பிப்ரவரியில் அறிமுகம் செய்யப்பட்ட மாருதி காரின் விலை அதிகரிப்பு! ரூ.30,000 வரை விலை உயர்த்தப்பட்ட சோகம்!

மாருதி சுஸுகி நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் காராக கடந்த பிப்ரவரி மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்ட இ-விட்டாரா அறிமுகத்திற்கு பிறகு முதல்முறையாக விலை அதிகரிப்பை பெற்றுள்ளது. இதன்படி, இ-விட்டாரா காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.30,000 வரையில் உயர்த்தப்பட்டுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

இந்தியாவின் நம்பர் ஒன் கார் நிறுவனமான மாருதி சுஸுகி நீண்ட நாள் எதிர்பார்ப்புக்கு மத்தியில் அதன் முதல் எலெக்ட்ரிக் காராக இ-விட்டாராவை கடந்த பிப்ரவரி மாதத்தில் அறிமுகம் செய்தது. மாருதியின் முதல் எலெக்ட்ரிக் கார் என்பதினாலேயே மிகுந்த கவனத்தை ஈர்த்த இ-விட்டாரா, BaaS ஆப்ஷனிலும் அறிமுகம் செய்யப்பட்டது.

maruti suzuki e-vitara price hike

BaaS ஆப்ஷனில் குறைந்த விலையில் கிடைக்கும் இ-விட்டாராவை BaaS ஆப்ஷன் இல்லாமலும் வாங்கலாம். தற்போது கொண்டுவரப்பட்டுள்ள விலை அதிகரிப்பு ஆனது BaaS ஆப்ஷன் உடன் மற்றும் BaaS ஆப்ஷன் இல்லாமல் என இரண்டிலும் இ-விட்டாரா காரில் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே கூறியதுபோல், 2026 பிப்ரவரி மாத அறிமுகத்திற்கு பிறகு இ-விட்டாராவில் கொண்டுவரப்பட்டுள்ள முதல் விலை அதிகரிப்பு இதுவாகும்.

மார்க்கெட்டில் இ-விட்டாரா கார் டெல்டா, ஸெட்டா மற்றும் ஆல்பா என்கிற மூன்று வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. இவை 49kWh மற்றும் 61kWh என இரு விதமான பேட்டரி ஆப்ஷன்களில் கிடைக்கின்றன. இதில் எண்ட்ரீ-லெவல் டெல்டா வேரியண்ட்டின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. இதனால், இ-விட்டாரா காரின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலையான ரூ.15.99 லட்சத்தில் (BaaS ஆப்ஷனில் இல்லாமல்) எந்த மாற்றமும் இல்லை.

maruti suzuki e-vitara price hike

ஆனால், மிட்-ரேஞ்ச் வேரியண்ட்டான ஸெட்டாவின் விலை அதிரடியாக சுமார் ரூ.30,000 அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல், டாப் வேரியண்ட்டான ஆல்ஃபாவின் விலை ரூ.20,000 அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், இ-விட்டாராவின் அதிகப்பட்ச எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.19.99 லட்சமாக அதிகரித்துள்ளது. BaaS ஆப்ஷனிலும் இ-விட்டாராவின் இந்த வேரியண்ட்களில் இதே அளவிற்கான விலை அதிகரிப்பு கொண்டுவரப்பட்டுள்ளது.

BaaS ஆப்ஷனில் ரூ.10.99 லட்சத்தில் இருந்து இ-விட்டாரா கிடைப்பது குறிப்பிடத்தக்கது. இ-விட்டாராவை பற்றி சொல்ல வேண்டுமென்றால், இது மாருதி சுஸுகியின் காம்பாக்ட்டான எலெக்ட்ரிக் SUV கார் ஆகும். இதில் வழங்கப்படும் 49kWh பேட்டரி ஆனது முழுமையாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 440கிமீ தொலைவிற்கு காரை இயக்கிச் செல்லக்கூடியது.

அதுவே, அளவில் பெரியதான 61kWh பேட்டரி மூலம் 543கிமீ வரையிலான ரேஞ்சை பெறலாம். பாரத் NCAP கிராஷ் டெஸ்ட்டில் உட்படுத்தப்பட்ட இ-விட்டாரா கார் சோதாஇ முடிவில் முழு 5-நட்சத்திர மதிப்பீடை பெற்றது. அந்த அளவிற்கு, இந்த காரில் பாதுகாப்பு அம்சங்களாக 7 ஏர்பேக்குகள், லெவல்-2 ADAS, 360-டிகிரி கேமரா, டயர் பிரஷர் மானிடரிங் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

இவற்றுடன், எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், ஆல்-வீல் டிஸ்க் பிரேக்குகள் மற்றும் குழந்தை பயணிகளுக்கான பாதுகாப்பையும் இ-விட்டாரா கொண்டுள்ளது. தொழிற்நுட்ப அம்சங்களாக 60க்கும் மேற்பட்ட கனெக்டட் கார் வசதிகள், பெரிய தொடுதிரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், டிரைவருக்கு தேவையான விபரங்களை வழங்க டிஜிட்டல் இன்ஸ்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் திரை உள்ளிட்டவை இந்த எலெக்ட்ரிக் காரில் இடம்பெறுகின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி சுஸுகியின் இந்த முதல் எலெக்ட்ரிக் காருக்கு ஹூண்டாய் கிரெட்டா எலெக்ட்ரிக், டாடா கர்வ் இவி, மஹிந்திரா BE 6, வின்ஃபாஸ்ட் VF 6 உள்ளிட்ட எலெக்ட்ரிக் கார்கள் விற்பனையில் போட்டியாக விளங்குகின்றன. இந்த அளவிற்கு போட்டி மிகுந்த பிரிவில் இருக்கும் இ-விட்டாரா காரின் விலை உயர்த்தப்பட்டு இருப்பது இந்த மாருதி எலெக்ட்ரிக் காரின் விற்பனையை எந்த அளவிற்கு பாதிக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Article Published On: Monday, June 22, 2026, 6:18 [IST]
English summary
Maruti suzuki e vitara price hike upto rs 30000 in india applies to the baas variants also
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out