ஆல்டோ ஏற்கனவே விலை குறைவான கார்தான்! இதுல 1.08 லட்ச ரூபாயை வேற குறச்சுட்டாங்களா! ஷோரூம்களில் குவியும் மக்கள்!
இந்திய சந்தையில் மிகவும் குறைவான விலையில் ஒரு ஹேட்ச்பேக் (Hatchback) ரக காரை வாங்க வேண்டும் என்றால், அனைவரின் மனதிற்கும் முதலில் நினைவிற்கு வருவது மாருதி சுஸுகி ஆல்டோ கே10 (Maruti Suzuki Alto K10) காராகதான் இருக்கும். இதன் கடந்த 2025-26 நிதியாண்டிற்கான (2025 ஏப்ரல் 1 - 2026 மார்ச் 31) சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது.
காடிவாடி தளத்தில் வெளியாகியுள்ள இந்த சேல்ஸ் ரிப்போர்ட்படி பார்த்தால், கடந்த 2025-26 நிதியாண்டில், ஒட்டுமொத்தமாக 93,740 மாருதி சுஸுகி ஆல்டோ கே10 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது கடந்த 2024-2025 நிதியாண்டுடன் (2024 ஏப்ரல் 1 - 2025 மார்ச் 31) ஒப்பிடும்போது 8 சதவீதம் குறைவு ஆகும்.

இந்தியாவில் கடந்த 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கார்கள் மீதான ஜிஎஸ்டி (GST) குறைக்கப்பட்டது. அதற்கு முன்பு வரை மாருதி சுஸுகி ஆல்டோ கே10 காரின் விற்பனை மிகவும் மந்தமாகவே இருந்து வந்தது. ஆனால் ஜிஎஸ்டி குறைப்பிற்கு பின், மாருதி சுஸுகி ஆல்டோ கே10 காரின் விற்பனை கிடுகிடுவென உயர தொடங்கி விட்டது.
அதாவது கடந்த 2025-26 நிதியாண்டின் முதல் 6 மாதங்கள் (ஏப்ரல் - செப்டம்பர்) மாருதி சுஸுகி ஆல்டோ கே10 காரின் விற்பனை மிகவும் மந்தமாக இருந்தது. ஆனால் அதற்கு அடுத்த 6 மாதங்கள் (அக்டோபர் - மார்ச்) மாருதி சுஸுகி ஆல்டோ கே10 காரின் விற்பனை அதிகரித்து விட்டது.

மாருதி சுஸுகி ஆல்டோ கே10 காரின் விலை 1.08 லட்ச ரூபாய் குறைக்கப்பட்டதுதான் இதற்கு காரணம். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி ஆல்டோ கே10 காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 3.70 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலையும் கூட வெறும் 5.45 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது.
இவை மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். மாருதி சுஸுகி ஆல்டோ கே10 காரானது மிகவும் விலை குறைவானது என்பதுடன், இந்திய சந்தையில் கிடைக்க கூடிய அதிக மைலேஜ் வழங்கும் கார்களில் ஒன்றாகவும் இருக்கிறது.
மாருதி சுஸுகி ஆல்டோ கே10 காரின் பெட்ரோல்/மேனுவல் வேரியண்ட்கள் ஒரு லிட்டருக்கு 24.39 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்க கூடியவையாக உள்ளன. அதே நேரத்தில் இதன் பெட்ரோல்/ஆட்டோமேட்டிக் வேரியண்ட்கள் ஒரு லிட்டருக்கு 24.90 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்க கூடியவையாக இருக்கின்றன.
இந்த வரிசையில் மாருதி சுஸுகி ஆல்டோ கே10 காரின் சிஎன்ஜி வேரியண்ட்கள் ஒரு கிலோவிற்கு 33.40 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்க கூடியவையாக உள்ளன. இவை அனைத்துமே மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள அராய் மைலேஜ் (ARAI Mileage) என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் ரெனால்ட் க்விட் (Renault Kwid) மற்றும் டாடா டியாகோ (Tata Tiago) போன்ற ஆரம்ப நிலை ஹேட்ச்பேக் ரக கார்களுக்கு எல்லாம் மாருதி சுஸுகி ஆல்டோ கே10 மிகச்சிறந்த மாற்று ஆப்ஷன் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.


Click it and Unblock the Notifications








