சொற்ப விலையில் விற்கப்படும் மாருதி கார்களுக்கு ஏகிறும் டிமாண்ட்! இந்த 10 கார்களுள் ஒன்றை வாங்கி போடுங்க!
மாருதி சுஸுகி, இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனம். ஒவ்வொரு மாதமும் சராசரியாக 1.5 லட்சத்தில் இருந்து 2 லட்சம் கார்களை அசால்ட்டாக விற்பனை செய்து வருகிறது. அந்த வகையில் கடந்த 2026 மே மாதத்திலும் கிட்டத்தட்ட 2 லட்சம் யூனிட் கார்களை இந்த நிறுவனம் விற்பனை செய்துள்ளதாக சமீபத்தில் நமது செய்தித்தளத்தில் பார்த்திருந்தோம்.
இந்த தொகுப்பில், கடந்த மாதத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 மாருதி சுஸுகி கார்களை பற்றி போகிறோம். மாருதி சுஸுகியில் இருந்து கடந்த மாதத்தில் ஒட்டுமொத்தமாக 1 லட்சத்து 90 ஆயிரத்து 337 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதுவே, கடந்த 2025ஆம் ஆண்டு மே மாதத்தில் 1 லட்சத்து 35 ஆயிரத்து 962 கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

மாருதி சுஸுகியில் இருந்து கடந்த மாதத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட காராக முதலிடத்தை டிசையர் பிடித்துள்ளது. மாருதி சுஸுகி நிறுவனத்தில் இருந்து மட்டுமின்றி, ஒட்டுமொத்தமாகவே இந்தியாவில் கடந்த மாதத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட காராக டிசையர் முதலிடத்தை பிடித்துள்ளது. கடந்த மாதத்தில் மொத்தம் 24 ஆயிரத்து 546 டிசையர் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
அதுவே, 2025 மே மாதத்தில் வெறும் 18 ஆயிரத்து 84 டிசையர் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில் பார்க்கும்போது, டிசையர் கார்கள் விற்பனை எண்ணிக்கை ஆனது 36% அதிகரித்துள்ளது. டிசையருக்கு அடுத்து 2வது இடத்தில் ஃபிரான்க்ஸ் 20 ஆயிரத்து 686 யூனிட்கள் விற்பனை உடன் உள்ளது.

கடந்த மாதத்தில் இத்தனை ஃபிரான்க்ஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில், 2025 மே மாதத்தில் வெறும் 13 ஆயிரத்து 584 ஃபிரான்க்ஸ் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில் பார்த்தால், ஃபிரான்க்ஸ் கார்களின் விற்பனை ஆனது 52% அதிகரித்துள்ளது. மாருதி சுஸுகி எர்டிகா இந்த வரிசையில் 3வது இடத்தை பிடித்துள்ளது.
இந்த வரிசையில் மட்டுமின்றி, கடந்த மாதத்தில் இந்திய அளவில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட முதல் மூன்று கார்கள் இந்த மாருதி சுஸுகி கார்களே ஆகும். இவற்றிற்கு அடுத்தே டாடா மோட்டார்ஸின் பன்ச் மற்றும் நெக்ஸான் கார்கள் வருகின்றன. கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட எர்டிகா கார்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்து 350 யூனிட்கள் ஆகும்.
ஆனால், 2025 மே மாதத்தில் 16 ஆயிரத்து 140 எர்டிகா கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில், எர்டிகா கார்களின் விற்பனை 26% அதிகரித்துள்ளது. இதற்கடுத்து இந்த வரிசையில் 4வது மற்றும் 5வது இடங்களில் உள்ள மாருதி சுஸுகி கார்களாவன, பலேனோ மற்றும் வேகன்ஆர் ஆகும்.
| Model | May 2026 Sales | May 2025 Sales | Difference |
| Maruti Dzire | 24,546 | 18,084 | 36% |
| Maruti Fronx | 20,686 | 13,584 | 52% |
| Maruti Ertiga | 20,350 | 16,140 | 26% |
| Maruti Baleno | 18,396 | 11,618 | 58% |
| Maruti Wagon R | 18,076 | 13,949 | 30% |
| Maruti Swift | 17,519 | 14,135 | 24% |
| Maruti Vitara Brezza | 13,425 | 15,566 | -14% |
| Maruti Eeco | 13,240 | 12,327 | 7% |
| Maruti Victoris | 10,853 | 0 | – |
| Maruti Alto | 9,887 | 4,970 | 99% |
| Maruti Grand Vitara | 9,366 | 5,197 | 80% |
| Maruti S-Presso | 6,388 | 1,806 | 254% |
| Maruti XL6 | 3,770 | 3,507 | 7% |
| Maruti Celerio | 3,018 | 1,861 | 62% |
| Maruti Jimny | 516 | 682 | -24% |
| Maruti Invicto | 301 | 223 | 35% |
| Maruti Ignis | – | 1,855 | – |
| Maruti Ciaz | 458 | – | – |
| Total | 1,90,337 | 1,35,962 | 40% |
இவை இரண்டும் கடந்த மாதத்தில் முறையே 18,396 மற்றும் 18,076 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 6வது மற்றும் 7வது இடங்களில் உள்ள மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் மற்றும் பிரெஸ்ஸா கார்கள் முறையே 17,519 மற்றும் 13,425 யூனிட்கள் கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இவற்றிற்கு அடுத்து இந்த டாப்-10 லிஸ்ட்டில் கடைசி மூன்று இடங்களில் ஈக்கோ (13,240), விக்டோரிஸ் (10,853) மற்றும் ஆல்டோ (9,887) கார்கள் உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார்கள் விற்பனை ஆனது மாதத்திற்கு மாதம் வெகுவாக அதிகரித்து வருகிறது என்பதற்கு கடந்த 2026 மே மாத புள்ளி விபரங்களே சாட்சியாகும். குறிப்பாக, கடந்த மாதத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட கார்களில் முதல் மூன்று இடங்களில் மாருதி சுஸுகி கார்கள் இருப்பது இந்திய கார் மார்க்கெட்டில் அதன் ஆதிக்கத்தை காட்டுகிறது.


Click it and Unblock the Notifications