மாருதி தலகீழா நின்னு தண்ணி குடிச்சாலும் இந்த கார் விக்காது! 35 கிமீ மைலேஜ் குடுத்தும் பிரயோஜனம் இல்ல
இந்திய சந்தையில் மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனத்தின் ஒரு சில கார்களின் விற்பனை மிகவும் மந்தமாக இருந்து வருகிறது. இதில், மாருதி சுஸுகி செலிரியோ (Maruti Suzuki Celerio) மிகவும் முக்கியமான ஒன்றாகும். இத்தனைக்கும் இதுதான் இந்தியாவிலேயே அதிக மைலேஜ் வழங்க கூடிய கார் (India's Most Fuel Efficient Car) என மாருதி சுஸுகி நிறுவனம் கூறுகிறது.
மாருதி சுஸுகி செலிரியோ காரின் LXi MT வேரியண்ட் ஒரு லிட்டருக்கு 25.24 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குகிறது. VXi MT, ZXi MT மற்றும் ZXi+ MT வேரியண்ட்கள் ஒரு லிட்டருக்கு 24.97 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்க கூடியவையாக உள்ளன. இந்த வரிசையில் VXi AGS, ZXi AGS மற்றும் ZXi+ AGS வேரியண்ட்கள் ஒரு கிலோவிற்கு 26 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குகின்றன.

இவை அனைத்துமே பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்ட வேரியண்ட்கள் ஆகும். மாருதி சுஸுகி செலிரியோ காரின் சிஎன்ஜி இன்ஜின் பொருத்தப்பட்ட VXi MT வேரியண்ட் ஒரு கிலோவிற்கு 34.43 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்க கூடியதாக இருக்கிறது. இவை அனைத்தும் மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள அராய் மைலேஜ் (ARAI Mileage) ஆகும்.
மாருதி சுஸுகி செலிரியோ அதிக மைலேஜ் வழங்க கூடிய கார் என்பதுடன், ஏராளமான வசதிகளையும் (Features) கொண்டுள்ளது. ஸ்மார்ட் கீ உடன் இன்ஜின் புஷ் பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப், 17.78 செமீ டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ போன்றவை எல்லாம் இந்த காரின் மிகவும் முக்கியமான வசதிகள் ஆகும்.

அத்துடன் அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி ப்ரோகிராம், ஏபிஎஸ் மற்றும் ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் போன்ற பாதுகாப்பு வசதிகளையும் (Safety Features) மாருதி சுஸுகி செலிரியோ கார் கொண்டுள்ளது. இருப்பினும் இந்த காரின் விலை மிகவும் குறைவுதான்.
மாருதி சுஸுகி செலிரியோ காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 4.70 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலையும் கூட வெறும் 6.73 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது. இவை அனைத்துமே மாருதி சுஸுகியின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.
சிறப்பான மைலேஜ், போதுமான வசதிகள் மற்றும் குறைவான விலை என ஏகப்பட்ட ப்ளஸ் பாயிண்ட்கள் இருந்தாலும் கூட, இந்தியாவில் பெரும்பாலான மாதங்களில், மாருதி சுஸுகி செலிரியோ காரின் விற்பனை மிகவும் மந்தமாகவே இருந்து வருகிறது. இதற்கு நடப்பு 2026ம் ஆண்டு மார்ச் மாதமும் விதிவிலக்கு அல்ல.
மாருதி சுஸுகி செலிரியோ காரின் நடப்பு 2026ம் ஆண்டு மார்ச் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report), ரஸ்லேன் தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி பார்த்தால் நடப்பு 2026ம் ஆண்டு மார்ச் மாதம் வெறும் 1,353 மாருதி சுஸுகி செலிரியோ கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன.
ஆனால் கடந்த 2025ம் ஆண்டு மார்ச் மாதம் 2,268 மாருதி சுஸுகி செலிரியோ கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன. அதாவது இம்முறை 915 மாருதி சுஸுகி செலிரியோ கார்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் காரணமாக மாருதி சுஸுகி செலிரியோ காரின் விற்பனை 40.34 சதவீதம் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்தியாவில் தற்போது மிகவும் விலை குறைவான ஆரம்ப நிலை ஹேட்ச்பேக் ரக கார்களை வாடிக்கையாளர்கள் பெரிதாக விரும்புவதில்லை. மாருதி சுஸுகி செலிரியோ காரின் வீழ்ச்சிக்கு இது மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. மாருதி சுஸுகி செலிரியோ கார் வரும் காலங்களில் மிகப்பெரிய விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்யுமா? என்பது மிகப்பெரிய சந்தேகம்தான்.


Click it and Unblock the Notifications