இந்த வருஷத்தோட மிகப்பெரிய லான்ச்! உற்பத்தியை தொடங்கியது மாருதி சுஸுகி!

இந்தியாவின் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டில் ஆதிக்கம் செலுத்தி வரும் கார்களில் ஒன்று மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza). இதன் வெகுவாக அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் (Facelift) மாடலை மாருதி சுஸுகி நிறுவனம் வரும் ஜூலை 24ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.

இதற்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் மாருதி சுஸுகி பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட் மாடலுக்கு அதிகாரப்பூர்வமாக முன்பதிவுகளை (Bookings) ஏற்கும் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன. அத்துடன் மாருதி சுஸுகி பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட் மாடலை பற்றிய பல்வேறு புதிய தகவல்களும் நமக்கு தெரிய வந்துள்ளன.

Maruti Suzuki Brezza Airbags

இதில், வேரியண்ட்களின் (Variants) பெயர் மாற்றம் மிகவும் முக்கியமானது ஆகும். அதாவது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து மாருதி சுஸுகி பிரெஸ்ஸா காரின் வேரியண்ட்கள் LXi, VXi மற்றும் ZXi போன்ற பெயர்களில்தான் அழைக்கப்பட்டன. ஆனால் மாருதி சுஸுகி பிரெஸ்ஸா காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் வேரியண்ட்களுக்கு பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது வெளியாகி வரும் தகவல்களின் அடிப்படையில் பார்த்தால் மாருதி சுஸுகி பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட் மாடல் மொத்தம் 6 வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படவுள்ளதாக தெரிகிறது. அத்துடன் அவற்றுக்கு L, L (O), V, Z, Z (O) மற்றும் Z+ என பெயர் சூட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இங்கே 'O' என்பது Optional (ஆப்ஷனல்) என்பதை குறிக்கிறது.

Maruti Suzuki Brezza

வாடிக்கையாளர்களுக்கு மிகவும் எளிமையாக புரிய வேண்டும் என்பதற்காகவே மாருதி சுஸுகி நிறுவனம் பிரெஸ்ஸா காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் வேரியண்ட்களின் பெயர்களை மாற்றியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் மாருதி சுஸுகி நிறுவனம் பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட் மாடலின் உற்பத்தி பணிகளையும் தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது.

ஹரியானா மாநிலம் கார்கோடா பகுதியில் இயங்கி வரும் மாருதி சுஸுகி நிறுவனத்தின் தொழிற்சாலையில்தான் பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட் மாடல் உற்பத்தி செய்யப்படுகிறது. பொதுவாக மாருதி சுஸுகி நிறுவனம் ஒரு காரை விற்பனைக்கு அறிமுகம் செய்தால் உடனடியாக டெலிவரி (Delivery) பணிகளையும் தொடங்கி விடும்.

எனவே மாருதி சுஸுகி பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட் மாடலை நாம் இன்னும் ஒரு சில நாட்களில் சாலையில் பார்க்க போவது உறுதி. இங்கே மற்றொரு விஷயத்தையும் நாங்கள் குறிப்பிட்டாக வேண்டும். மாருதி சுஸுகி பிரெஸ்ஸா காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் மொத்தம் 3 இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options) வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

அவை 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல், 1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் + சிஎன்ஜி ஆகும். இதில், டர்போ பெட்ரோல் மற்றும் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்ட வேரியண்ட்கள் மட்டுமே வரும் ஜூலை 24ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. சிஎன்ஜி இன்ஜின் பொருத்தப்பட்ட வேரியண்ட்கள் விற்பனைக்கு வர சற்று தாமதம் ஆகலாம் என தெரிகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: நடப்பு 2026ம் ஆண்டில் மாருதி சுஸுகி நிறுவனம் செய்ய போகும் மிக முக்கியமான அறிமுகங்களில் ஒன்றாக பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட் கருதப்படுகிறது. இதன் வருகை டாடா நெக்ஸான் (Tata Nexon), மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ (Mahindra XUV 3XO), ஸ்கோடா கைலக் (Skoda Kylaq), கியா சொனெட் (Kia Sonet), ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue) போன்ற கார்களுக்கு எல்லாம் விற்பனையில் மிக கடுமையான நெருக்கடிகளை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

Article Published On: Wednesday, July 15, 2026, 17:24 [IST]
English summary
Maruti suzuki brezza facelift production begins ahead of july 24 launch
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out