ஆட்டோவை விட குறைவான விலையில் புது கார்! 34 கிமீ மைலேஜூம் உறுதியா கிடைக்கும்! ஷோரூம்களில் கூட்டம் அலை மோதுது!

இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வரும் மிகவும் விலை குறைவான ஹேட்ச்பேக் ரக கார்களில் ஒன்று மாருதி சுஸுகி ஆல்டோ கே10 (Maruti Suzuki Alto K10). இந்தியாவில் சமீப காலமாகவே மிகவும் விலை குறைவான ஆரம்ப நிலை ஹேட்ச்பேக் ரக கார்களின் விற்பனை மிகவும் மந்தமாக இருந்து வருகிறது.

மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ (Maruti Suzuki S-presso) மற்றும் ரெனால்ட் க்விட் (Renault Kwid) போன்ற கார்களை இதற்கு உதாரணமாக கூறலாம். ஆனால் விதிவிலக்காக மாருதி சுஸுகி ஆல்டோ கே10 காரின் விற்பனை மிகவும் சிறப்பாக இருந்து வருகிறது. இதற்கு தற்போது வெளியாகியுள்ள சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) ஒரு உதாரணம் ஆகும்.

Maruti Suzuki Alto K10 Interior

மாருதி சுஸுகி நிறுவனம் நடப்பு 2026ம் ஆண்டு மார்ச் மாதம் 11,515 ஆல்டோ கே10 கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. இது கடந்த 2025ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடும்போது 17 சதவீதம் அதிகம் ஆகும். விலை குறைவான ஹேட்ச்பேக் கார்களின் விற்பனை குறைந்து கொண்டே வந்தாலும், மாருதி சுஸுகி ஆல்டோ கே10 காருக்கு எவ்வளவு பெரிய வரவேற்பு உள்ளது? என்பதை இந்த புள்ளி விபரங்கள் தெளிவாக எடுத்து காட்டுகின்றன.

செயல்திறனை பொறுத்தவரையில், மாருதி சுஸுகி ஆல்டோ கே10 காரில், 1.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இதில், பெட்ரோல் இன்ஜின் உடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஜிஎஸ் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. அதே நேரத்தில் சிஎன்ஜி இன்ஜின் உடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் மட்டும் வழங்கப்படுகிறது.

Maruti Suzuki Alto K10

இதில், பெட்ரோல்/மேனுவல் வேரியண்ட்கள் ஒரு லிட்டருக்கு 24.39 கிலோ மீட்டர் மைலேஜையும், பெட்ரோல்/ஏஜிஎஸ் வேரியண்ட்கள் ஒரு லிட்டருக்கு 24.90 கிலோ மீட்டர் மைலேஜையும் வழங்குகின்றன. அதே நேரத்தில் சிஎன்ஜி/மேனுவல் வேரியண்ட்கள் ஒரு கிலோவிற்கு 33.40 கிலோ மீட்டர் மைலேஜை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவை அனைத்துமே மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள அராய் மைலேஜ் (ARAI Mileage) ஆகும். சிறப்பான மைலேஜ் உடன், மாருதி சுஸுகி ஆல்டோ கே10 காரில் ஏராளமான வசதிகளும் (Features) வழங்கப்படுகின்றன. இதில், 17.78 செமீ டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே போன்றவை எல்லாம் முக்கியமானவை ஆகும்.

அத்துடன் அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி ப்ரோகிராம், இபிடி உடன் ஏபிஎஸ் மற்றும் ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் போன்ற பாதுகாப்பு வசதிகளும் (Safety Features) மாருதி சுஸுகி ஆல்டோ கே10 காரில் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டதை போல், இது மிகவும் விலை குறைவான கார் ஆகும்.

மாருதி சுஸுகி ஆல்டோ கே10 காரின் ஆரம்ப நிலை வேரியண்ட் வெறும் 3.70 லட்ச ரூபாய் என்ற விலையில் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. இது ஒரு சில ஆட்டோக்களை விட குறைவான விலை ஆகும். அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டும் கூட வெறும் 5.45 லட்ச ரூபாய் என்ற விலையில் மட்டுமே விற்பனையாகி கொண்டுள்ளது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மிகவும் குறைவான விலையில் ஒரு சிறிய ஹேட்ச்பேக் ரக காரை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு மாருதி சுஸுகி ஆல்டோ கே10 மிகச்சிறந்த ஆப்ஷன் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து. சிறப்பான மைலேஜ் இந்த காரின் மிக முக்கியமா ப்ளஸ் பாயிண்ட்களில் ஒன்றாகும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, April 8, 2026, 14:05 [IST]
English summary
Maruti suzuki alto k10 sales report march 2026 17 per cent growth
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+