மறுபிறவி எடுத்து வந்த ஆம்னி! 27 கிமீ மைலேஜ் குடுத்தாலும் விலை வெறும் 5.21 லட்சம் மட்டுமே! இத்தன பேர் போலாமா!

இந்தியாவில் கடந்த 2010ம் ஆண்டு மாருதி சுஸுகி ஈக்கோ (Maruti Suzuki Eeco) கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் கடந்த நிலையிலும், இன்னமும் ஒவ்வொரு மாதமும் மாருதி சுஸுகி ஈக்கோ காரின் விற்பனை மிகவும் சிறப்பாக இருந்து வருகிறது. இதற்கு நடப்பு 2026ம் ஆண்டு ஏப்ரல் மாதமும் விதிவிலக்கு அல்ல.

மாருதி சுஸுகி ஈக்கோ காரின் சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report), மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி பார்த்தால் நடப்பு 2026ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13,087 மாருதி சுஸுகி ஈக்கோ கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11,438 மாருதி சுஸுகி ஈக்கோ கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன.

Maruti Suzuki Eeco Airbags

அதாவது இம்முறை 1,649 மாருதி சுஸுகி ஈக்கோ கார்கள் தற்போது அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. மாருதி சுஸுகி ஆம்னி (Maruti Suzuki Omni) காருக்கு மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக மாருதி சுஸுகி ஈக்கோ காரை வாடிக்கையாளர்கள் கருதுகின்றனர். மாருதி சுஸுகி ஈக்கோ காரின் விற்பனை மிகவும் சிறப்பாக இருந்து வருவதற்கு இதுவே மிகவும் முக்கியமான காரணங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி ஈக்கோ காரின் ஆரம்ப விலை வெறும் 5.21 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலையும் கூட வெறும் 6.36 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. இவை தவிர மாருதி சுஸுகி ஈக்கோ காரில் 2 ஆம்புலன்ஸ் வேரியண்ட்களும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

Maruti Suzuki Eeco

அவற்றின் விலை முறையே 6.37 லட்ச ரூபாய் மற்றும் 8.02 லட்ச ரூபாயாக உள்ளன. இவை அனைத்துமே மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். மாருதி சுஸுகி ஈக்கோ காரின் வழக்கமான வேரியண்ட்கள் 5 சீட்டர் மற்றும் 6 சீட்டர் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதே நேரத்தில் அதன் ஆம்புலன்ஸ் வேரியண்ட்கள் 3 பயணிகள் மற்றும் 1 நோயாளி என 4 சீட்டர் ஆப்ஷன் உடன் விற்பனை செய்யப்படுகின்றன. மாருதி சுஸுகி ஈக்கோ காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.2 லிட்டர் சிஎன்ஜி இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options) வழங்கப்படுகின்றன.

இந்த இரண்டு இன்ஜின்கள் உடனும் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன்தான் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த காரில் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் வசதி இல்லை. இதில், பெட்ரோல்/மேனுவல் கியர் பாக்ஸ் மாடல் ஒரு லிட்டருக்கு 19.71 கிலோ மீட்டர் மைலேஜையும் (Mileage), சிஎன்ஜி/மேனுவல் கியர் பாக்ஸ் மாடல் ஒரு லிட்டருக்கு 26.78 கிலோ மீட்டர் மைலேஜையும் வழங்குவதாக மாருதி சுஸுகி நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மிகவும் குறைவான விலையில் அதிக மைலேஜ் வழங்க கூடிய அதே நேரத்தில் அதிகம் பேர் பயணம் செய்ய கூடிய வகையிலான ஒரு காரை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு மாருதி சுஸுகி ஈக்கோ மிகவும் ஏற்றது என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.

Article Published On: Tuesday, May 5, 2026, 12:49 [IST]
English summary
Maruti suzuki eeco sales report april 2026 13087 units sold
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+