நாம நினைக்கறத விட நிலைமை ரொம்ப மோசம்! பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு! அதிரடி முடிவை எடுத்த மாருதி சுஸுகி!

இந்தியாவில் கடந்த சில நாட்களாக நாம் கண் விழித்ததும் பார்க்கும் முதல் செய்தியாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு (Petrol, Diesel Price Hike) இருக்கிறது. சென்னையில் (Chennai) கடந்த மே 14ம் தேதி ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை வெறும் 100.80 ரூபாயாக மட்டுமே இருந்தது. ஆனால் இன்று (மே 27) அதன் விலை 108.20 ரூபாயாக உள்ளது.

அதாவது கிட்டத்தட்ட இரண்டே வாரங்களில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 7.40 ரூபாய் உயர்ந்துள்ளது. மறுபக்கம் சென்னையில் கடந்த மே 14ம் தேதி ஒரு லிட்டர் டீசலின் விலை வெறும் 92.39 ரூபாயாக மட்டுமே இருந்தது. ஆனால் இன்று அது 99.98 ரூபாயாக உயர்ந்துள்ளது. அதாவது கிட்டத்தட்ட இரண்டே வாரங்களில் ஒரு லிட்டர் டீசலின் விலை 7.59 ரூபாய் உயர்ந்துள்ளது.

Maruti Suzuki Car Showroom

இதனால் வாகன ஓட்டிகள் மிக கடுமையான பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளனர். பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தால், அது அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையிலும் எதிரொலிக்கும். அதாவது காய்கறி, பழங்கள், மளிகை சாமான்கள் என அனைத்து பொருட்களின் விலையும் உயரும். இதனால் ஒட்டுமொத்தமாக அனைத்து தரப்பு மக்களுக்கும் இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு ஆசியாவில் நடைபெற்று வரும் போர்தான் (West Asia War) இந்த பிரச்சனைகளுக்கு எல்லாம் மிகவும் முக்கியமான காரணமாக உள்ளது. ஈரான்-இஸ்ரேல்-அமெரிக்கா (Iran-Israel-US) ஆகிய நாடுகள் இந்த போரில் ஈடுபட்டுள்ளன. இதன் காரணமாக உலகின் பல்வேறு நாடுகளிலும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவதுடன், அவற்றுக்கு தட்டுப்பாடும் ஏற்பட்டு கொண்டுள்ளது.

Narendra Modi

எனவே பெட்ரோல், டீசல் பயன்பாட்டை குறைப்பதற்கு தேவையான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தியாவை பொறுத்தவரை, பெட்ரோல், டீசலின் மூலப்பொருளான கச்சா எண்ணெய் (Crude Oil) வளம் பெரிதாக இல்லை. இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் சுமார் 87 சதவீதத்தை இறக்குமதியின் மூலமாக மட்டுமே பூர்த்தி செய்து கொள்கிறது.

எனவே பெட்ரோல், டீசல் பயன்பாட்டை குறைக்க வேண்டும் என கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்திய மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi) வேண்டுகோள் விடுத்தார். குறிப்பாக சாத்தியம் இருக்கும்பட்சத்தில், வீட்டில் இருந்தே வேலை செய்யும் முறையை (Work From Home) ஊழியர்களுக்கு நிறுவனங்கள் வழங்க வேண்டும் எனவும் அவர் கேட்டு கொண்டார்.

இதன் பேரில் இந்தியாவின் நம்பர் 1 கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி (Maruti Suzuki) தற்போது அதிரடியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அது வீட்டில் இருந்தே வேலை செய்வது தொடர்பான அறிவிப்பு ஆகும். சாத்தியம் உள்ள அலுவலக ஊழியர்களை, வீட்டில் இருந்தே வேலை செய்யும்படி மாருதி சுஸுகி நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

ஆனால் நேரடியாக வந்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ள தொழிற்சாலை ஊழியர்கள் போன்றவர்கள் தொடர்ந்து பணிக்கு வந்துதான் ஆக வேண்டும் என மாருதி சுஸுகி நிறுவனம் கூறியுள்ளது. இது குறித்து கார்டாக் தளம் செய்தி வெளியிட்டுள்ளது. மாருதி சுஸுகியை தொடர்ந்து இன்னும் பல்வேறு நிறுவனங்களும், தங்களது ஊழியர்களுக்கு, 'வொர்க் ஃப்ரம் ஹோம்' வாய்ப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஒரு ஊழியர் ஒரு நாளைக்கு எரிபொருளுக்காக 300 ரூபாய் செலவிடுகிறார் என வைத்து கொள்வோம். வாரத்தில் 5 நாட்கள் வேலை எனில், 1,500 ரூபாயை அவர் எரிபொருளுக்காக மட்டுமே செலவிட நேரிடும். அதுவே வீட்டில் இருந்து வேலை செய்யும் வாய்ப்பை வழங்கினால், ஒரு வாரத்திற்கு மட்டும் 1,500 ரூபாய் மிச்சமாகும்.

இது ஒரு ஊழியருக்கு ஒரு வாரத்திற்கான சேமிப்பு மட்டுமே. இது போல் பல லட்சக்கணக்கான ஊழியர்கள் வீட்டில் இருந்தே வேலை செய்யும்போது, மிகப்பெரிய அளவில் எரிபொருள் மிச்சம் ஆகும். எனவே சாத்தியம் உள்ள நிறுவனங்கள், தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தே வேலை செய்யும்படி அறிவுறுத்துவதுதான் தற்போதைய சூழலுக்கு மிகவும் நல்லது.

அதையும் மீற அலுவலகம் சென்றே ஆக வேண்டும் என்றால், சொந்த கார் போன்ற வாகனங்களுக்கு பதிலாக, பஸ் போன்ற பொது போக்குவரத்து வாகனங்களை பயன்படுத்தலாம். இதன் மூலமும் குறிப்பிடத்தக்க அளவில் எரிபொருளை சேமிக்க முடியும். பஸ்களை அதிக அளவில் பயன்படுத்துவதன் மூலம் சாலைகளில் போக்குவரத்து நெரிசலையும் குறைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Article Published On: Wednesday, May 27, 2026, 16:23 [IST]
English summary
Maruti suzuki announces work from home to save petrol diesel
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out