மாருதி சுஸுகி ஈக்கோ காரின் ஆன்-ரோடு விலை இவ்ளோதானா! எல்லாரும் நெனைக்கறதை விட ரொம்ப கம்மி!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மாருதி சுஸுகி ஈக்கோ (Maruti Suzuki Eeco). மாருதி சுஸுகி ஆம்னிக்கு (Maruti Suzuki Omni) மாற்றாக கருதப்படும் மாருதி சுஸுகி ஈக்கோ காரின் வேரியண்ட் வாரியான ஆன்-ரோடு விலை (Variant-wise On-road Price) விபரம் இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
மாருதி சுஸுகி ஈக்கோ 5 சீட்டர் ஏசி 1.2 லிட்டர் 5 ஸ்பீடு மேனுவல்: இந்த வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Ptice) 5,56,300 ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இன்சூரன்ஸ் (Insurance) தொகை 29,275 ரூபாயாக இருக்கிறது. இந்த செய்தியின் தொடக்கத்திலேயே இன்சூரன்ஸ் விஷயத்தை தெளிவுபடுத்தி விடுகிறோம்.

ஒரு வருடத்திற்கான முழு இன்சூரன்ஸ் (Full Insurance) மற்றும் 3 வருடங்களுக்கான மூன்றாம் நபர் காப்பீடு (Third Party Insurance) ஆகியவற்றுக்கான தொகைதான் இது. அத்துடன் இந்த தொகையில் 8 ஏட்-ஆன்களும் (Add-ons) அடங்கும். மாருதி சுஸுகி ஈக்கோ காரின் அனைத்து வேரியண்ட்களுக்கும் இது பொருந்தும்.
சரி, அடுத்தபடியாக இந்த வேரியண்ட்டை தேர்வு செய்தால் 72,319 ரூபாயை லைஃப் டேக்ஸ்-ஆக (Life Tax) செலுத்த வேண்டும். மேலும் சேஃப்டி டேக்ஸ் (Safety Tax) மற்றும் பதிவு கட்டணமாக (Registration Fee) 3,300 ரூபாயை செலுத்த வேண்டியிருக்கும். மேலும் ஃபாஸ்டேக்கிற்கு (Fastag) 700 ரூபாயை கட்டணமாக செலுத்த வேண்டும்.

ஒட்டுமொத்தமாக பார்த்தால் இந்த வேரியண்ட்டின் ஆன்-ரோடு விலை 6,61,894 ரூபாய் வருகிறது. இதுதவிர கூடுதல் ஆப்ஷனல் பலன்களையும் (Additional Optional Benefits) நீங்கள் பெறலாம். இதன் கீழ் அடிப்படை ஆக்ஸஸரீஸ்களை (Basic Accessories) 13,067 ரூபாய் என்ற விலையில் நீங்கள் பெறலாம். மேலும் மாருதி சுஸுகி ரிவார்ட்ஸ் (Maruti Suzuki Rewards) பலன்களை 885 ரூபாய் என்ற விலையில் உங்களால் பெற முடியும்.
இங்கே மாருதி சுஸுகி ரிவார்ஸ்ட் என்றால் என்ன? என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம். நீங்கள் உங்கள் பழைய காரை எக்ஸ்சேன்ஞ் (Exchange) செய்து விட்டு புதிய காரை வாங்கினாலோ அல்லது உங்கள் நண்பர்கள் அல்லது தெரிந்தவர்களை மாருதி சுஸுகி காரை வாங்கும்படி பரிந்துரை (Refer) செய்தாலோ உங்களுக்கு புள்ளிகள் கிடைக்கும்.
உங்கள் மாருதி சுஸுகி காரை சர்வீஸ் செய்யும்போது சர்வீஸ் செய்யும்போது, இந்த புள்ளிகளின் மூலம் கட்டணத்தை குறைத்து கொள்ளலாம். எனவே கணிசமான தொகையை சேமிக்க இந்த திட்டம் உதவி செய்யும். இதற்கான கட்டணம்தான் இந்த 885 ரூபாய். அடுத்தபடியாக 6 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்ட வாரண்டிக்கான (Extended Warranty) கட்டணம் 9,157 ரூபாய் ஆகும்.
இந்த வரிசையில் சிசிபி ராயல் பிளாட்டினம் ஃப்யூயல் திட்டத்திற்கான கட்டணம் 2,879 ரூபாய் ஆகும். இந்த திட்டம் எவ்வாறு செயல்படும் என்றால், ஒருவேளை உங்கள் காரில் எரிபொருளை தவறுதலாக நிரப்பி விட்டால், அதாவது பெட்ரோல் காரில் டீசலை நிரப்பி விட்டால், மாருதி சுஸுகி நிறுவனம் அந்த பிரச்சனையை இலவசமாகவே சரி செய்து தந்து விடும்.
இதற்கான கட்டணம்தான் 2,879 ரூபாய். ஆக மொத்தத்தில் கூடுதல் ஆப்ஷனல் பலன்களுக்கான கட்டணம் 25,988 ரூபாய் ஆகும். எனவே கூடுதல் ஆப்ஷனல் பலன்களுடன் சேர்த்து மாருதி சுஸுகி ஈக்கோ காரின் 5 சீட்டர் ஏசி 1.2 லிட்டர் 5 ஸ்பீடு மேனுவல் வேரியண்ட்டின் ஆன்-ரோடு விலை 6,87,882 ரூபாய் வருகிறது.
மாருதி சுஸுகி ஈக்கோ 5 சீட்டர் ஏசி சிஎன்ஜி 1.2 லிட்டர் 5 ஸ்பீடு மேனுவல்: இந்த வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை 6,40,800 ரூபாய் ஆகும். அதே நேரத்தில் இன்சூரன்ஸ் கட்டணம் 31,368 ரூபாய் ஆகவும், லைஃப் டேக்ஸ் 83,304 ரூபாய் ஆகவும் உள்ளது. இந்த வரிசையில் சேஃப்டி டேக்ஸ் மற்றும் பதிவு கட்டணம் 3,300 ரூபாய் ஆகவும், ஃபாஸ்டேக் கட்டணம் 700 ரூபாய் ஆகவும் இருக்கிறது.
ஆக மொத்தத்தில் இந்த வேரியண்ட்டின் ஆன்-ரோடு விலை 7,59,472 ரூபாய் ஆகும். கூடுதல் ஆப்ஷனல் பலன்களை பொறுத்தவரை அடிப்படை ஆக்ஸஸரீஸ்களுக்கான கட்டணம் 13,067 ரூபாய் ஆகவும், மாருதி சுஸுகி ரிவார்ட்ஸ் திட்டத்த்திற்கான கட்டணம் 885 ரூபாய் ஆகவும், நீட்டிக்கப்பட்ட வாரண்டிக்கான கட்டணம் 10,514 ரூபாய் ஆகவும், சிசிபி ராயல் பிளாட்டினம் ஃப்யூயல் திட்டத்திற்கான கட்டணம் 3,304 ரூபாய் ஆகவும் உள்ளது.
இந்த வகையில் பார்த்தால் கூடுதல் ஆப்ஷனல் பலன்களுக்கான கட்டணம் 27,770 ரூபாய் ஆகும். எனவே கூடுதல் ஆப்ஷனல் பலன்களுடன் சேர்த்து மாருதி சுஸுகி ஈக்கோ 5 சீட்டர் ஏசி சிஎன்ஜி 1.2 லிட்டர் 5 ஸ்பீடு மேனுவல் வேரியண்ட்டின் ஆன்-ரோடு விலை 7,87,242 ரூபாயாக இருக்கிறது.
மாருதி சுஸுகி ஈக்கோ 5 சீட்டர் ஸ்டாண்டர்டு 1.2 லிட்டர் 5 ஸ்பீடு மேனுவல்: இதுதான் மாருதி சுஸுகி ஈக்கோ காரின் ஆரம்ப நிலை வேரியண்ட் ஆகும். இந்த வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை 5,23,400 ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் இன்சூரன்ஸ் கட்டணம் 28,621 ரூபாய் ஆகவும், லைஃப் டேக்ஸ் 68,042 ரூபாய் ஆகவும் இருக்கிறது.
இதை தொடர்ந்து சேஃப்டி டேக்ஸ் மற்றும் பதிவு கட்டணம் வழக்கம் போல 3,300 ரூபாய் ஆக இருக்கிறது. அதே நேரத்தில் ஃபாஸ்டேக் கட்டணமும் வழக்கம் போல் 700 ரூபாய் ஆகும். இங்கே ஒரு விஷயத்தை குறிப்பிட விரும்புகிறோம். மாருதி சுஸுகி ஈக்கோ காரின் அனைத்து வேரியண்ட்களின் சேஃப்டி டேக்ஸ் மற்றும் பதிவு கட்டணமும், பாஸ்டேக் கட்டணமும் முறையே 3,300 ரூபாய் மற்றும் 700 ரூபாய் என்பதுதான் அந்த விஷயம் ஆகும்.
சரி, விஷயத்திற்கு வருவோம். இந்த வேரியண்ட்டின் ஆன்-ரோடு விலை 6,24,063 ரூபாயாக இருக்கிறது. கூடுதல் ஆப்ஷனல் பலன்களை பொறுத்தவரையில் அடிப்படை ஆக்ஸஸரீஸ்களுக்கான கட்டணம் வழக்கம் போல 13,067 ரூபாய் ஆகவும், மாருதி சுஸுகி ரிவார்ட்ஸ் திட்டத்த்திற்கான கட்டணம் வழக்கம் போல 885 ரூபாய் ஆகவும்தான் உள்ளது.
இங்கே மற்றொரு விஷயத்தையும் நாங்கள் கண்டிப்பாக குறிப்பிட்டாக வேண்டும். மாருதி சுஸுகி ஈக்கோ காரின் அனைத்து வேரியண்ட்களின் அடிப்படை ஆக்ஸஸரீஸ்கள் மற்றும் மாருதி சுஸுகி ரிவார்ட்ஸ் திட்டத்திற்கான கட்டணம் முறையே 13,067 ரூபாய் மற்றும் 885 ரூபாய் என்பதுதான் அந்த விஷயம்.
மறுபக்கம் இந்த வேரியண்ட்டின் நீட்டிக்கப்பட்ட வாரண்டிக்கான கட்டணம் 8,614 ரூபாய் ஆகவும், சிசிபி ராயல் பிளாட்டினம் ஃப்யூயல் திட்டத்திற்கான கட்டணம் 2,702 ரூபாய் ஆகவும் உள்ளது.
இந்த வகையில் பார்த்தால் கூடுதல் ஆப்ஷனல் பலன்களுக்கான கட்டணம் 25,268 ரூபாய் ஆகும். எனவே கூடுதல் ஆப்ஷனல் பலன்களுடன் சேர்த்து இந்த வேரியண்ட்டின் ஆன்-ரோடு விலை 6,49,331 ரூபாயாக இருக்கிறது.
மாருதி சுஸுகி ஈக்கோ 6 சீட்டர் ஸ்டாண்டர்டு 1.2 லிட்டர் 5 ஸ்பீடு மேனுவல்: இந்த வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை 5,49,899 ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இன்சூரன்ஸ் கட்டணம் 29,503 ரூபாய் ஆகவும், லைஃப் டேக்ஸ் 71,487 ரூபாயாவும் இருக்கிறது. இந்த வரிசையில் சேஃப்டி டேக்ஸ் மற்றும் பதிவு கட்டணம் மற்றும் ஃபாஸ்டேக் கட்டணம் வழக்கம் போல முறையே 3,300 ரூபாய் மற்றும் 700 ரூபாயாக இருக்கிறது.
எனவே இந்த வேரியண்ட்டின் ஆன்-ரோடு விலை 6,54,889 ரூபாய் ஆகும். கூடுதல் ஆப்ஷனல் பலன்களை பொறுத்தவரையில் அடிப்படை ஆக்ஸஸரீஸ்களுக்கான கட்டணம் மற்றும் மாருதி சுஸுகி ரிவார்ட்ஸ் திட்டங்களுக்கான கட்டணம் வழக்கம் போல முறையே 13,067 ரூபாய் மற்றும் 885 ரூபாயாக உள்ளது.
இந்த வரிசையில் நீட்டிக்கப்பட்ட வாரண்டிக்கான கட்டணம் 9,051 ரூபாய் ஆகவும், சிசிபி ராயல் பிளாட்டினம் ஃப்யூயல் திட்டத்திற்கான கட்டணம் 2,844 ரூபாய் ஆகவும் உள்ளது. இந்த வகையில் பார்த்தால் கூடுதல் ஆப்ஷனல் பலன்களுக்கான கட்டணம் 25,847 ரூபாய் ஆகும். எனவே கூடுதல் ஆப்ஷனல் பலன்களுடன் சேர்த்து இந்த வேரியண்ட்டின் ஆன்-ரோடு விலை 6,80,736 ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஓரளவிற்கு குறைவான விலையில் ஒரு புதிய காரை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு மாருதி சுஸுகி ஈக்கோ நல்ல ஆப்ஷன் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து. ஈரோடு ஸ்ரீ சாரதாம்பாள் ஆட்டோமொபைல்ஸ் நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த செய்தி உருவாக்கப்பட்டுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.


Click it and Unblock the Notifications