புதிய மாருதி பலேனோ காரின் வேரியண்ட் வாரியாக விலை விபரம்!

இந்திய பிரீமியம் ஹேட்ச்பேக் கார் சந்தையில் சிறந்த தேர்வாக உள்ள மாருதி பலேனோ கார் தோற்றத்தில் புதுப்பொலிவு மற்றும் கூடுதல் சிறப்பம்சங்களுடன் மேம்படுத்தப்பட்டு அண்மையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. தோற்றத்தில் மாறுதல்கள் மட்டுமின்றி, கூடுதல் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப வசதிகளுடன் வந்துள்ள இந்த கார் வாடிக்கையாளர்களை கவரும் அனைத்து அம்சங்களையும் பெற்றுள்ளது.

இந்த புதிய பலேனோ கார் தற்போது ஐந்து முக்கிய வேரியன்ட்டுகளில் கிடைக்கிறது. கார் அறிமுகமானபோது ஆரம்ப விலை ரூ.6.10 லட்சம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மாருதி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ விலைப்பட்டியலில் பலேனோ காரின் விலை குறைவான சிக்மா வேரியண்ட்டின் விலை ரூ.5.99 லட்சமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம், புதிய பலேனோ காரின் விலை ரூ.5.99 லட்சம் முதல் ரூ.9.99 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Maruti Baleno Facelift

புதிய பலேனோ காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகள் கிடைக்கிறது. இதனுடன் சிஎன்ஜி எரிபொருள் ஆப்ஷனும் குறிப்பிட்ட வேரியண்ட்டுகளில் வழங்கப்படுகிறது. இதில் மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட பெட்ரோல் வேரியண்ட்டுகளைவிட ஏஎம்டி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வேரியண்ட்டுகளுக்கு ரூ.50,000 கூடுதல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


Variant 1.2L Petrol MT 1.2L Petrol AMT 1.2L CNG MT
Sigma Rs 5.99 lakh - -
Delta Rs 7 lakh Rs 7.50 lakh Rs 7.92 lakh
Zeta Rs 8 lakh Rs 8.50 lakh Rs 8.92 lakh
Alpha Rs 9.10 lakh Rs 9.60 lakh -
Alpha (O) Rs 9.50 lakh Rs 9.99 lakh -

புதிய 2026 பலேனோ காரில் ஆல்ஃபா ஆப்ஷன் பேக் (Alpha (O) என்ற புதிய டாப் வேரியண்ட் சேர்க்கப்பட்டு இருக்கிறது. இந்த வேரியண்ட்டில்தான் லெவல் 2 அடாஸ் மற்றும் முன்பக்க வென்டிலேட்டட் இருக்கைகள் போன்ற முக்கிய வசதிகள் இடம்பெறுகின்றன. லெவல் 2 அடாஸ் பாதுகாப்புத் தொகுப்பில் ரேடார் மற்றும் கேமரா அடிப்படையிலான பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் இடம்பெறுகின்றன. இதன் மூலம் பலேனோ காரில் இதுவரை இல்லாத அளவுக்கு மேம்பட்ட டிரைவர் அசிஸ்டன்ஸ் வசதிகள் கிடைக்கின்றன.

Also Read

ஏற்கனவே பலேனோ காரில் வழங்கப்பட்டு வந்த 4 சிலிண்டர் பெட்ரோல் எஞ்சினுக்கு பதிலாக புதிய மாடலில் மூன்று சிலிண்டர்கள் கொண்ட 1.2 லிட்டர் Z12E பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த இன்ஜின் 83எச்பி பவரையும் மற்றும் 112என்எம் டார்க் திறனையும் வழங்குகிறது. 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகள் உள்ளன.

பழைய 4 சிலிண்டர் எஞ்சினைவிட புதிய எஞ்சினின் பவர் சற்று குறைவாக இருந்தாலும், எரிபொருள் சிக்கனத்தில் புதிய எஞ்சின் சிறப்பாக இருக்கும். மேனுவல் பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 23.80 கிமீ மைலேஜையும், ஏஎம்டி மாடல் லிட்டருக்கு 24.77 கிமீ மைலேஜையும் வழங்கும் என மாருதி தெரிவித்துள்ளது.

Also Read

இதன் சிஎன்ஜி எரிபொருள் மாடல் 70எச்பி பவரையும் மற்றும் 102என்எம் டார்க்கையும் வழங்கும். இந்த மாடல் ஒரு கிலோ சிஎன்ஜி எரிபொருளுக்கு 33.61 கிமீ வரை மைலேஜ் வழங்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. முந்தைய மாடலுடன் ஒப்பிடும்போது இது சுமார் கிலோவுக்கு 3 கிமீ வரை அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Article Published On: Thursday, September 10, 2026, 14:19 [IST]
English summary
Maruti suzuki baleno 2026 variant wise price features mileage specs
மேலும்... #maruti suzuki
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out