மக்கள் தெளிவா இருக்காங்க! டொயோட்டா தலைகீழா நின்னு தண்ணி குடிச்சாலும் மாருதி நிழலை கூட தொட முடியாது!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் பிரீமியம் ஹேட்ச்பேக் ரக கார்களில் (Premium Hatchback Cars) ஒன்று மாருதி சுஸுகி பலேனோ (Maruti Suzuki Baleno). நடப்பு 2026ம் ஆண்டு மே மாதம் இந்தியாவில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட ஹேட்ச்பேக் கார் என்ற பெருமையை மாருதி சுஸுகி பலேனோ பெற்றுள்ளது.

நடப்பு 2026ம் ஆண்டு மே மாதம் இந்தியாவில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 ஹேட்ச்பேக் (Top 10 Hatchback Cars) கார்களின் பட்டியல் காடிவாடி தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது. இதில், மாருதி சுஸுகி பலேனோதான் முதல் இடம் பிடித்துள்ளது.

Maruti Suzuki Baleno

மாருதி சுஸுகி நிறுவனம் நடப்பு 2026ம் ஆண்டு மே மாதம் 18,398 பலேனோ கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. ஆனால் கடந்த 2025ம் ஆண்டு மே மாதம் வெறும் 11,618 மாருதி சுஸுகி பலேனோ கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. அதாவது இம்முறை 6,780 மாருதி சுஸுகி பலேனோ கார்கள் அதிகமாக விற்பனையாகியுள்ளன. இது 58 சதவீத வளர்ச்சியாகும்.

ஆனால் டொயோட்டா க்ளான்சா (Toyota Glanza) காருக்கு இந்த பட்டியலில் 8வது இடம் மட்டுமே கிடைத்துள்ளது. டொயோட்டா க்ளான்சாவை பற்றி நாங்கள் இங்கே பேசி கொண்டிருக்க காரணம் உள்ளது. மாருதி சுஸுகி பலேனோ மற்றும் டொயோட்டா க்ளான்சா ஆகிய இரண்டும் ஒரே கார்கள்தான்.

Toyota Glanza

மாருதி சுஸுகி நிறுவனத்தின் கூட்டணியின் அடிப்படையில், பலேனோ காரை, டொயோட்டா நிறுவனம் தனது பிராண்டில் ரீ-பேட்ஜ் செய்து, க்ளான்சா என்ற பெயரில் விற்பனை செய்து வருகிறது. டொயோட்டா நிறுவனம் நடப்பு 2026ம் ஆண்டு மே மாதம் 3,198 க்ளான்சா கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது.

ஆனால் கடந்த 2025ம் ஆண்டு மே மாதம் 4,753 டொயோட்டா க்ளான்சா கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன. அதாவது இம்முறை 1,555 டொயோட்டா க்ளான்சா கார்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 33 சதவீத வீழ்ச்சி ஆகும். நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி மாருதி சுஸுகி பலேனோ மற்றும் டொயோட்டா க்ளான்சா ஆகிய இரண்டும் ஒரே கார்கள்தான்.

எனவே 2 கார்களிலும் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி இன்ஜின் ஆப்ஷன்கள்தான் வழங்கப்படுகின்றன. அத்துடன் 2 கார்களின் சிஎன்ஜி இன்ஜின்களும் ஒன்று போலவே ஒரு கிலோவிற்கு 30.61 கிலோ மீட்டர் மைலேஜைதான் வழங்குகின்றன. ஆனால் மாருதி சுஸுகி பலேனோவை விட, டொயோட்டா க்ளான்சா விலை உயர்ந்தது ஆகும்.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி பலேனோ காரின் ஆரம்ப விலை வெறும் 5.99 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. ஆனால் டொயோட்டா க்ளான்சா காரின் ஆரம்ப விலை 6.46 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை அனைத்துமே அந்தந்த நிறுவனங்களின் அதிகாரப்பூர்வமான இணையதளங்களில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: தங்கள் காரில் டொயோட்டா பேட்ஜ் இருக்க வேண்டும் என நினைப்பவர்கள் க்ளான்சாவை தேர்வு செய்யலாம். மற்றபடி மாருதி சுஸுகி பலேனோவே இந்திய வாடிக்ககையாளர்களால் மிகச்சிறந்த ஆப்ஷனாக கருதப்படுகிறது. அதுதான் தற்போது வெளியாகியுள்ள சேல்ஸ் ரிப்போர்ட்டிலும் (Sales Report) எதிரொலித்துள்ளது.

Article Published On: Wednesday, June 17, 2026, 17:52 [IST]
English summary
Maruti suzuki baleno beats toyota glanza in may 2026 sales
மேலும்... #maruti suzuki #toyota #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out