மாருதி ஆம்னியின் வாரிசு! 27 கிமீ மைலேஜ்! குடும்பத்தையே ஒன்னா ஏத்தீட்டு போகலாம்! விலை இவ்ளோதானா!
இந்திய சந்தையில் மாருதி சுஸுகி ஆம்னி (Maruti Suzuki Omni) இல்லாத குறையை மாருதி சுஸுகி ஈக்கோ (Maruti Suzuki Eeco) நிவர்த்தி செய்து வருகிறது. மாருதி சுஸுகி ஆம்னிக்கு மாற்றாக கருதப்படுவதால், மாருதி சுஸுகி ஈக்கோவின் விற்பனை மிகவும் சிறப்பாக இருந்து வருகிறது. இதற்கு நடப்பு 2026ம் ஆண்டு ஜனவரி மாதமும் விதிவிலக்கு அல்ல.
மாருதி சுஸுகி ஈக்கோ காரின் சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி பார்த்தால் நடப்பு 2026ம் ஆண்டு ஜனவரி மாதம் 11,914 மாருதி சுஸுகி ஈக்கோ கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் 11,250 மாருதி சுஸுகி ஈக்கோ கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன.

அதாவது கடந்த 2025ம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடும்போது, நடப்பு 2026ம் ஆண்டு ஜனவரி மாதத்தில், 664 மாருதி சுஸுகி ஈக்கோ கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் மாருதி சுஸுகி ஈக்கோ கார் விற்பனையில் 5.90 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது. இது குறித்து ரஸ்லேன் தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி ஈக்கோ காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 5.21 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலையும் கூட வெறும் 6.36 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது. மாருதி சுஸுகி ஈக்கோ கார் 5 சீட்டர் மற்றும் 6 சீட்டர் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இவை தவிர மாருதி சுஸுகி ஈக்கோ காரின் ஆம்புலன்ஸ் ஷெல் மற்றும் ஆம்புலன்ஸ் என்ற 2 வேரியண்ட்களும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அவற்றின் விலை முறையே 6.37 மற்றும் 8.01 லட்ச ரூபாயாக உள்ளது. இவை அனைத்துமே மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.
மாருதி சுஸுகி ஈக்கோ காரின் பெட்ரோல் வேரியண்ட்கள் ஒரு லிட்டருக்கு 19.71 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்க கூடியவையாக உள்ளன. அதே நேரத்தில் இந்த காரின் சிஎன்ஜி வேரியண்ட்கள் ஒரு கிலோவிற்கு 26.78 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை மாருதி சுஸுகி நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படும் அராய் மைலேஜ் (ARAI Mileage) ஆகும்.
மாருதி சுஸுகி ஈக்கோ கார் மொத்தம் 5 கலர் ஆப்ஷன்களில் (Colour Options) விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அத்துடன் ஸ்டாண்டர்டாக அனைத்து வேரியண்ட்களிலும் 6 ஏர்பேக்குகளும் மாருதி சுஸுகி ஈக்கோ காரில் கொடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி ப்ரோகிராம், இபிடி உடன் ஏபிஎஸ் போன்ற பாதுகாப்பு வசதிகளும் (Safety Features) இந்த காரில் வழங்கப்பட்டுள்ளன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் மிகவும் குறைவான விலையில், அதே நேரத்தில் அதிகம் பேர் பயணம் செய்ய கூடிய மேலும் சிறப்பான மைலேஜ் வழங்க கூடிய ஒரு காரை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு, மாருதி சுஸுகி ஈக்கோ மிகச்சிறந்த ஆப்ஷனாக இருக்கும் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.


Click it and Unblock the Notifications








