இப்படியே போனா பெட்ரோல் பங்க்கை எல்லாம் இழுத்து மூட வேண்டியதுதான்! விலை உயர்வால் மக்கள் அதிரடி முடிவு!

அமெரிக்கா (US) மற்றும் இஸ்ரேல் (Israel) ஆகிய நாடுகள் இணைந்து, ஈரான் (Iran) மீது போர் தொடுத்த காரணத்தால், உலகின் பல்வேறு நாடுகளிலும் பெட்ரோல் (Petrol), டீசல் (Diesel) விலை (Price) மிக கடுமையாக உயர்ந்து வருகிறது. இதற்கு இந்தியாவும் விதிவிலக்கு அல்ல.

இந்தியாவில் கடந்த ஒரு சில வாரங்களாக பெட்ரோல் மற்றும் டீசலின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. சென்னையில் கடந்த மே 14ம் தேதியன்று ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை வெறும் 100.80 ரூபாய் மட்டுமே. ஆனால் அது இன்று (ஜூன் 3) 107.77 ரூபாயாக உயர்ந்துள்ளது. இது 6.97 ரூபாய் உயர்வு ஆகும்.

Petrol Bunk

மறுபக்கம் அதே சென்னையில் கடந்த மே 14ம் தேதியன்று ஒரு லிட்டர் டீசலின் விலை வெறும் 92.39 ரூபாயாக மட்டுமே இருந்தது. ஆனால் அது இன்று 99.58 ரூபாயாக உயர்ந்துள்ளது. இது 7.19 ரூபாய் உயர்வு ஆகும். இந்த மிக கடுமையான விலை உயர்வு காரணமாக மக்கள் சிஎன்ஜி கார்களை (CNG Cars) நோக்கி நகர தொடங்கியுள்ளனர்.

சிஎன்ஜி கார்கள் அதிக மைலேஜ் (Mileage) வழங்கும் என்பதே இதற்கு மிக முக்கியமான காரணம் ஆகும். உதாரணத்திற்கு மாருதி சுஸுகி ஆல்டோ கே 10 (Maruti Suzuki Alto K10) காரின் பெட்ரோல்/மேனுவல் கியர் பாக்ஸ் மாடல் ஒரு லிட்டருக்கு வெறும் 24.39 கிலோ மீட்டர் மைலேஜ் மட்டுமே வழங்க கூடியதாக உள்ளது.

Maruti Suzuki Alto K10

ஆனால் அதே மாருதி சுஸுகி ஆல்டோ கே 10 காரின் சிஎன்ஜி/மேனுவல் கியர் பாக்ஸ் மாடல் ஒரு லிட்டருக்கு 33.40 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும். இவை அனைத்துமே மாருதி சுஸுகி நிறுவனம் தயாரிப்பில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படும் அராய் (ARAI - Automotive Research Association Of India) அமைப்பு சான்று வழங்கிய மைலேஜ் ஆகும்.

அத்துடன் பெட்ரோல் மற்றும் டீசல் உடன் ஒப்பிடும்போது, சிஎன்ஜியின் விலையும் (CNG Price) குறைவு. சென்னையில் இன்றைய நிலவரப்படி ஒரு கிலோ சிஎன்ஜியின் விலை வெறும் 96 ரூபாயாக மட்டுமே உள்ளது. இந்த 2 காரணங்களால்தான் இந்தியாவில் தற்போது மக்கள் சிஎன்ஜி கார்களுக்கு மாற தொடங்கியுள்ளனர்.

குறிப்பாக மாருதி சுஸுகி நிறுவனத்தின் சிஎன்ஜி கார்கள்தான் மக்களின் முதல் சாய்ஸ் ஆக உள்ளன. இதன் காரணமாக மாருதி சுஸுகி சிஎன்ஜி கார்களின் விற்பனை கிடுகிடுவென உயர தொடங்கியுள்ளது. கடந்த மே மாதம் மட்டும் மாருதி சுஸுகி நிறுவனம் 78 ஆயிரம் சிஎன்ஜி கார்களை விற்பனை செய்துள்ளது. இது 40 சதவீத வளர்ச்சி ஆகும்.

அதாவது மாருதி சுஸுகி சிஎன்ஜி கார்களின் விற்பனை கிட்டத்தட்ட அப்படியே இரட்டிப்பாகியுள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வுதான் இதற்கு மிகவும் முக்கியமான காரணம் ஆகும். இது குறித்து மாருதி சுஸுகி நிறுவனத்தின் சேல்ஸ் மற்றும் மார்க்கெட்டிங் பிரிவின் சீனியர் எக்ஸிக்யூட்டிவ் ஆஃபீஸர் பார்த்தோ பானர்ஜி கூறியது பின்வருமாறு:

பெட்ரோல், டீசலை சேமிக்க வேண்டும் என்று கடந்த மே மாதம் 11ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார். அதற்கு பிறகு சிஎன்ஜி கார்களுக்கான 'டிமாண்ட்' உயர தொடங்கியுள்ளது. பெட்ரோல் வாகனங்களுடன் ஒப்பிடும்போது சிஎன்ஜி வாகனங்களின் 'ஓனர்ஷிப் காஸ்ட்' (Ownership Cost) மிகவும் குறைவு. இவ்வாறு அவர் கூறினார். இது குறித்து ஈடி ஆட்டோ தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: பெட்ரோல், டீசல் விலை உயர்வால், சிஎன்ஜி கார்களின் விற்பனை மட்டுமல்லாது, எலெக்ட்ரிக் கார்களின் (Electric Cars) விற்பனையும் உயர தொடங்கியுள்ளது. எனவே இனி இந்திய சாலைகளில் சிஎன்ஜி மற்றும் எலெக்ட்ரிக் கார்களை நாம் அதிக அளவில் பார்க்க போகிறோம் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.

Article Published On: Wednesday, June 3, 2026, 17:29 [IST]
English summary
Maruti suzuki cng cars sales report may 2026 40 per cent growth petrol diesel price hike
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out