அதாவது கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது, 2025ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 3,419 மாருதி சுஸுகி ஆல்டோ கே10 கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் மாருதி சுஸுகி ஆல்டோ கே10 கார் விற்பனையில் 46 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது.
இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி ஆல்டோ கே10 காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 3.70 லட்ச ரூபாயாக மட்டும்தான் இருக்கிறது. அதே நேரத்தில் மாருதி சுஸுகி ஆல்டோ கே10 காரின் டாப் வேரியண்ட்டின் விலையும் கூட வெறும் 5.45 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. இவை மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் டாடா டியாகோ (Tata Tiago) மற்றும் ரெனால்ட் க்விட் (Renault Kwid) போன்ற ஆரம்ப நிலை ஹேட்ச்பேக் ரக கார்களுக்கு எல்லாம் மாருதி சுஸுகி ஆல்டோ கே10 மிகச்சிறந்த மாற்று ஆப்ஷன் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.


Click it and Unblock the Notifications








