மாருதி கார்களை வாங்க ஒவ்வொரு மாதமும் லட்ச கணக்கான கஸ்டமர்ஸ்! அடிமாட்டு விலையில் கார் விற்பதால் கிடைக்கும் பலன்

இந்தியாவின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி இந்தியா லிமிடெட் (Maruti Suzuki India Limited), கடந்த 2026 ஜனவரி மாதத்தில் இந்திய கார்கள் சந்தையில் 38.6% சந்தைப் பங்கைத் தக்கவைத்துக்கொண்டு, குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அதாவது, வழக்கம்போல் கடந்த ஜனவரி மாதத்திலும், விற்பனை செய்யப்பட்ட ஒவ்வொரு 3 கார்களிலும் ஒரு மாருதி சுஸுகி கார் நிச்சயமாக இருந்துள்ளது.

எஸ்யூவி (SUV) மற்றும் எம்பிவி (MPV) கார்களுக்கான வலுவான தேவை இதற்கு முக்கிய காரணம் ஆகும். எனினும், சிறிய ரக கார்களின் விற்பனை (Car Sales) தொடர்ந்து சரிந்து வருகிறது. கடந்த ஜனவரியில் மொத்தமாக 1,74,529 கார்களை மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இது 2025 ஜனவரியில் விற்பனையான 1,73,599 மாருதி சுஸுகி கார்களை விட 1% அதிகம் ஆகும்.

maruti suzuki cars-wise sales report

இருப்பினும், 2025 டிசம்பரில் விற்பனையான 1,78,646 மாருதி சுஸுகி கார்களுடன் ஒப்பிடுகையில், இந்த நிறுவனத்தின் மாதாந்திர விற்பனையில் 2% சரிவு காணப்படுகிறது. மாருதி டிசையர் (Dzire) கடந்த மாதத்தில் நிறுவனத்தின் அதிகம் விற்பனையான கார் மாடலாகத் திகழ்ந்துள்ளது. மேலும், இந்தியாவில் டாடா நெக்ஸானுக்கு அடுத்து இரண்டாவது அதிகம் விற்பனையான காராகவும் டிசையர் இடம்பிடித்துள்ளது.

டிசையர் விற்பனை கடந்த மாதத்தில் 19,629 யூனிட்களாக உயர்ந்து, கடந்த ஆண்டு இதே ஜனவரி மாதத்தை (15,383 யூனிட்கள்) விட 28% வளர்ச்சியைப் பெற்றுள்ளது. அதேபோல், 2025 டிசம்பர் மாதத்தில் விற்பனையான 19,072 யூனிட்களுடன் ஒப்பிடுகையிலும், டிசையர் விற்பனையில் நேர்மறையான வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இதற்கடுத்து 2வது இடத்தில் உள்ள மாருதி சுஸுகி எர்டிகா (Ertiga)-வும் 17,892 யூனிட்கள் விற்பனையுடன் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டுள்ளது.

maruti suzuki cars-wise sales report

இது 2025 ஜனவரியை விட 26% மற்றும் 2025 டிசம்பரை விட 8% அதிகரிப்பு ஆகும். இதற்கடுத்து, ஸ்விஃப்ட் (Swift) ஹேட்ச்பேக் 17,806 யூனிட்கள் விற்பனையாகி, 2025 ஜனவரியை விட 4% வளர்ச்சியைக் கண்டுள்ளது. எனினும், 2025 டிசம்பர் உடன் ஒப்பிடுகையில் 5% சரிவு ஏற்பட்டுள்ளது. மாருதி பிரெஸ்ஸா (Brezza) 17,486 யூனிட்கள் விற்பனை உடன் 2025 ஜனவரியை விட விற்பனையில் 19% உயர்வைக் கண்டாலும், இதன் விற்பனை கடந்த ஆண்டு டிசம்பரை விட 1% குறைந்துள்ளது.

பிரெஸ்ஸா, நாட்டில் நான்காவது அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி கார் ஆகவும் இடம்பிடித்துள்ளது. மாருதி சுஸுகி பலேனோ (Baleno), 2025 டிசம்பரில் நிறுவனத்தின் அதிகம் விற்பனையான மாடலாக இருந்த நிலையில், கடந்த ஜனவரியில் 16,782 யூனிட்டுகள் விற்பனை உடன் 5-வது இடத்திற்கு சரிந்துள்ளது. இதன் விற்பனை 2025 ஜனவரியை விட 16% மற்றும் 2025 டிசம்பரை விட 24% குறைந்துள்ளது.

maruti suzuki cars-wise sales report

மாருதி சுஸுகியின் புதிய விக்டோரிஸ் (Victoris) மாடல், இந்திய சந்தையில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. கடந்த 2025 டிசம்பரில் 6,210 யூனிட்கள் விற்பனையான நிலையில், கடந்த ஜனவரியில் 15,240 யூனிட்கள் விற்பனையாகி, சுமார் 145% வளர்ச்சியை பெற்று அசத்தியுள்ளது. இதற்கடுத்து, வேகன்ஆர் (WagonR) 15,118 யூனிட்கள் விற்கப்பட்டுள்ளது.

இது 2025 ஜனவரியை விட 37% சரிவு என்றாலும், 2025 டிசம்பரை விட விற்பனை 4% அதிகரித்துள்ளது. ஃபிரான்ஸ் (Fronx) விற்பனை 13,353 யூனிட்களாகக் குறைந்துள்ள நிலையில், ஆல்டோ (Alto) மற்றும் ஈக்கோ (Eeco) வேன் முறையே 12,314 மற்றும் 11,914 யூனிட்கள் விற்பனையுடன் நேர்மறையான கவனத்தைப் பெற்றுள்ளன.

Maruti Jan-26 Jan-25 Diff
Dzire 19,629 15,383 4,246
Ertiga 17,892 14,248 3,644
Swift 17,806 17,081 725
Brezza 17,486 14,747 2,739
Baleno 16,782 19,965 -3,183
Victoris 15,240 0 15,240
Wagon R 15,118 24,078 -8,960
Fronx 13,353 15,192 -1,839
Alto 12,314 11,352 962
Eeco 11,914 11,250 664
G Vitara 7,030 15,784 -8,754
XL6 3,820 4,403 -583
S Presso 1,954 2,895 -941
Ignis 1,902 3,780 -1,878
Celerio 1,501 1,954 -453
Jimny 591 163 428
Invicto 197 556 -359
Ciaz 0 768 -768
Total 1,74,529 1,73,599 930

மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா (Grand Vitara) விற்பனை 2025 ஜனவரியை விட 55% மற்றும் 2025 டிசம்பரை விட 18% குறைந்து 7,030 யூனிட்கள் விற்பனையை கடந்த மாதத்தில் எட்டியுள்ளது. இந்தப் பட்டியலில் 12-வது இடத்தில் எக்ஸ்எல்6 (XL6) 3,820 யூனிட்கள் விற்பனையுடன் உள்ளது. இதன் விற்பனை 2025 ஜனவரியை விட 13% குறைந்தாலும், 2025 டிசம்பரை விட 39% அதிகரித்துள்ளது.

கடந்த 2026 ஜனவரி மாதத்தில் எஸ்-பிரஸ்ஸோ (S-Presso) விற்பனை 1,954 யூனிட்களாகவும், இக்னிஸ் (Ignis) விற்பனை 50% சரிந்து 1,902 யூனிட்களாகவும் பதிவாகி உள்ளது. இக்னிஸின் விற்பனை 2025 டிசம்பர் உடன் ஒப்பிடுகையில் பெரியதாக மாற்றமில்லை. செலிரியோ (Celerio) காரின் விற்பனை கடந்த மாதத்தில் 1,501 யூனிட்களுடன் சரிவைக் கண்டுள்ளது.

Maruti Jan-26 Dec-25 Diff
Dzire 19,629 19,072 557
Ertiga 17,892 16,586 1,306
Swift 17,806 18,767 -961
Brezza 17,486 17,704 -218
Baleno 16,782 22,108 -5,326
Victoris 15,240 6,210 9,030
Wagon R 15,118 14,575 543
Fronx 13,353 20,706 -7,353
Alto 12,314 10,829 1,485
Eeco 11,914 11,899 15
G Vitara 7,030 8,597 -1,567
XL6 3,820 2,744 1,076
S Presso 1,954 3,396 -1,442
Ignis 1,902 1,910 -8
Celerio 1,501 2,272 -771
Jimny 591 757 -166
Invicto 197 514 -317
Ciaz 0 0 0
Total 1,74,529 1,78,646 -4,117

Tables Source: Autopunditz

மாருதி சுஸுகி ஜிம்னி (Jimny) உலக அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றாலும், உள்நாட்டு விற்பனை மந்தமாகவே இருந்து வந்தது. ஆனால், கடந்த 2026 ஜனவரியில் 591 யூனிட்கள் விற்பனையாகி, நேர்மறையான திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது. 2025 ஜனவரியில் விற்பனையான 163 யூனிட்களுடன் ஒப்பிடுகையில் இது 263% அதிகரிப்பு ஆகும்.

மாருதியின் மிகவும் விலையுயர்ந்த கார் மாடலான இன்விக்டோ (Invicto)-இன் தேவை வெகுவாகக் குறைந்து, கடந்த மாதம் வெறும் 197 யூனிட்கள் மட்டுமே விற்பனையாகி உள்ளது. அதுவே, 2025 ஜனவரி மாதத்தில் 556 யூனிட்களும், 2025 டிசம்பரில் 514 யூனிட்களும் விற்பனையாகி இருந்தன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏற்கனவே கூறியதுபோல், மாருதி சுஸுகியின் எஸ்யூவி மற்றும் எம்பிவி கார்களுக்கான தேவை தொடர்ந்து கணிசமாக அதிகரித்துவரும் நிலையில், விலை குறைவான பட்ஜெட் விலையிலான, சிறிய அளவிலான கார்களுக்கான தேவை மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. இதில் இருந்து இந்திய வாடிக்கையாளர்களின் தேவை மெல்ல மெல்ல பிரீமியம் தரத்திலான கார்களுக்கு மாறி வருவதை அறிய முடிகிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, February 11, 2026, 18:54 [IST]
English summary
Maruti suzuki cars wise sales report of january 2026 dzire ertiga swift check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X