மாருதி எர்டிகாவை விட 3.33 லட்சம் குறைவான விலை! இந்திய மார்க்கெட்டை மிரள விடும் ஆம்னியின் வாரிசு!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மாருதி சுஸுகி ஈக்கோ (Maruti Suzuki Eeco). அதிகம் பேர் பயணம் செய்ய முடியும் என்பதாலும், மிகவும் விலை குறைவானது என்பதாலும், இந்திய சந்தையில் மாருதி சுஸுகி ஈக்கோ காரின் விற்பனை, ஒவ்வொரு மாதமும் மிகவும் சிறப்பாக இருந்து வருகிறது.

இதற்கு நடப்பு 2026ம் ஆண்டு மார்ச் மாதமும் விதிவிலக்கு அல்ல. மாருதி சுஸுகி நிறுவனம் நடப்பு 2026ம் ஆண்டு மார்ச் மாதம் 11,333 ஈக்கோ கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2025ம் ஆண்டு மார்ச் மாதம் வெறும் 10,409 மாருதி சுஸுகி ஈக்கோ கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன.

Maruti Suzuki Eeco

அதாவது இம்முறை 924 மாருதி சுஸுகி ஈக்கோ கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் மாருதி சுஸுகி ஈக்கோ கார் விற்பனையில் 9 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது. மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) மூலமாக இந்த தகவல் தெரிய வந்துள்ளது.

மாருதி சுஸுகி ஈக்கோ கார் 5 சீட்டர் மற்றும் 6 சீட்டர் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 5.21 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலையும் கூட 6.36 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது.

Maruti Suzuki Eeco Airbags

இதுதவிர ஆம்புலன்ஸ் ஷெல் மற்றும் ஆம்புலன்ஸ் என 2 வேரியண்ட்களும் இந்த காரில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அவற்றின் விலை முறையே 6.37 லட்ச ரூபாய் ஆகவும், 8.02 லட்ச ரூபாய் ஆகவும் உள்ளது. மாருதி சுஸுகி ஈக்கோ காரின் 6 சீட்டர் மாடல் ஒரே ஒரு வேரியண்ட்டில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன் விலை 5.47 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது.

நேரடி போட்டி மாடல் இல்லை என்றாலும் கூட, 7 பேர் பயணம் செய்ய கூடிய மாருதி சுஸுகி எர்டிகா காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டை விட இது 3.33 லட்ச ரூபாய் குறைவு ஆகும். மாருதி சுஸுகி எர்டிகா காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 8.80 லட்ச ரூபாயாக உள்ளது. இவை அனைத்துமே மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் மாருதி சுஸுகி ஈக்கோ காருக்கு நேரடி போட்டி என எந்த மாடலும் இல்லை. இருப்பினும் இது மாருதி சுஸுகி ஆம்னியின் (Maruti Suzuki Omni) வாரிசாக கருதப்படுகிறது. குறைவான விலையில், அதிகம் பேர் பயணம் செய்ய கூடிய அதே நேரத்தில் அதிக மைலேஜ் வழங்க கூடிய ஒரு காரை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு, மாருதி சுஸுகி ஈக்கோ மிகச்சிறந்த ஆப்ஷன் ஆகும்.

மாருதி சுஸுகி ஈக்கோ மிகவும் விலை குறைவானது என்றாலும் கூட, அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகள் வழங்கப்படுகின்றன. அத்துடன் இபிடி உடன் ஏபிஎஸ், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி ப்ரோகிராம் போன்ற பாதுகாப்பு வசதிகளும் (Safety Features) மாருதி சுஸுகி ஈக்கோ காரில் கொடுக்கப்பட்டுள்ளன. இவை மாருதி சுஸுகி ஈக்கோ காரின் முக்கியமான ப்ளஸ் பாயிண்ட்கள் ஆகும்.

More from DriveSpark

Article Published On: Monday, April 6, 2026, 23:36 [IST]
English summary
Maruti suzuki eeco sales report march 2026 9 per cent growth
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+