35 கிமீ மைலேஜ்! அடிமாட்டு விலையில் விற்கப்படும் மாருதி கார்! டாடா, ஹூண்டாயை கதற விட்டுகிட்டு இருக்கு!

பொதுவாக வருட இறுதியில் கார்களின் விற்பனை அதிகமாக இருக்கும். இதன் காரணமாக கடந்த 2025ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏராளமான கார்கள் விற்பனையில் சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்துள்ளன. இதில், மாருதி சுஸுகி செலிரியோ (Maruti Suzuki Celerio) காரும் ஒன்றாகும்.

மாருதி சுஸுகி செலிரியோ காரின் சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report), ரஸ்லேன் தளத்தில் வெளியாகியுள்ளது. இதன்படி பார்த்தால் கடந்த 2025ம் ஆண்டு டிசம்பர் மாதம் 2,272 மாருதி சுஸுகி செலிரியோ கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெறும் 748 மாருதி சுஸுகி செலிரியோ கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன.

Maruti Suzuki Celerio Interior

அதாவது கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது, கடந்த 2025ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 1,524 மாருதி சுஸுகி செலிரியோ கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் மாருதி சுஸுகி செலிரியோ கார் விற்பனையில் 203.74 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது.

வருடாந்திர ரீதியிலான ஒப்பீட்டை போலவே, மாதாந்திர ரீதியிலான ஒப்பீட்டிலும் கூட, மாருதி சுஸுகி செலிரியோ கார் விற்பனையில் வளர்ச்சியைதான் பதிவு செய்திருக்கிறது. அதாவது கடந்த 2025ம் ஆண்டு நவம்பர் மாதம் 1,392 மாருதி சுஸுகி செலிரியோ கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன.

Maruti Suzuki Celerio

ஆனால் அதன் பின் வந்த டிசம்பர் மாதம், நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி 2,272 மாருதி சுஸுகி செலிரியோ கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த வகையில் பார்த்தால் 880 மாருதி சுஸுகி செலிரியோ கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் மாருதி சுஸுகி செலிரியோ கார் விற்பனையில் 63.22 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது.

வருட இறுதி என்பதால் மட்டும் இந்த பிரம்மாண்டமான வளர்ச்சி சாத்தியமாகி இருக்காது. கூடவே விலை குறைவான அதே நேரத்தில் அதிக மைலேஜ் வழங்க கூடிய கார்களில் ஒன்றாகவும் மாருதி சுஸுகி செலிரியோ இருப்பதால்தான் இந்த வளர்ச்சி சாத்தியமாகி இருக்கும் என கருதப்படுகிறது.

மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதள தகவலின்படி, தற்போதைய நிலையில் செலிரியோ காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் (LXi மேனுவல்) விலை வெறும் 4.70 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. மறுபக்கம் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் (ZXi+ ஆட்டோமேட்டிக்) விலை 6.73 லட்ச ரூபாயாக இருக்கிறது.

விலை குறைவானதாக இருந்தாலும் கூட, இது இந்தியாவிலேயே அதிக மைலேஜ் வழங்க கூடிய கார்களில் ஒன்றாகும். மாருதி சுஸுகி செலிரியோ காரின் பெட்ரோல் வேரியண்ட்களே ஒரு லிட்டருக்கு சுமார் 26 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்க கூடியவையாக உள்ளன. அப்படியானால் சிஎன்ஜி வேரியண்ட்களை பற்றி சொல்லவா வேண்டும்!

மாருதி சுஸுகி செலிரியோ காரின் சிஎன்ஜி வேரியண்ட்கள் ஒரு கிலோவிற்கு 34.43 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குகின்றன. இவை மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அராய் மைலேஜ் (ARAI Mileage) ஆகும். எனவே குறைவான விலையில் அதிக மைலேஜ் வழங்க கூடிய ஒரு காரை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு மாருதி சுஸுகி செலிரியோ நல்ல ஆப்ஷன் ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் (Hyundai Grand i10 Nios) மற்றும் டாடா பன்ச் (Tata Punch) ஆகிய கார்களுக்கு எல்லாம் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக மாருதி சுஸுகி செலிரியோ கருதப்படுகிறது. மாருதி சுஸுகி செலிரியோ காரின் அனைத்து வேரியண்ட்களிலும் பாதுகாப்பிற்கு ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகள் வழங்கப்படுகின்றன என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Wednesday, January 21, 2026, 12:32 [IST]
English summary
Maruti suzuki celerio sales report december 2025 203 74 per cent growth
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+