இந்த கார்லாம் விக்கவே விக்காதுனு நெனச்சாங்க! ஆனா தளபதி சிஎம் ஆன மாதிரி திடீர்னு டாப்புக்கு போயிருச்சு!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மாருதி சுஸுகி செலிரியோ (Maruti Suzuki Celerio). மாருதி சுஸுகி நிறுவனத்தின் தயாரிப்பாக இருந்தாலும் கூட, இதன் விற்பனை எண்ணிக்கை மிகவும் மோசமாக இருந்து வருகிறது. ஆனால் நடப்பு 2026ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மாருதி சுஸுகி செலிரியோ காரின் விற்பனை எண்ணிக்கை வெகுவாக உயர்ந்துள்ளது.
மாருதி சுஸுகி செலிரியோ காரின் நடப்பு 2026ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report), ICN தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி பார்த்தால் நடப்பு 2026ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2,296 மாருதி சுஸுகி செலிரியோ கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ன. இது கடந்த 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும்போது 56 சதவீத வளர்ச்சி ஆகும்.

மாருதி சுஸுகி செலிரியோ இந்திய சந்தையில் கிடைக்கும் மிகவும் விலை குறைவான கார்களில் ஒன்றாகும். இதன் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 4.70 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலையும் கூட 6.73 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது.
இவை அனைத்தும் மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். இது விலை குறைவானது என்பதுடன், அதிக மைலேஜ் வழங்க கூடிய கார்களில் ஒன்றாகவும் இருக்கிறது. மாருதி சுஸுகி செலிரியோ காரின் சிஎன்ஜி வேரியண்ட்கள் ஒரு கிலோவிற்கு 34.43 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்க கூடியவையாக உள்ளன.

இது மாருதி சுஸுகி நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படும் அராய் மைலேஜ் (ARAI Mileage) ஆகும். சிறப்பான மைலேஜ் உடன் ஏராளமான அதிநவீன வசதிகளையும், மாருதி சுஸுகி செலிரியோ கார் கொண்டுள்ளது. மாருதி சுஸுகி செலிரியோ காரில் பாதுகாப்பிற்காக அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகள் வழங்கப்படுகின்றன.
அத்துடன் ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகள் தவிர இந்த செக்மெண்ட்டிவேயே முதல் முறையாக ஹில் ஹோல்டு அஸிஸ்ட், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், ஏபிஎஸ் மற்றும் எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல் போன்ற பல்வேறு பாதுகாப்பு வசதிகளும் (Features), மாருதி சுஸுகி செலிரியோ காரில் வழங்கப்படுகின்றன.
மேலும் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே சப்போர்ட் உடன் கூடிய டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ரிமோட் கீலெஸ் எண்ட்ரி மற்றும் இன்ஜின் புஷ் பட்டன் ஸ்டார்ட் ஸ்டாப் போன்ற வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் பல்வேறு வசதிகளையும், மாருதி சுஸுகி செலிரியோ காரில் வழங்கி வருகிறது.
மாருதி சுஸுகி செலிரியோ கார் முதலில் குளோபல் என்சிஏபி அமைப்பின் மோதல் சோதனைகளில் பெரியலர்களுக்கான பாதுகாப்பில் 2 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை மட்டுமே பெற்றிருந்தது. அது 2 ஏர்பேக்குகளை மட்டுமே கொண்ட வெர்ஷன் ஆகும். ஆனால் மாருதி சுஸுகி நிறுவனம் அதன்பின் செலிரியோ காரின் அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகளை வழங்க தொடங்கியது.
இதன் காரணமாக அதே குளோபல் என்சிஏபி அமைப்பின் மோதல் சோதனையில் பெரியவர்களுக்கான பாதுகாப்பில் மாருதி சுஸுகி செலிரியோ கார் 3 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றது. மாருதி சுஸுகி செலிரியோ காரின் விற்பனை எண்ணிக்கை உயர்ந்திருப்பதற்கு இது ஒரு காரணமாக இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் டாடா டியாகோ (Tata Tiago) மற்றும் சிட்ரோன் சி3 (Citroen C3) போன்ற கார்களுக்கு எல்லாம், மாருதி சுஸுகி செலிரியோ மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக திகழ்கிறது என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து ஆகும்.


Click it and Unblock the Notifications