யாருமே எதிர்பாக்காத குறைவான விலையில் மாருதியின் புது கார்! போட்டி நிறுவனங்களை எல்லாம் கருவறுக்க போகுது!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த மாருதி சுஸுகி இ விட்டாரா (Maruti Suzuki e Vitara), நேற்று (பிப்ரவரி 17) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. மாருதி சுஸுகி நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் என்பதால், இ விட்டாராவின் விலையை தெரிந்து கொள்ள வாடிக்கையாளர்கள் பலரும் அதிக ஆர்வம் காட்டினர்.

அவர்களின் எதிர்பார்ப்புகளை, மாருதி சுஸுகி நிறுவனம் பொய்யாக்கவில்லை. மிகவும் சவாலான விலையில், மாருதி சுஸுகி இ விட்டாரா எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மாருதி சுஸுகி இ விட்டாரா எலெக்ட்ரிக் கார் மொத்தம் 3 வேரியண்ட்களில் (Variants) விற்பனை செய்யப்படும்.

Maruti Suzuki e Vitara SUV

அவை 49 kWh பேட்டரி ஆப்ஷன் உடன் கூடிய டெல்டா (Delta), 61 kWh பேட்டரி ஆப்ஷன் உடன் கூடிய ஜெட்டா (Zeta) மற்றும் 61 kWh பேட்டரி ஆப்ஷன் உடன் கூடிய ஆல்பா (Alpha) ஆகியவை ஆகும். இதில், 49 kWh பேட்டரி ஆப்ஷன் உடன் கூடிய டெல்டா வேரியண்ட்டிற்கான விலை மட்டுமே நேற்று அறிவிக்கப்பட்டது. அதுவும் பாஸ் (BaaS - Battery-as-a-Service) விலை மட்டுமே அறிவிக்கப்பட்டது.

பாஸ் முறை என்பது, பேட்டரியை வாடகைக்கு எடுக்கும் திட்டம் ஆகும். அதாவது பேட்டரியை தவிர்த்து விட்டு, காருக்கான விலையை மட்டும் நீங்கள் செலுத்துவீர்கள். அதன் பின் நீங்கள் ஓட்டும் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் தனியாக கட்டணம் செலுத்த வேண்டும். இந்த முறையில், ஆரம்பத்தில் நீங்கள் செலுத்தும் தொகை மிகவும் குறைவாக இருக்கும். ஆனால் அதன் பின் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் கட்டணம் செலுத்த வேண்டும்.

Maruti Suzuki e Vitara Full Price List

பாஸ் முறை தற்போது உங்களுக்கு புரிந்திருக்கும் என நம்புகிறோம். இந்த முறையின் கீழ், 49 kWh பேட்டரி ஆப்ஷன் உடன் கூடிய டெல்டா வேரியண்ட்டின் விலை 10.99 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் நீங்கள் இயக்கும் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் தனியாக 3.99 ரூபாயை கட்டணமாக செலுத்த வேண்டும்.

தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி இ விட்டாரா எலெக்ட்ரிக் காரின் 49 kWh பேட்டரி ஆப்ஷன் உடன் கூடிய டெல்டா வேரியண்ட்டிற்கான பாஸ் விலை மட்டுமே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய 2 வேரியண்ட்களுக்கான பாஸ் விலைகளை, மாருதி சுஸுகி நிறுவனம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

இந்த சூழலில், பாஸ் திட்டத்தின் கீழ் அல்லாமல், பேட்டரியுடன் சேர்த்து மாருதி சுஸுகி இ விட்டாரா எலெக்ட்ரிக் காரை முழுமையாக வாங்க விரும்புவர்களுக்கான விலைகள் தற்போது வெளியாகியுள்ளன. இதன்படி 49 kWh பேட்டரி ஆப்ஷன் உடன் கூடிய டெல்டா வேரியண்ட்டின் விலை வெறும் 15.99 லட்ச ரூபாயாக மட்டுமே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் 61 kWh பேட்டரி ஆப்ஷன் உடன் கூடிய ஜெட்டா வேரியண்ட்டின் விலை 17.49 லட்ச ரூபாயாக மட்டுமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மறுபக்கம் 61 kWh பேட்டரி ஆப்ஷன் உடன் கூடிய ஆல்பா வேரியண்ட்டின் விலை 19.79 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆல்பா வேரியண்ட் மட்டும் மெட்டாலிக் மற்றும் ட்யூயல் டோன் என 2 வெர்ஷன்களில் கிடைக்கும்.

19.79 லட்ச ரூபாய் என்பது மெட்டாலிக் வெர்ஷனின் விலை ஆகும். இதன் ட்யூயல் டோன் வெர்ஷனின் விலை 20.01 லட்ச ரூபாய் ஆகும். இந்த செய்தியில் கூறப்பட்டுள்ள அனைத்துமே எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) என்பது குறிப்பிடத்தக்கது. பாஸ் முறையை தவிர்த்து விட்டு, பேட்டரியுடன் சேர்த்து மாருதி சுஸுகி இ விட்டாரா எலெக்ட்ரிக் காரை வாங்கினால் (வழக்கமாக கார்களை வாங்கும் முறை), நீங்கள் ஓட்டுவதற்கு தனியாக கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

இங்கே ஒரு விஷயத்தை நாங்கள் குறிப்பிட்டாக வேண்டும். தற்போது வெளியாகியுள்ள இ விட்டாரா எலெக்ட்ரிக் காரின் பாஸ் திட்டத்தின் கீழ் வராத முழுமையான விலை பட்டியலை மாருதி சுஸுகி நிறுவனம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. மாறாக டீலர்ஷிப் அளவிலான ஆவணம் ஒன்றின் மூலமாக, நமக்கு இந்த தகவல்கள் தெரிய வந்துள்ளன.

மாருதி சுஸுகி இ விட்டாரா எலெக்ட்ரிக் காரின் 49 kWh பேட்டரியின் டிரைவிங் ரேஞ்ச் (Driving Range) 440 கிலோ மீட்டர்கள் ஆகும். அதே நேரத்தில் 61 kWh பேட்டரியின் டிரைவிங் ரேஞ்ச் 543 கிலோ மீட்டர்கள் ஆகும். இவை மாருதி சுஸுகி நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படும் டிரைவிங் ரேஞ்ச் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

இந்த சிறப்பான டிரைவிங் ரேஞ்ச் உடன் லெவல் 2 அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems), 7 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா, சன்ரூஃப், கனெக்டட் கார் தொழில்நுட்பம், 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் 10 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் போன்ற வசதிகளை (Features) எல்லாம், மாருதி சுஸுகி இ விட்டாரா எலெக்ட்ரிக் கார் கொண்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: அனைவரும் எதிர்பார்த்ததை விட மிகவும் குறைவான விலையில், மாருதி சுஸுகி இ விட்டாரா விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முதலில் இந்த எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை 17 அல்லது 18 லட்ச ரூபாய் என்ற அளவில் நிர்ணயம் செய்யப்படும் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது வெறும் 15.99 லட்ச ரூபாய் என்ற ஆரம்ப விலையிலேயே, மாருதி சுஸுகி இ விட்டாரா களமிறக்கப்பட்டுள்ளது.

எனவே ஹூண்டாய் க்ரெட்டா எலெக்ட்ரிக் (Hyundai Creta Electric), எம்ஜி இஸட்எஸ் இவி (MG ZS EV), எம்ஜி விண்ட்சர் இவி (MG Windsor EV), டாடா நெக்ஸான் இவி (Tata Nexon EV), டாடா கர்வ் இவி (Tata Curvv EV), மஹிந்திரா பிஇ 6 (Mahindra BE 6) ஆகிய எலெக்ட்ரிக் கார்களுக்கு எல்லாம், மாருதி சுஸுகி இ விட்டாரா எலெக்ட்ரிக் கார் விற்பனையில் நெருக்கடிகளை ஏற்படுத்தலாம் என நாங்கள் கருதுகிறோம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, February 18, 2026, 16:25 [IST]
English summary
Maruti suzuki e vitara full price list without baas revealed
மேலும்... #maruti suzuki #electric vehicles #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+