இந்த 4 மாருதி கார்களை வாங்கறதா இருந்தா வர்ற 14ம் தேதிக்கு முன்னாடி புக்கிங் பண்ணீருங்க! இல்லனா கஷ்டம்!

இந்தியாவில் தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் விலை (Petrol, Diesel Price Hike) மட்டும் உயரவில்லை. கூடவே கார்களின் விலையும் உயர தொடங்கியுள்ளது. பல்வேறு கார் நிறுவனங்களும் தற்போது தங்கள் கார்களின் விலையை அதிரடியாக உயர்த்தி வருகின்றன. இதற்கு மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனமும் விதிவிலக்கு அல்ல.

மாருதி சுஸுகி நிறுவனம் தனது கார்களின் விலையை கடந்த ஜூன் 1ம் தேதி உயர்த்தியது. மாருதி சுஸுகி நிறுவனத்தின் அனைத்து கார்களுக்கும் இந்த விலை உயர்வு பொருந்தும் என அப்போது அறிவிக்கப்பட்டிருந்தது. மாருதி சுஸுகி நிறுவன கார்களின் விலை கடந்த ஜூன் 1ம் தேதியில் இருந்து 30 ஆயிரம் ரூபாய் வரை உயர்ந்துள்ளது.

Maruti Suzuki Alto K10 Interior

நடப்பு 2026ம் ஆண்டில் மாருதி சுஸுகி நிறுவனம் தனது கார்களின் விலையை உயர்த்தியிருப்பது இதுவே முதல் முறை ஆகும். இந்த சூழலில் மாருதி சுஸுகி நிறுவனம் தற்போது அதிரடியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் கீழ், மாருதி சுஸுகி நிறுவனத்தின் 4 கார்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு பலன் கிடைக்கும்.

அவை மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ (Maruti Suzuki S-presso), மாருதி சுஸுகி ஆல்டோ கே10 (Maruti Suzuki Alto K10), மாருதி சுஸுகி செலிரியோ (Maruti Suzuki Celerio) மற்றும் மாருதி சுஸுகி வேகன் ஆர் (Maruti Suzuki Wagon R) ஆகியவை ஆகும்.

Maruti Suzuki Alto K10

இந்த 4 கார்களின் விலையை உயர்த்தும் திட்டத்தை மட்டும் மாருதி சுஸுகி நிறுவனம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இன்னும் தெளிவாக சொல்வதென்றால், வரும் ஜூன் 14ம் தேதி வரை இந்த 4 கார்களை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு விலை உயர்வு பொருந்தாது. அதற்கு பிறகு முன்பதிவு செய்தால் உயர்த்தப்பட்ட புதிய விலையில்தான் காரை வாடிக்கையாளர்கள் வாங்க வேண்டியிருக்கும். இது குறித்து காடிவாடி தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இவை நான்குமே ஹேட்ச்பேக் ரக கார்கள் ஆகும். இந்தியாவில் சமீப காலமாக எஸ்யூவி ரக கார்களைதான் வாடிக்கையாளர்கள் அதிகம் வாங்கி கொண்டுள்ளனர். ஹேட்ச்பேக் ரக கார்களை வாடிக்கையாளர்கள் பெரிதாக கண்டு கொள்வதில்லை. இருப்பினும் மாருதி சுஸுகி நிறுவனத்தின் ஹேட்ச்பேக் ரக கார்களின் விற்பனை தற்போது உயர்ந்து கொண்டு வருகிறது.

இந்த நேரத்தில் விலையை உயர்த்தினால் சரியாக இருக்காது என்பதால்தான் மாருதி சுஸுகி நிறுவனம் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது. அத்துடன் இவை அனைத்துமே ஆரம்ப நிலை கார்கள் ஆகும். அதாவது இவற்றின் விலை மிகவும் குறைவு. பொதுவாக விலை உயர்ந்த கார்களை வாங்கும் வாடிக்கையாளர்கள், விலை உயர்ந்தாலும் அதை பெரிதாக எடுத்து கொள்ள மாட்டார்கள்.

ஆனால் விலை குறைவான கார்களை வாங்கும் வாடிக்கையாளர்களின் மனநிலை வேறு.சிறிய விலை உயர்வு என்றாலும் கூட, காரை வாங்கும் திட்டத்தை அவர்கள் கிடப்பில் போட்டு விடுவார்கள். இதை எல்லாம் மனதில் வைத்துதான் 4 ஹேட்ச்பேக் ரக கார்களின் விலை உயர்வை மட்டும் மாருதி சுஸுகி நிறுவனம் தற்காலிமாக நிறுத்தி வைத்துள்ளது. இந்த 4 கார்களை நீங்கள் வாங்குவதாக இருந்தால், வரும் ஜூன் 14ம் தேதிக்குள் முன்பதிவு செய்து கொள்வது நல்லது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் தற்போதைய நிலையில், மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ, மாருதி சுஸுகி ஆல்டோ கே10, மாருதி சுஸுகி செலிரியோ மற்றும் மாருதி சுஸுகி வேகன் ஆர் ஆகிய கார்களின் ஆரம்ப நிலை வேரியண்ட்களின் விலை முறையே 3.50 லட்சம், 3.70 லட்சம், 4.70 லட்சம் மற்றும் 4.99 லட்ச ரூபாயாக உள்ளன.

இவை அனைத்துமே மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். இந்த கார்களை நீங்கள் தொடர்ந்து குறைவான விலையிலேயே வாங்க வேண்டும் என்றால், வரும் ஜூன் 14ம் தேதிக்கு முன்பாக முன்பதிவு செய்து கொள்வது சிறந்தது.

Article Published On: Wednesday, June 10, 2026, 13:40 [IST]
English summary
Maruti suzuki announces price protection scheme for 4 entry level hatchback cars
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out