மாருதி கார்களுக்கு இணையாக விற்பனையாகும் இரு டாடா கார்கள்! அளவில் சிறியதாக இருப்பதால் வாங்க குவியும் மக்கள்!

2026 மார்ச் மாதத்தில் இந்தியாவில் கார்கள் விற்பனை வலுவான வேகத்தைப் பதிவு செய்துள்ளது. குறிப்பாக, கடந்த மாதத்தில் அதிகம் விற்பனையான முதல் 10 கார்களின் விற்பனை எண்ணிக்கை 1,76,586 யூனிட்களை எட்டி, கடந்த 2025 ஆண்டு மார்ச் மாதத்தில் விற்பனையான 1,58,063 யூனிட்களை விட 11.72% என்கிற ஆண்டுக்கு ஆண்டு (YoY) வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

கடந்த 2026 மார்ச் மாதத்தில், மாருதி சுஸுகி டிசைர் (Maruti Suzuki Dzire) 21,224 யூனிட்கள் விற்பனையுடன் இந்தியாவிலேயே அதிகம் விற்பனையான காராக மீண்டும் உருவெடுத்துள்ளது. இது 2025ஆம் ஆண்டு மார்ச் மாதத்தை காட்டிலும் 37.28% அதிகமாகும். ஏனெனில், அந்த மாதத்தில் 15,460 டிசையர் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

top-10 most sold cars in march 2026

டாடா பன்ச் (Tata Punch) 20,977 யூனிட்களுடன் (எலெக்ட்ரிக் வெர்சன் உட்பட) இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. 2025 மார்ச் மாதத்தின் 17,714 பன்ச் கார்கள் விற்பனை உடன் ஒப்பிடுகையில் இது 18.42% அதிகமாகும். டாடா நெக்ஸான் (Tata Nexon) 19,810 யூனிட்கள் விற்பனையுடன் மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது. பன்ச் காரை போலவே நெக்ஸானும் எலெக்ட்ரிக் வெர்சனிலும் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த ஆண்டு மார்ச்சில் பன்ச்சை காட்டிலும் குறைவாக 16,366 நெக்ஸான் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்ததுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு மார்ச் மாதத்தின் விற்பனை 21.04% அதிகமாகும். ஆனால், இதேபோன்று எலெக்ட்ரிக் வெர்சனிலும் விற்பனை செய்யப்படும் ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta) 17,838 யூனிட்கள் விற்பனை உடன் 2025 மார்ச்சை காட்டிலும் 1.22% சரிவை சந்தித்துள்ளது.

top-10 most sold cars in march 2026

அதேநேரம், இந்த லிஸ்ட்டில் அதற்கடுத்த 5வது மற்றும் 6வது இடங்களை பிடித்துள்ள மாருதி சுஸுகி எர்டிகா (Ertiga) 17,072 யூனிட்கள் விற்பனை உடன் 1.59% வளர்ச்சியையும், மாருதி சுஸுகி வேகன்ஆர் (WagonR) 17,025 யூனிட்கள் விற்பனை உடன் 0.87% சரிவையும் கண்டுள்ளன. மாருதி சுஸுகி பலேனோ (Baleno) 16,392 யூனிட்களுடன் 32.65% என்கிற வலுவான வளர்ச்சியை விற்பனையில் பதிவு செய்து இந்த லிஸ்ட்டில் 7வது இடத்தை பிடித்துள்ளது.

ஆனால், 8வது இடத்தில் உள்ள மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Brezza) 16,130 யூனிட்கள் விற்பனை உடன் 2.51% சரிவை சந்தித்துள்ளது. மாருதி சுஸுகி பிரான்க்ஸ் (Fronx) 15,540 யூனிட்கள் விற்பனை உடன் 2025 மார்ச்சை விட விற்பனையில் 13.69% வளர்ச்சி அடைந்துள்ளது. மஹிந்திரா ஸ்கார்பியோ (Mahindra Scorpio) 14,578 யூனிட்கள் விற்பனை உடன் (ஸ்கார்பியோ என் உட்பட) 4.78% விற்பனை வளர்ச்சியைப் பெற்று இந்த டாப்-10 கார்கள் பட்டியலை நிறைவு செய்கிறது.

Top 10 Cars Mar-26 Mar-25 Diff
Dzire 21,224 15,460 5,764
Punch / EV 20,977 17,714 3,263
Nexon / EV 19,810 16,366 3,444
Creta / EV 17,838 18,059 -221
Ertiga 17,072 16,804 268
Wagon R 17,025 17,175 -150
Baleno 16,392 12,357 4,035
Brezza 16,130 16,546 -416
Fronx 15,540 13,669 1,871
Scorpio / N 14,578 13,913 665
Total 1,76,586 1,58,063 18,523

டிரைவ்ஸ்பார்க் கருத்து: அளவில் சிறியதான ஹேட்ச்பேக் (Hatchback) மற்றும் எஸ்யூவி (SUV) ரக கார் மாடல்களுக்கு இந்திய சந்தையில் அதிக தேவை இருப்பதை இந்த புள்ளி விவரங்கள் வெளிக்காட்டுகின்றன. இருப்பினும், முதலிடத்தில் டிசையர் என்கிற செடான் ரக கார் இருப்பது சற்று ஆச்சிரியத்தை ஏற்படுத்துகிறது. இதில் மாருதி சுஸுகி முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், டாடா மோட்டார்ஸ் மற்றும் மஹிந்திரா நிறுவனங்களின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் கார்கள் விற்பனை வளர்ச்சியில் முக்கிய உந்துசக்தியாக எஸ்யூவி கார்கள் பிரிவு தொடர்ந்து உள்ளது. முதல் 10 எஸ்யூவி கார் மாடல்களின் மொத்த விற்பனை 1,50,135 யூனிட்களை எட்டியுள்ளது. இது 2025 மார்ச் மாதத்தில் விற்பனையான 1,20,938 எஸ்யூவி கார்களுடன் ஒப்பிடுகையில் 24.14% என்கிற குறிப்பிடத்தக்க ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சியை காட்டுகிறது. டாடா பன்ச், நெக்ஸான் மற்றும் ஹூண்டாய் க்ரெட்டா ஆகியவை இந்த பிரிவில் முன்னணியில் உள்ளன.

More from DriveSpark

Article Published On: Sunday, April 5, 2026, 10:46 [IST]
English summary
Maruti suzuki dzire and tata punch and nexon are top 3 most sold cars in march 2026
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+