அம்பாஸிடர், பத்மினி இடத்தை பிடித்த மாருதி, ஹூண்டாய் கார்கள்! இந்த 2 காரும் மட்டும் இல்லனா மார்க்கெட்டே காலி!

இந்தியாவில் கடந்த ஒரு சில வருடங்களாக செடான் ரக கார்களின் விற்பனை மிகவும் மந்தமாக இருந்து வருகிறது. இருப்பினும் ஒரு சில செடான் ரக கார்கள் தொடர்ந்து சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து வருகின்றன. மாருதி சுஸுகி டிசையர் (Maruti Suzuki Dzire) இதற்கு ஒரு உதாரணம்.

ஆனால் மாருதி சுஸுகி டிசையர் காரின் நேரடி போட்டி மாடலாக கருதப்படும் ஹூண்டாய் அவ்ரா (Hyundai Aura) காரும் விற்பனையில் சிறப்பாகதான் செயல்பட்டு கொண்டுள்ளது. சென்னை (Chennai) மற்றும் பெங்களூர் (Bangalore) போன்ற பெரு நகரங்களின் சாலைகளை உற்று நோக்கினால், உங்களுக்கு ஒரு விஷயம் மிகவும் தெளிவாக புரியவரும்.

Maruti Suzuki Dzire Side Design

அங்கு சாலைகளில் தென்படும் பெரும்பாலான டாக்ஸிகள் மாருதி சுஸுகி டிசையராக இருக்கும். அதற்கு அடுத்தபடியான டாக்ஸிகள் ஹூண்டாய் அவ்ராவாக இருக்கும். இந்தியாவில் இந்த சப்-4 மீட்டர் காம்பேக்ட் செடான் கார்கள் இரண்டுமே மிகவும் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து வருகின்றன.

இதற்கு நடப்பு 2026ம் ஆண்டு ஏப்ரல் மாதமும் விதிவிலக்கு அல்ல. நடப்பு 2026ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மாருதி சுஸுகி நிறுவனம் 23,580 டிசையர் கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெறும் 16,996 மாருதி சுஸுகி டிசையர் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன.

Hyundai Aura

அதாவது இம்முறை 6,584 மாருதி சுஸுகி டிசையர் கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 38.74 சதவீத வளர்ச்சி ஆகும். இதேபோல் ஹூண்டாய் அவ்ரா காரும் விற்பனையில் மிகவும் சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது. ஹூண்டாய் நிறுவனம் நடப்பு 2026ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4,587 அவ்ரா கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது.

ஆனால் கடந்த 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4,224 ஹூண்டாய் அவ்ரா கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. அதாவது இம்முறை 363 ஹூண்டாய் அவ்ரா கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் ஹூண்டாய் அவ்ரா கார் விற்பனையில் 8.59 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது.

நடப்பு 2026ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்திய சந்தையில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 செடான் கார்களின் பட்டியலில் முதல் இடத்தை மாருதி சுஸுகி டிசையரும், 2வது இடத்தை ஹூண்டாய் அவ்ராவும் பிடித்துள்ளன. இந்தியாவில் செடான் ரக கார்களின் விற்பனை குறைந்து கொண்டே வரும் நிலையில், இந்த 2 கார்கள்தான் இந்த செக்மெண்ட்டை உயிர்ப்புடன் வைத்துள்ளன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஹோண்டா நிறுவனம் கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு சிட்டி காரின் அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இதை தொடர்ந்து போக்ஸ்வேகன் விர்டுஸ் (Volkswagen Virtus) மற்றும் ஸ்கோடா ஸ்லாவியா (Skoda Slavia) கார்களின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன்களும் விற்பனைக்கு வரவுள்ளன.

எனவே வரும் மாதங்களில் இந்தியாவின் செடான் செக்மெண்ட்டில் கார்களின் விற்பனை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாக உள்ளன. ஒரு சமயத்தில் இந்தியாவின் செடான் செக்மெண்ட்டில் அம்பாஸிடர் மற்றும் பத்மினி ஆகிய கார்கள் ஆதிக்கம் செலுத்தி கொண்டிருந்தன. தற்போது அந்த இடத்தை மாருதி சுஸுகி டிசையர் மற்றும் ஹூண்டாய் அவ்ரா ஆகியவை பிடித்துள்ளன.

Article Published On: Tuesday, May 26, 2026, 22:07 [IST]
English summary
Maruti suzuki dzire hyundai aura sales report april 2026
மேலும்... #maruti suzuki #hyundai #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out