மே மாசம் இந்தியாலயே அதிகமா சேல்ஸ் ஆன கார் இதுதானா! எஸ்யூவின்னு சொன்னவங்க எல்லாம் லைன்ல வாங்க!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் செடான் ரக கார்களில் ஒன்று மாருதி சுஸுகி டிசையர் (Maruti Suzuki Dzire). இது அதன் நேரடி போட்டி மாடலான ஹோண்டா அமேஸ் (Honda Amaze) காரை விட மிகவும் விலை குறைவானது ஆகும். மாருதி சுஸுகி டிசையர் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டை வெறும் 6.26 லட்ச ரூபாய் என்ற விலையிலேயே உங்களால் வாங்கி விட முடியும்.
ஆனால் ஹோண்டா அமேஸ் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 6.98 லட்ச ரூபாயாக உள்ளது. இத்தனைக்கும் இது ஹோண்டா அமேஸ் காரின் 2வது தலைமுறை மாடலின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை ஆகும். புதிய தலைமுறை ஹோண்டா அமேஸ் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலையோ 7.52 லட்ச ரூபாயாக இருக்கிறது.

பொதுவாக புதிய தலைமுறை மாடல் வந்து விட்டால், ஒரு கார் நிறுவனம் பழைய மாடலின் விற்பனையை நிறுத்தி விடும். ஆனால் ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் அமேஸ் காரின் புதிய தலைமுறை மாடலுடன் சேர்த்து, பழைய மாடலையும் விற்பனை செய்து கொண்டுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
மறுபக்கம் மாருதி சுஸுகி டிசையர் காரின் மற்றொரு நேரடி போட்டி மாடலான ஹூண்டாய் அவ்ரா (Hyundai Aura) காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலையோ கிட்டத்தட்ட மாருதி சுஸுகி டிசையருக்கு நெருக்கமாகதான் உள்ளது. அதாவது ஹூண்டாய் அவ்ரா காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 6 லட்ச ரூபாயாக இருக்கிறது.

இதனுடன் சிறப்பான மைலேஜ், அட்டகாசமான வசதிகள் மற்றும் மாருதி சுஸுகி நிறுவனத்தின் தயாரிப்பு போன்ற காரணங்கள் எல்லாம் ஒன்றிணைந்து, இந்திய சந்தையின் தலைசிறந்த செடான் ரக காராக மாருதி சுஸுகி டிசையரை மாற்றியுள்ளன. இன்னும் சொல்லப்போனால் மாருதி சுஸுகி டிசையர் கார் நாம் நினைப்பதற்கு எல்லாம் ஒரு படி மேலே உள்ளது.
தெளிவாக புரியும்படி சொல்வதென்றால், இந்தியாவில் சமீப காலமாக செடான் கார்களின் விற்பனை சிறப்பாக இல்லை. ஒரு காலத்தில் இந்திய சாலைகளில் கோலோச்சி கொண்டிருந்தது செடான் கார்கள்தான். அந்த இடத்தை தற்போது எஸ்யூவி கார்கள் பிடித்து விட்டன. மார்க்கெட் இப்படி இருக்கும் சூழலில், ஒரு சில மாதங்களில், எஸ்யூவி ரக கார்களை எல்லாம் பின்னுக்கு தள்ளி, இந்தியாவில் அதிகம் விற்பனையான கார் என்ற பெருமையை மாருதி சுஸுகி டிசையர் பிடித்து விடுகிறது.
இதற்கு நடப்பு 2026ம் ஆண்டு மே மாதம் ஒரு உதாரணம். நடப்பு 2026ம் ஆண்டு மே மாதம் இந்தியாவிலேயே மிகவும் அதிகமாக விற்பனையான கார் (Most Sold Car In May 2026) என்ற பெருமையை மாருதி சுஸுகி டிசையர் தட்டி சென்றுள்ளது. மாருதி சுஸுகி நிறுவனம் நடப்பு 2026ம் ஆண்டு மே மாதத்தில் 24,546 டிசையர் கார்களை விற்பனை செய்துள்ளது.
கடந்த 2025ம் ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடும்போது இது 36 சதவீத வளர்ச்சி ஆகும். இதன் மூலம் முதலிட அரியணையை மாருதி சுஸுகி டிசையர் தட்டி சென்றுள்ளது. இந்த வரிசையில் 2வது இடத்தில் இருப்பது ஒரு எஸ்யூவி ரக கார் ஆகும். அது மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் (Maruti Suzuki Fronx). மாருதி சுஸுகி டிசையர் எதோ நூலிழையில் முதலிடத்தை தட்டி செல்லவில்லை.
மிகவும் சௌகரியமாக முதலிடத்தை வென்றுள்ளது. ஏனெனில் மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரின் விற்பனை எண்ணிக்கை வெறும் 20,686 மட்டுமே. அதாவது மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸை விட 3,860 மாருதி சுஸுகி டிசையர் கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்திய சந்தையில் மாருதி சுஸுகி டிசையர் காரின் ஆதிக்கத்திற்கு இந்த எண்கள் எல்லாம் வெறும் ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே.
முன்னதாக மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் கடந்த 2025ம் ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடும்போது விற்பனையில் 52 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். காடிவாடி தளத்தில் வெளியாகியுள்ள சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) மூலமாக இந்த தகவல் நமக்கு தெரிய வந்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மாருதி சுஸுகி டிசையர் காரின் சிஎன்ஜி வேரியண்ட்கள் ஒரு கிலோவிற்கு 33.73 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்க கூடியவையாக உள்ளன. அத்துடன் இந்த காரில் சன்ரூஃப் போன்ற ஏராளமான வசதிகளும் வழங்கப்படுகின்றன. இதன் காரணமாகவே மாருதி சுஸுகி டிசையர் விற்பனையில் பல சாதனைகளை படைத்து கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications