31 கிமீ மைலேஜ்! டாடா, டொயோட்டா கார்களை விட குறைவான விலையில் மாருதி கார்! ஏராளமான வசதிகளையும் குடுத்திருக்காங்க
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் பிரீமியம் ஹேட்ச்பேக் (Premium Hatchback) ரக கார்களில் ஒன்று மாருதி சுஸுகி பலேனோ (Maruti Suzuki Baleno). இந்த காரின் கடந்த 2025-26 நிதியாண்டிற்கான (2025 ஏப்ரல் 1 - 2026 மார்ச் 31) சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report), ரஸ்லேன் தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது.
இதன்படி பார்த்தால் கடந்த 2025-26 நிதியாண்டில் ஒட்டுமொத்தமாக 1,72,560 மாருதி சுஸுகி பலேனோ கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 2024-25 நிதியாண்டில் (2024 ஏப்ரல் 1 - 2025 மார்ச் 31) ஒட்டுமொத்தமாக வெறும் 1,67,161 மாருதி சுஸுகி பலேனோ கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன.

அதாவது 2024-25 நிதியாண்டுடன் ஒப்பிடும்போது, 2025-26 நிதியாண்டில் 5,399 மாருதி சுஸுகி பலேனோ கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 3.23 சதவீத வளர்ச்சி ஆகும். இந்த வளர்ச்சியின் மூலமாக கடந்த 2025-26 நிதியாண்டில் இந்தியாவில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 கார்களின் பட்டியலில் (Top 10 Cars Financial Year 2025-26) மாருதி சுஸுகி பலேனோ 10வது இடத்தை பிடித்துள்ளது.
இந்த பட்டியலில் முதல் 5 இடங்களில் முறையே மாருதி சுஸுகி டிசையர் (Maruti Suzuki Dzire), டாடா நெக்ஸான் (Tata Nexon), ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta), மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga) மற்றும் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift) ஆகிய கார்கள் உள்ளன.

அதற்கு அடுத்த இடங்களில் முறையே டாடா பன்ச் (Tata Punch), மாருதி சுஸுகி வேகன் ஆர் (Maruti Suzuki Wagon R), மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza) மற்றும் மஹிந்திரா ஸ்கார்பியோ (Mahindra Scorpio) ஆகிய கார்கள் இருக்கின்றன. இந்த வரிசையில் மாருதி சுஸுகி பலேனோ 10வது மற்றும் கடைசி இடத்தை பிடித்துள்ளது.
இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி பலேனோ காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 5.99 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. மாருதி சுஸுகி பலேனோ காரின் நேரடி போட்டி மாடலான ஹூண்டாய் ஐ20 காரும் சரியாக 5.99 லட்ச ரூபாய் என்ற ஆரம்ப விலையில்தான் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஆனால் மாருதி சுஸுகி பலேனோ காரின் மற்ற போட்டி மாடல்களான டாடா அல்ட்ராஸ் (Tata Altroz), டொயோட்டா க்ளான்சா (Toyota Glanza) ஆகியவற்றின் ஆரம்ப நிலை வேரியண்ட்கள் உடன் ஒப்பிடும்போது இது குறைவான விலை ஆகும். ஏனெனில் டாடா அல்ட்ராஸ் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 6.30 லட்ச ரூபாய் ஆகவும், டொயோட்டா க்ளான்சா காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 6.46 லட்ச ரூபாய் ஆகவும் உள்ளது.
அதே நேரத்தில் மாருதி சுஸுகி பலேனோ காரின் டாப் வேரியண்ட்டின் விலையும் கூட 9.10 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது. இவை அனைத்துமே அந்தந்த நிறுவனங்களின் அதிகாரப்பூர்வமான இணையதளங்களில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
மாருதி சுஸுகி பலேனோ கார் மிகவும் விலை குறைவானதாக இருந்தாலும் கூட, ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, 360 டிகிரி கேமரா, 6 ஏர்பேக்குகள், க்ரூஸ் கண்ட்ரோல், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், புஷ் பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப், சுஸுகி கனெக்ட் கனெக்டட் கார் தொழில்நுட்பம், ரியர் வியூ கேமரா, ஹில் ஹோல்டு, எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல் போன்ற வசதிகள் (Features) எல்லாம் வழங்கப்படுகின்றன.
அத்துடன் 22.86 செமீ டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே போன்ற வசதிகளையும் மாருதி சுஸுகி பலேனோ கொண்டுள்ளது. மேலும் இது சிறப்பான மைலேஜ் வழங்க கூடிய கார்களில் ஒன்றாகும். இதன் சிஎன்ஜி வேரியண்ட்கள் ஒரு கிலோவிற்கு 30.61 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்க கூடியவையாக உள்ளன. இது அராய் மைலேஜ் (ARAI Mileage) ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் மிகவும் குறைவான விலையில், அதே நேரத்தில் அதிநவீன வசதிகள் நிரம்பிய மற்றும் அதிக மைலேஜ் வழங்க கூடிய ஒரு பிரீமியம் ஹேட்ச்பேக் ரக காரை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு, மாருதி சுஸுகி பலேனோ மிகச்சிறந்த ஆப்ஷன் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.


Click it and Unblock the Notifications








