தந்திராஸ் பண்டிகையில் ஒரே நாளில் 30,000 கார்களை விற்று அசத்திய மாருதி!

இந்தியாவில் பண்டிகைக் காலத்தின்போது வழக்கம்போல் கார் விற்பனை சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, தந்திராஸ் பண்டிகையை முன்னிட்டு புதிய கார் வாங்குவதற்கு ஏராளமான வாடிக்கையாளர்கள் ஆர்வம் காட்டினர். இதன் காரணமாக, இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி விற்பனையில் புதிய சாதனையைப் படைத்துள்ளது.

இந்த ஆண்டு தந்திராஸ் பண்டிகையன்று மட்டும் நாடு முழுவதும் சுமார் 30,000 கார்களை மாருதி நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்துள்ளது. மேலும், விநாயகர் சதுர்த்தி முதல் தந்திராஸ் பண்டிகை வரையிலான காலகட்டத்தில் நிறுவனத்தின் ஒட்டுமொத்த சில்லறை விற்பனையும் கடந்த ஆண்டைக் காட்டிலும் 17 சதவீதம் அதிகரித்துள்ளது. இது நிறுவனத்திற்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Maruti Wagon R

பண்டிகை கால விற்பனை

கடந்த செப்டம்பர் 14ந் தேதி கொண்டாடப்பட்ட விநாயகர் சதுர்த்தி முதல் நவம்பர் 6ந் தேதி வரையிலான காலகட்டத்தில் மாருதி சுஸுகி நிறுவனம் நான்கு லட்சத்திற்கும் அதிகமான கார்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 3.46 லட்சம் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. இதன் மூலம் 17 சதவீத வளர்ச்சியை நிறுவனம் பதிவு செய்துள்ளது.

தந்திராஸ் பண்டிகையன்று கடந்த ஆண்டு இரண்டு நாட்கள் வாடிக்கையாளர்களுக்கு கார் டெலிவரி வழங்கப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு ஒரே நாளில் 30,000 கார்களை டெலிவரி செய்துள்ளது மாருதி. எனவே, கடந்த ஆண்டுடன் நேரடியாக ஒப்பிடும்போது சில வேறுபாடுகள் இருப்பதாக நிறுவனத்தின் விற்பனை பிரிவு மூத்த அதிகாரி பார்த்தோ பானர்ஜி தெரிவித்துள்ளார்.

Also Read

70,000 கார்கள் இலக்கு

தந்திராஸ் மட்டுமின்றி தீபாவளியைத் தொடர்ந்து வரும் பண்டிகை நாட்களிலும் கார் வாங்குவோரின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என மாருதி எதிர்பார்க்கிறது. இதன்படி, தந்திராஸ் முதல் லாப் பஞ்சமி வரையிலான காலகட்டத்தில் 70,000க்கும் அதிகமான கார்களை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ளது. கடந்த ஆண்டைவிட இது குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பதிவு என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விற்பனை இலக்கை எட்டுவதன் மூலம் பண்டிகைக் காலத்தில் 14 முதல் 15 சதவீத வளர்ச்சியை மாருதி நிறுவனம் எதிர்பார்க்கிறது. நவம்பர் 14ம் தேதி லாப் பஞ்சமியுடன் இந்த பண்டிகைக் கால விற்பனை நிறைவடைகிறது. அதுவரை வாடிக்கையாளர்களுக்கு விரைவாக கார்களை வழங்குவதில் நிறுவனம் தீவிர கவனம் செலுத்தி வருகிறது.

Also Read

பிரெஸ்ஸா, பலேனோ கார்களுக்கு வரவேற்பு

மாருதி சுஸுகியின் விற்பனை வளர்ச்சியில் பிரெஸ்ஸா மற்றும் பலேனோ கார்களுக்கு முக்கிய பங்கு உள்ளது. சமீபத்தில் புதுப்பிக்கப்பட்ட இந்த இரண்டு மாடல்களுக்கும் வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக, இரண்டு மாதங்களில் பலேனோ கார் விற்பனை 50,000 யூனிட்டுகளையும், பிரெஸ்ஸா விற்பனை 70,000 யூனிட்டுகளையும் கடந்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுதவிர, நிறுவனத்தின் எஸ்யூவி பிரிவிலும் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சமீபத்தில் அறிமுகமான விக்டோரிஸ் கார் மாதந்தோறும் 16,000 முதல் 17,000 யூனிட்டுகள் வரை விற்பனையாகிறது. அதேபோல், கிராண்ட் விட்டாரா கார் மாதந்தோறும் 10,000 முதல் 11,000 யூனிட்டுகள் வரை விற்பனையாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலுவை முன்பதிவுகள்

விற்பனை அதிகரித்து வருவது மாருதி சுஸுகிக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தாலும், வாடிக்கையாளர்களுக்கு உரிய நேரத்தில் கார்களை டெலிவரி செய்வது சவாலாக மாறியுள்ளது. தற்போது நிறுவனத்திடம் 2.53 லட்சம் கார் முன்பதிவுகள் நிலுவையில் இருப்பதாக பார்த்தோ பானர்ஜி தெரிவித்துள்ளார். இதனால் உற்பத்தியை அதிகரிப்பது அவசியமாகியுள்ளது.

மேலும், நிறுவனத்தின் 6 கார் மாடல்கள் மட்டும் 20,000 யூனிட்டுகளுக்கும் அதிகமான விற்பனையை பதிவு செய்துள்ளன. இது மாருதி சுஸுகியின் தயாரிப்பு வரிசைக்கு கிடைத்துள்ள முக்கியமான வெற்றியாக பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு பண்டிகைக் காலத்தில் மாருதி சுஸுகியின் விற்பனை சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

Article Published On: Sunday, November 8, 2026, 9:48 [IST]
English summary
Maruti suzuki delivers 30000 cars dhanteras festive sales growth 2026
மேலும்... #maruti suzuki
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out