டாடா கதை மொத்தமா முடிஞ்சுது... மாருதியின் முதல் எலெக்ட்ரிக் கார் இந்த மாசமே அறிமுகம்... விலை இவ்ளோதானா!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கார்களில் ஒன்று மாருதி சுஸுகி இ விட்டாரா (Maruti Suzuki e Vitara). இதுதான் மாருதி சுஸுகியின் முதல் எலெக்ட்ரிக் கார் (Electric Car) ஆகும். நடப்பு பிப்ரவரி மாதத்தில் மாருதி சுஸுகி இ விட்டாரா விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இந்த கார் குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மாருதி சுஸுகி இ விட்டாரா எலெக்ட்ரிக் காரில் மொத்தம் 2 பேட்டரி ஆப்ஷன்கள் வழங்கப்படவுள்ளன. இதில், 61 kWh பேட்டரி ஒன்றாகும். இதனை ஒரு முறை முழுமையாக நிரப்பினால் 543 கிலோ மீட்டர்கள் பயணம் செய்ய முடியும் என மாருதி சுஸுகி நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Maruti Suzuki e Vitara

இந்த எலெக்ட்ரிக் காரின் மற்றொரு பேட்டரி ஆப்ஷன் 49 kWh ஆகும். ஆனால் இந்த பேட்டரியின் டிரைவிங் ரேஞ்ச் எவ்வளவு என்பதை மாருதி சுஸுகி நிறுவனம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் சமயத்தில் இந்த பேட்டரியின் டிரைவிங் ரேஞ்ச் எவ்வளவு என்பது அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாருதி சுஸுகி இ விட்டாரா எலெக்ட்ரிக் கார் மொத்தம் 3 வேரியண்ட்களில் கிடைக்கும். அவை டெல்டா, ஜெட்டா மற்றும் ஆல்பா ஆகியவை ஆகும். இதில், டெல்டா வேரியண்ட்டில் மட்டுமே 49 kWh பேட்டரி ஆப்ஷன் வழங்கப்படவுள்ளது. 61 kWh பேட்டரி ஆப்ஷனானது, ஜெட்டா மற்றும் ஆல்பா வேரியண்ட்களில் கிடைக்கும்.

Maruti Suzuki e Vitara Side View

மாருதி சுஸுகி இ விட்டாரா எலெக்ட்ரிக் காரில் 7 ஏர்பேக்குகள், லெவல் 2 அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems), 360 டிகிரி கேமரா, எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், முன் மற்றும் பின் பகுதியில் பார்க்கிங் சென்சார்கள் போன்ற பாதுகாப்பு வசதிகள் எல்லாம் வழங்கப்பட்டுள்ளன. இதனால் பாரத் என்சிஏபி மோதல் சோதனையில் இந்த கார் 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றுள்ளது.

மாருதி சுஸுகி இ விட்டாரா எலெக்ட்ரிக் காரின் உற்பத்தி பணிகள் குஜராத் மாநிலத்தில் உள்ள தொழிற்சாலையில் ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்டன. இங்கிருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கு மாருதி சுஸுகி இ விட்டாரா எலெக்ட்ரிக் கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. இன்னும் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட வேண்டியதுதான் மட்டும்தான் பாக்கி!

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் மாருதி சுஸுகி இ விட்டாரா எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை வெறும் 17 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது எதிர்பார்க்கப்படும் எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் நாளில்தான் அதிகாரப்பூர்வமான விலை எவ்வளவு? என்பது அறிவிக்கப்படும்.

இந்திய சந்தையில் டாடா நெக்ஸான் இவி, டாடா கர்வ் இவி, மஹிந்திரா பிஇ 6 போன்ற எலெக்ட்ரிக் கார்களுக்கு எல்லாம், மாருதி சுஸுகி இ விட்டாரா எலெக்ட்ரிக் காரின் வருகை, விற்பனையில் நெருக்கடியை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அத்துடன் விரைவில் விற்பனைக்கு வரவுள்ள டாடா சியரா இவி எலெக்ட்ரிக் காருக்கும், இது போட்டியாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Sunday, February 1, 2026, 21:21 [IST]
English summary
Maruti suzuki e vitara launch this month all you need to know
மேலும்... #maruti suzuki #electric vehicles #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+