மாருதியின் முதல் எலக்ட்ரிக் கார் அடிமாட்டு விலையில் அறிமுகம்! டாடா, மஹிந்திரா பொழப்புல மண் அள்ளி போட்டுட்டாங்க

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த மாருதி சுஸுகி இ விட்டாரா (Maruti Suzuki e Vitara), இன்று (பிப்ரவரி 17) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதுதான் மாருதி சுஸுகி நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் (Electric Car) ஆகும்.

மாருதி சுஸுகி இ விட்டாரா எலெக்ட்ரிக் காரில் மொத்தம் 2 பேட்டரி ஆப்ஷன்கள் (Battery Options) வழங்கப்பட்டுள்ளன. அவை 49 kWh மற்றும் 61 kWh ஆகியவை ஆகும். இதில், 49 kWh பேட்டரி ஆப்ஷனின் டிரைவிங் ரேஞ்ச் (Driving Range) 440 கிலோ மீட்டர்கள் ஆகவும், 61 kWh பேட்டரி ஆப்ஷனின் டிரைவிங் ரேஞ்ச் 543 கிலோ மீட்டர்கள் ஆகவும் உள்ளது.

Maruti Suzuki e Vitara

இவை அராய் (ARAI) அமைப்பால் சான்று வழங்கப்பட்ட டிரைவிங் ரேஞ்ச் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். எனவே நடைமுறை பயன்பாட்டில் டிரைவிங் ரேஞ்ச் சற்று குறைவாக கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. 7.4 kW சார்ஜர் பயன்படுத்தினால், 49 kWh பேட்டரியை, 10 சதவீதத்தில் இருந்து 80 சதவீதம் நிரப்புவதற்கு, 6.5 மணி நேரம் ஆகும்.

இதே 7.4 kW சார்ஜர், 61 kWh பேட்டரியை 10 சதவீதத்தில் இருந்து 80 சதவீதம் நிரப்புவதற்கு, 9 மணி நேரத்தை எடுத்து கொள்ளும். ஆனால் 70 kW வேகம் வரை சப்போர்ட் ஆக கூடிய டிசி ஃபாஸ்ட் சார்ஜர் பயன்படுத்தினால், மாருதி சுஸுகி இ விட்டாரா எலெக்ட்ரிக் காரின் பேட்டரிகளை, வெறும் 45 நிமிடங்களிலேயே, 10 சதவீதத்தில் இருந்து 80 சதவீதம் வரை நிரப்பி விட முடியும்.

Maruti Suzuki e Vitara

மாருதி சுஸுகி இ விட்டாரா எலெக்ட்ரிக் காரில், 10 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, சன்ரூஃப், முன் பகுதியில் வென்டிலேஷன் வசதியுடன் கூடிய இருக்கைகள், கனெக்டட் கார் தொழில்நுட்பம் மற்றும் வயர்லெஸ் செல்போன் சார்ஜர் போன்ற வசதிகள் (Features) எல்லாம் வழங்கப்பட்டுள்ளன.

அத்துடன் லெவல் 2 அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems), 7 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா, டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், முன் மற்றும் பின் பகுதியில் பார்க்கிங் சென்சார்கள் போன்ற பாதுகாப்பு வசதிகளும் (Safety Features), மாருதி சுஸுகி இ விட்டாரா எலெக்ட்ரிக் காரில் வழங்கப்பட்டுள்ளன.

மாருதி சுஸுகி இ விட்டாரா எலெக்ட்ரிக் கார், பாரத் என்சிஏபி அமைப்பின் மோதல் சோதனைகளில், முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் (5 Star Safety Rating) பெற்றுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். மாருதி சுஸுகி இ விட்டாரா எலெக்ட்ரிக் கார் மொத்தம் 3 வேரியண்ட்களில் (Variants) கிடைக்கும்.

அவை டெல்டா (Delta), ஜெட்டா (Zeta) மற்றும் ஆல்பா (Alpha) ஆகியவை ஆகும். இதில், டெல்டா வேரியண்ட்டில் 49 kWh பேட்டரி ஆப்ஷன் மட்டுமே வழங்கப்படும். அதே சமயம் ஜெட்டா மற்றும் ஆல்பா வேரியண்ட்களில் 61 kWh பேட்டரி ஆப்ஷன் மட்டும் வழங்கப்படும்.

இந்த சூழலில், மாருதி சுஸுகி இ விட்டாரா எலெக்ட்ரிக் காரின் விலை எவ்வளவு? என்பது இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி மாருதி சுஸுகி இ விட்டாரா எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை வெறும் 10.99 லட்ச ரூபாயாக மட்டுமே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது மாருதி சுஸுகி நிறுவனம் வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

ஆனால் ஒரு ட்விஸ்ட். மாருதி சுஸுகி இ விட்டாரா எலெக்ட்ரிக் காரில் பேட்டரி வாடகை அடிப்படையில் மட்டுமே வழங்கப்படும். இதை பாஸ் ரென்டல் திட்டம் (BaaS - Battery-as-a-Service Rental Program) என்கிறார்கள். இதன்படி மாருதி சுஸுகி இ விட்டாரா எலெக்ட்ரிக் காரை இயக்கும் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் 3.99 ரூபாயை நீங்கள் கட்டணமாக செலுத்த வேண்டும்.

அத்துடன் மாருதி சுஸுகி நிறுவனம் தற்போதைய நிலையில் 49 kWh பேட்டரி ஆப்ஷன் உடன் கூடிய டெல்டா வேரியண்ட்டிற்கான பாஸ் விலையை மட்டுமே அறிவித்துள்ளது. 10.99 லட்ச ரூபாய் மற்றும் ஒரு கிலோ மீட்டருக்கு 3.99 ரூபாய் என்பது இந்த வேரியண்ட்டின் விலைதான்.

ஆனால் இ விட்டாரா எலெக்ட்ரிக் காரின் எஞ்சிய வேரியண்ட்களுக்கான பாஸ் விலைகளை மாருதி சுஸுகி நிறுவனம் இன்னும் அறிவிக்கவில்லை. கூடிய விரைவில் எஞ்சிய வேரியண்ட்களுக்கான பாஸ் விலைகளும் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி இ விட்டாரா எலெக்ட்ரிக் கார், பாஸ் திட்டத்தின் மூலமாக மட்டுமே விற்பனை செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதாவது பேட்டரியை தவிர்த்து விட்டு காருக்கான விலையை மட்டுமே நீங்கள் செலுத்துவீர்கள். பேட்டரி உங்களுக்கு வாடகைக்கு வழங்கப்பட்டதை போல் கணக்கில் எடுத்து கொள்ளப்படும். எனவே மாருதி சுஸுகி இ விட்டாரா எலெக்ட்ரிக் காரை நீங்கள் இயக்கும் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் தனியாக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.

ஆனால் தனியாக கட்டணம் செலுத்த வேண்டிய தேவை இல்லாத வகையில், அதாவது பேட்டரியுடன் சேர்த்து, மாருதி சுஸுகி இ விட்டாரா எலெக்ட்ரிக் காரை, வாடிக்கையாளர்கள் முழுமையாக வாங்கி கொள்ள கூடிய வகையிலான விலை அறிவிக்கப்படுமா? (வழக்கமாக கார்களை வாங்க பின்பற்றப்படும் முறை) என்பது உறுதியாக தெரியவில்லை.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: பாஸ் திட்டத்தில் பேட்டரியின் விலை சேராது. அப்படி சேர்க்கும்பட்சத்தில், எலெக்ட்ரிக் காரின் விலை மிகவும் அதிகமாக இருக்கும். விலையை மிகவும் அதிகமாக நிர்ணயம் செய்தால் பெரும்பாலான வாடிக்கையாளர்களால் எலெக்ட்ரிக் காரை வாங்க முடியாது. எனவே விற்பனையும் சிறப்பாக இருக்காது.

இந்த பிரச்சனையை தவிர்ப்பதற்காகவே எலெக்ட்ரிக் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் நிறுவனங்கள், பாஸ் முறையை நடைமுறைக்கு கொண்டு வந்தன. இந்தியாவில் ஏற்கனவே ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் (JSW MG Motor) போன்ற நிறுவனங்கள் எல்லாம், பாஸ் முறையில் எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து வருகின்றன.

தற்போது அதே வழிமுறையை பின்பற்றி மாருதி சுஸுகி நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இது வரவேற்கப்பட வேண்டிய ஒரு விஷயம்தான். இதன் மூலம் காரை வாங்குவதற்காக நீங்கள் செலுத்தும் தொகை மிகவும் குறைவாக இருக்கும். இதன் மூலம் பல லட்ச ரூபாயை நீங்கள் சேமிக்கலாம். பிறகு நீங்கள் எவ்வளவு கிலோ மீட்டர் ஓட்டுகிறீர்களோ, அதற்கு ஏற்ப மட்டும் கட்டணத்தை செலுத்தி கொள்ளலாம்.

மாருதி சுஸுகி இ விட்டாரா எலெக்ட்ரிக் காரின் வருகை, இந்திய சந்தையில், டாடா நெக்ஸான் இவி (Tata Nexon EV), டாடா கர்வ் இவி (Tata Curvv EV), மஹிந்திரா பிஇ 6 (Mahindra BE 6), எம்ஜி இஸட்எஸ் இவி (MG ZS EV) மற்றும் எம்ஜி விண்ட்சர் இவி (MG Windsor EV) ஆகிய எலெக்ட்ரிக் கார்களுக்கு எல்லாம், விற்பனையில் நெருக்கடிகளை ஏற்படுத்தலாம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, February 17, 2026, 17:14 [IST]
English summary
Maruti suzuki e vitara launched in india baas price driving range safety features and more details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+