35 கிமீ மைலேஜ்! மாருதியின் விலை குறைவான பிரீமியம் கார் வேற லெவலுக்கு மாற போகுது! நடுக்கத்தில் டாடா, ஹூண்டாய்!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மாருதி சுஸுகி பலேனோ (Maruti Suzuki Baleno). தற்போதைய நிலையில் இந்தியாவில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வரும் பிரீமியம் ஹேட்ச்பேக் (Premium Hatchback) ரக கார் என்ற பெருமையை மாருதி சுஸுகி பலேனோ கொண்டுள்ளது.
ஆனால் சுமார் 4 வருடங்களாக மாருதி சுஸுகி பலேனோ காரில் பெரிதாக எந்தவொரு அப்டேட்டும் செய்யப்படவில்லை. எனவே பலேனோ காரின் வெகுவாக அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் (Facelift) மாடலை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய மாருதி சுஸுகி நிறுவனம் முடிவு செய்துள்ளது.

அனேகமாக நடப்பு 2026ம் ஆண்டின் இரண்டாவது பாதியில் (ஜூலை - டிசம்பர்), மாருதி சுஸுகி பலேனோ ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னதாக மாருதி சுஸுகி பலேனோ ஃபேஸ்லிஃப்ட் மாடலின் சோதனை ஓட்டம் இந்திய சாலைகளில் தீவிரமாக நடைபெற தொடங்கியுள்ளது. இது குறித்து காடிவாடி தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
மாருதி சுஸுகி பலேனோ ஃபேஸ்லிஃப்ட் மாடலில் வயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜர் மற்றும் லெதரேட் இருக்கைகள் போன்ற வசதிகள் (Features) எல்லாம் புதிதாக வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் தற்போது இருப்பதை காட்டிலும் பெரிய டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன.

தற்போதைய மாடலில் 17.78 செமீ மற்றும் 22.86 செமீ அளவுகளில் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம்கள் வழங்கப்படுகின்றன என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இவை தவிர தற்போதைய மாடலில் வழங்கப்படும் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே போன்ற வசதிகள் எல்லாம், ஃபேஸ்லிஃப்ட் மாடலிலும் தொடர்ந்து வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன் தற்போதைய மாடலில் வழங்கப்படும் ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, க்ரூஸ் கண்ட்ரோல், கனெக்டட் கார் தொழில்நுட்பம், 6 ஏர்பேக்குகள், ரியர் வியூ கேமரா, ஹில் ஹோல்டு உடன் எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி ப்ரோகிராம் மற்றும் பிரேக் அஸிஸ்ட் போன்ற வசதிகள் எல்லாம், ஃபேஸ்லிஃப்ட் மாடலிலும் தொடர்ந்து வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதே நேரத்தில் டிசைனில் (Design) நிறைய மாற்றங்கள் செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி புதிய எல்இடி ஹெட்லைட்கள், புதிய எல்இடி டெயில்லைட்கள், புதிய எல்இடி பகல் நேர விளக்குகள், புதிய க்ரில் மற்றும் அகலமான ஏர் இன்டேக் உடன் புதிய முன் பக்க பம்பர் போன்ற அம்சங்களை எல்லாம் மாருதி சுஸுகி பலேனோ ஃபேஸ்லிஃப்ட் மாடலில் நாம் எதிர்பார்க்கலாம்.
தற்போது விற்பனையில் உள்ள மாருதி சுஸுகி பலேனோ காரில் 1.2 லிட்டர் K சீரிஸ் ட்யூயல் ஜெட் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. ஆனால் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் புதிய Z12E 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது விற்பனையில் உள்ள மாருதி சுஸுகி டிசையர் (Maruti Suzuki Dzire) காரில் இந்த இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படுகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
அத்துடன் மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் (Maruti Suzuki Fronx) காரில் வழங்கப்பட்டு வரும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனும், மாருதி சுஸுகி பலேனோ ஃபேஸ்லிஃப்ட் மாடலில் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அத்துடன் வழக்கம் போல சிஎன்ஜி இன்ஜின் ஆப்ஷனும் மாருதி சுஸுகி பலேனோ காரில் வழங்கப்படும். இதன் மைலேஜ் (Mileage) ஒரு கிலோவிற்கு 30-35 கிலோ மீட்டர்கள் என்ற அளவில் இருக்கலாம்.
அதே நேரத்தில் மாருதி சுஸுகி பலேனோ ஃபேஸ்லிஃப்ட் மாடலில் சிஎன்ஜி டேங்க் பாடிக்கு (Body) கீழே வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் பின் பகுதியில் அதிக லக்கேஜ்களை கொண்டு செல்ல முடியும். தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி பலேனோ காரின் ஆரம்ப விலை 5.99 லட்ச ரூபாயாக உள்ளது. ஆனால் பல்வேறு அப்டேட்கள் செய்யப்படுவதால் விலை சற்று உயர்த்தப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ஒவ்வொரு மாதமும் சராசரியாக சுமார் 15 ஆயிரம் மாருதி சுஸுகி பலேனோ கார்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ஆனால் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் வருகைக்கு பின்னர், மாருதி சுஸுகி பலேனோ காரின் விற்பனை எண்ணிக்கை வெகுவாக உயரும் என நாங்கள் கருதுகிறோம்.
இது இந்திய சந்தையில் அதன் நேரடி போட்டி மாடல்களான டொயோட்டா க்ளான்சா (Toyota Glanza), ஹூண்டாய் ஐ20 (Hyundai i20) மற்றும் டாடா அல்ட்ராஸ் (Tata Altroz) ஆகிய கார்களுக்கு எல்லாம் விற்பனையில் நெருக்கடியை ஏற்படுத்தலாம் என டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் கருதுகிறது.


Click it and Unblock the Notifications








