மறுபிறவி எடுத்து வந்த மாருதி ஆம்னி! 27 கிமீ மைலேஜ்! 6 பேர் போகலாம்! ஆனா விலை இவ்ளோதானா!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் வாகனங்களில் ஒன்று மாருதி சுஸுகி ஈக்கோ (Maruti Suzuki Eeco). இது வேன் (Van) ரகத்தை சேர்ந்தது ஆகும். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி ஈக்கோ வேனின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 5.21 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது.

அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலையும் கூட வெறும் 6.36 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது. இவை தவிர இந்த வேனில் மேலும் 2 வேரியண்ட்களும் (Variants) விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அவை ஈக்கோ ஆம்புலன்ஸ் ஷெல் மற்றும் ஈக்கோ ஆம்புலன்ஸ் ஆகியவை ஆகும்.

Maruti Suzuki Eeco

இவற்றின் விலை முறையே 6.37 லட்ச ரூபாய் மற்றும் 8.02 லட்ச ரூபாயாக உள்ளது. இவை அனைத்துமே மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும். மாருதி சுஸுகி ஈக்கோ வேன், 5 சீட்டர் மற்றும் 6 சீட்டர் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதே சமயம் இதன் 2 ஆம்புலன்ஸ் வேரியண்ட்களும், 3 பயணிகள் மற்றும் 1 நோயாளி என 4 பேர் பயணம் செய்ய கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. மாருதி சுஸுகி ஈக்கோ வேன், விலை குறைவானது என்பதுடன், அதிக மைலேஜ் (Mileage) வழங்க கூடிய ஒன்றாகவும் திகழ்கிறது.

Maruti Suzuki Eeco Airbags

மாருதி சுஸுகி ஈக்கோ வேனின் சிஎன்ஜி வேரியண்ட்கள், ஒரு கிலோவிற்கு 26.8 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்க கூடியவையாக உள்ளன. இது மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அராய் மைலேஜ் (ARAI Mileage) ஆகும். குறைவான விலை, அதிகம் பேர் பயணம் செய்ய முடியும் மற்றும் சிறப்பான மைலேஜ் போன்ற காரணங்களால், மாருதி சுஸுகி ஈக்கோ வேனின் விற்பனை ஒவ்வொரு மாதமும் சிறப்பாக இருந்து வருகிறது.

இதற்கு கடந்த 2025ம் ஆண்டு டிசம்பர் மாதமும் விதிவிலக்கு அல்ல. மாருதி சுஸுகி ஈக்கோ வேனின் கடந்த 2025ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது. மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த சேல்ஸ் ரிப்போர்ட்படி பார்த்தால், கடந்த 2025ம் ஆண்டு டிசம்பர் மாதம், 11,899 மாருதி சுஸுகி ஈக்கோ வேன்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

ஆனால் கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் 11,678 மாருதி சுஸுகி ஈக்கோ வேன்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. அதாவது கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது, கடந்த 2025ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், 221 மாருதி சுஸுகி ஈக்கோ வேன்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இதேபோல் நடப்பு 2025-26ம் நிதியாண்டின் ஏப்ரல்-டிசம்பர் வரையிலான காலகட்டத்திலும், மாருதி சுஸுகி ஈக்கோ வேன் விற்பனையில் சிறப்பான வளர்ச்சியைதான் பதிவு செய்துள்ளது. அதாவது நடப்பு 2025-26ம் நிதியாண்டின் ஏப்ரல்-டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் 1,04,902 மாருதி சுஸுகி ஈக்கோ வேன்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

ஆனால் அதற்கு முந்தைய கடந்த 2024-25ம் நிதியாண்டின் ஏப்ரல்-டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் 1,02,520 மாருதி சுஸுகி ஈக்கோ வேன்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இந்த வகையில் பார்த்தால், 2,382 மாருதி சுஸுகி ஈக்கோ வேன்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மாருதி சுஸுகி ஈக்கோ வேன் கடந்த 2010ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து விற்பனையில் இருந்து வருகிறது. அதாவது மாருதி சுஸுகி ஈக்கோ இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு சுமார் 16 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதை மாருதி சுஸுகி ஆம்னியின் (Maruti Suzuki Omni) வாரிசு என குறிப்பிடலாம்.

இந்தியாவில் மாருதி சுஸுகி ஆம்னி கடந்த 1984ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. சுமார் 35 ஆண்டுகள் விற்பனை செய்யப்பட்ட நிலையில், மாருதி சுஸுகி ஆம்னியின் உற்பத்தி கடந்த 2019ம் ஆண்டு நிறுத்தப்பட்டது. அப்போதில் இருந்து மாருதி சுஸுகி ஆம்னிக்கு மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாகவும், மாருதி சுஸுகி ஈக்கோ திகழ்ந்து வருகிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, January 8, 2026, 13:09 [IST]
English summary
Maruti suzuki eeco sales report december 2025 11899 units sold
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+