பண்டிகை கால துவக்கம் எதிரொலி... ஆகஸ்ட்டிலும் மாருதி கார் விற்பனை விர்ர்...
நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி தொடர்ந்து விற்பனையில் கணிசமான வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதத்திலும் மாருதி சுஸுகி நிறுவனத்தின் விற்பனை கணிசமான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. சென்ற ஆகஸ்ட் மாதத்தில் 1.77 லட்சம் கார்களை அந்நிறுவனம் உள்நாட்டு சந்தையில் விற்பனை செய்துள்ளது. குறிப்பாக, அந்நிறுவனத்தின் எஸ்யூவி மற்றும் பன்முக பயன்பாட்டு வாகனப் பிரிவு வாகனங்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.
மாருதி சுஸுகி வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தகவலின்படி, கடந்த 2026 ஆகஸ்ட் மாதத்தில் 2,19,220 வாகனங்களை விற்பனை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்நாட்டு விற்பனை, டொயோட்டா நிறுவனத்திற்கான விற்பனை மற்றும் ஏற்றுமதியும் அடங்கும். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 1,80,683 யூனிட்டுகள் விற்பனை செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது மொத்த விற்பனை 21.3 சதவீதம் உயர்ந்துள்ளது.

உள்நாட்டு விற்பனை
கடந்த மாதம் உள்நாட்டில் மட்டும் 1,76,971 யூனிட்டுகளை மாருதி விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இது 1,31,278 யூனிட்டுகளாக இருந்த நிலையில், தற்போது விற்பனை 34.8 சதவீத வளர்ச்சி கண்டுள்ளது.
மாருதியின் யுட்டிலிட்டி வாகனப் பிரிவில் உள்ள பிரெஸ்ஸா, எர்டிகா, இ விட்டாரா, ஃப்ரான்க்ஸ், கிராண்ட் விட்டாரா, இன்விக்டோ, ஜிம்னி, விக்டோரிஸ் மற்றும் எக்ஸ்எல்6 ஆகியவற்றின் விற்பனை 79,045 யூனிட்டுகளாக பதிவாகி உள்ளன. கடந்த ஆண்டு இதே மாதத்தில் 54,043 யூனிட்டுகள் மட்டுமே விற்பனையான நிலையில், தற்போது 46.3 சதவீத வளர்ந்துள்ளது.
| Segment | Aug 2026 | Aug 2025 |
|---|---|---|
| Mini (Alto, S-Presso) | 8,799 units | 6,853 units |
| Compact (Baleno, Celerio, Dzire, Ignis, Swift, WagonR) | 77,166 units | 59,597 units |
| Utility Vehicles | 79,045 units | 54,043 units |
| Eeco | 11,961 units | 10,785 units |
| Total Domestic PV | 1,76,971 units | 1,31,278 units |
யுட்டிலிட்டி வாகனங்கள் மட்டுமின்றி, அந்நிறுவனத்தின் இதர வகை கார்களின் விற்பனையும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. ஆல்ட்டோ மற்றும் எஸ் பிரெஸ்ஸோ ஆகியவற்றை உள்ளடக்கிய மினி செக்மென்ட்டில் 8,799 யூனிடுகள் விற்பனையாகி உள்ளன. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 6,853 யூனிட்டுகள் விற்பனையான நிலையில், இந்தப் பிரிவு 28.4 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
பலேனோ, செலிரியோ, சியாஸ், டிசையர், இக்னிஸ், ஸ்விஃப்ட் மற்றும் வேகன் ஆர் ஆகிய கார்கள் உள்ளடக்கிய காம்பேக்ட் கார் செக்மென்ட்டில் 77,166 யூனிட்டுகள் விற்பனையாகி உள்ளன. இது கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாத்ததுடன் ஒப்பிடுகையில், 29.5 சதவீதம் உயர்வு என்பது குறிப்பிடத்தக்கது.
மாருதி சுஸுகி நிறுவனத்தின் ஈக்கோ வேன் விற்பனையும் ஆகஸ்ட் மாதத்தில் உயர்ந்துள்ளது. கடந்த மாதத்தில் 11,961 ஈக்கோ வேன்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் 10,785 யூனிட்டுகள் விற்பனை செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. உள்நாட்டு சந்தையில் விற்பனை வலுவாக இருந்தாலும், ஏற்றுமதி பிரிவில் மாருதி சுஸுகிக்கு சரிவு ஏற்பட்டுள்ளது.
கடந்த மாதம் ஆகஸ்ட் மாதத்தில் நிறுவனம் 33,844 வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் 36,538 யூனிட்டுகள் ஏற்றுமதி செய்யப்பட்டிருந்தது. இது 7.4 சதவீத சரிவு ஏற்பட்டுள்ளது. பண்டிகை காலம் துவங்க இருக்கும் நிலையில், மாருதி சுஸுகி நிறுவனத்தின் உள்நாட்டு கார் விற்பனை இந்த மாதமும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications
