டாடா வயிற்றில் புளியை கரைக்கும் மாருதியின் புது கார்! லான்ச் ஆச்சுனா நெக்ஸான் மார்க்கெட் படுத்துரும்!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza). இது சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டை சேர்ந்தது ஆகும். இந்த காரின் அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் (Facelift) மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்ய மாருதி சுஸுகி நிறுவனம் தற்போது தயாராகி வருகிறது.
இந்திய சந்தையில் இன்னும் ஒரு சில மாதங்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், மாருதி சுஸுகி பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட் மாடல் பற்றிய பல்வேறு புதிய தகவல்கள் தற்போது நமக்கு தெரிய வந்துள்ளன. அந்த தகவல்களின் தொகுப்புதான் இந்த செய்தி.

தற்போது விற்பனையில் உள்ள மாருதி சுஸுகி பிரெஸ்ஸா காரில் லக்கேஜ்களை வைக்க கூடிய பின் பகுதியில்தான் சிஎன்ஜி டேங்க் வழங்கப்படுகிறது. இதன் காரணமாக லக்கேஜ்களை கொண்டு செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. ஆனால் மாருதி சுஸுகி பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட் மாடலில், சிஎன்ஜி டேங்க், காரின் அடிப்பகுதியில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே இனிமேல் மாருதி சுஸுகி பிரெஸ்ஸா சிஎன்ஜி மாடலின் பின் பகுதியில் நிறைய லக்கேஜ்களை கொண்டு செல்ல முடியும். மாருதி சுஸுகி பிரெஸ்ஸா காரில் தற்போதைய நிலையில் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் பெட்ரோல் + சிஎன்ஜி இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options) வழங்கப்படுகின்றன.

இந்த இன்ஜின் ஆப்ஷன்களில் எந்த மாற்றமும் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை. ஆனால் கியர் பாக்ஸ் ஆப்ஷன்களில் (Gear Box Options) மாற்றங்கள் செய்யப்படலாம் என உறுதியாக நம்பப்படுகிறது. மாருதி சுஸுகி பிரெஸ்ஸா காரில் தற்போதைய நிலையில் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.
இதில், 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷனுக்கு பதிலாக, ஃபேஸ்லிஃப்ட் மாடலில், 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது விற்பனையில் உள்ள மாருதி சுஸுகி பிரெஸ்ஸா காரில் வேரியண்ட்களை பொறுத்து 17.78 செமீ டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் 22.86 செமீ டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் ஆகியவை வழங்கப்படுகின்றன.
ஆனால் மாருதி சுஸுகி பிரெஸ்ஸா காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலில், இவற்றை காட்டிலும் அளவில் பெரிய 25.65 செமீ டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து காடிவாடி தளம் செய்தி வெளியிட்டுள்ளது. பல்வேறு அப்டேட்கள் செய்யப்படும் காரணத்தால், இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில், மாருதி சுஸுகி பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட் மாடல் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மாருதி சுஸுகி பிரெஸ்ஸா காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் வருகை, இந்திய சந்தையில், டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ, ஹூண்டாய் வெனியூ, கியா சொனெட், ரெனால்ட் கைகர், நிஸான் மேக்னைட் மற்றும் ஸ்கோடா கைலக் போன்ற கார்களுக்கு எல்லாம், விற்பனையில் மிக கடுமையான நெருக்கடிகளை ஏற்படுத்தலாம் என டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் கருதுகிறது.


Click it and Unblock the Notifications








