7- 8 பேர் பயணிக்கக்கூடிய மாருதி காருக்கு தான் எப்போவுமே மவுசு அதிகமாக இருக்கு! இன்னோவாவிற்கே 3வது இடம் தான்!

இந்தியாவில் MPV கார்களுக்கான மார்க்கெட் எந்த அளவிற்கு உள்ளது என்பதை நான் கூற வேண்டியது இருக்காது என நினைக்கிறேன். ஏனெனில், அந்த அளவிற்கு அளவில் பெரியதான MPV கார்களை விரும்பி வாங்கும் மக்கள் ஏராளமானோர் உள்ளனர். குறிப்பாக, இதன் மூலமாக மாருதி சுஸுகி நிறுவனம் நன்றாக கல்லா கட்டி வருகிறது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

MPV கார்கள் என்றால், அதிக பயணிகளை ஏற்றிச் செல்லும் அளவிற்கு நன்கு பெரியதான உடலமைப்பு மற்றும் நன்கு விசாலமான உட்புறம் கொண்ட கார்கள் ஆகும். இத்தகைய MPV கார்கள் கிட்டத்தட்ட அனைத்து கார் நிறுவனங்களில் இருந்தும் விற்பனை செய்யப்படுகின்றன. குறிப்பாக, மாருதி சுஸுகி நிறுவனம் MPV கார் மார்க்கெட்டில் பெரிதும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

most selling mpv cars in india

மாருதி சுஸுகி நிறுவனத்தின் எர்டிகா மற்றும் ஈக்கோ கார் மாடல்கள் MPV கார் மார்க்கெட்டில் விற்பனையில் முன்னணியில் உள்ளன. இதில் குறிப்பாக, எர்டிகா ஆனது இந்தியாவின் நம்பர் ஒன் MPV கார் மாடலாக விளங்குகிறது. எர்டிகா கடந்த 2026 மே மாதத்தில் மொத்தம் 20 ஆயிரத்து 350 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

அதுவே, கடந்த 2025ஆம் ஆண்டில் இதே மே மாதத்தில் 16 ஆயிரத்து 140 எர்டிகா கார்களை மட்டுமே மாருதி சுஸுகி விற்பனை செய்திருந்தது. இந்த வகையில் பார்த்தால், எர்டிகா கார்களின் விற்பனை ஆனது 26% அதிகரித்துள்ளது. அதேபோல், கடந்த ஏப்ரல் மாதத்திலும் 19 ஆயிரத்து 63 எர்டிகா கார்களை மட்டுமே மாருதி சுஸுகி விற்பனை செய்திருந்தது.

most selling mpv cars in india

இந்த வகையில், ஏப்ரலை காட்டிலும் மே மாதத்தில் எர்டிகா கார்கள் விற்பனை 7% அதிகரித்துள்ளது. எர்டிகாவிற்கு அடுத்து அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் MPV காராக மாருதி சுஸுகி ஈக்கோ இரண்டாவது இடத்தில் உள்ளது. அதாவது, இரண்டாவது இடத்திலும் மாருதி சுஸுகியின் தயாரிப்பே உள்ளது. கடந்த மாதத்தில் மொத்தம் 13 ஆயிரத்து 240 ஈக்கோ வாகனங்களை மாருதி சுஸுகி விற்பனை செய்துள்ளது.

ஆனால், 2025 மே மாதத்தில் 12 ஆயிரத்து 327 ஈக்கோ வாகனங்களையும், நடப்பாண்டு ஏப்ரல் மாதத்தில் 13 ஆயிரத்து 87 ஈக்கோ வாகனங்களையும் மட்டுமே மாருதி சுஸுகி விற்பனை செய்திருந்தது. டொயோட்டாவின் பிரபலமான இன்னோவா இந்த வரிசையில் 3வது இடத்தில் உள்ளது. மார்க்கெட்டில் இன்னோவா க்ரிஸ்ட்டா மற்றும் இன்னோவா ஹைகிராஸ் என இரு விதமான இன்னோவா கார்கள் விற்பனை செய்யப்படும் நிலையில், அவை இரண்டும் மொத்தமாக கடந்த மாதத்தில் 10 ஆயிரத்து 325 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

ஆனால், 2025 மே மாதத்தில் 8,882 இன்னோவா கார்களும், 2026 ஏப்ரல் மாதத்தில் 9,630 இன்னோவா கார்களும் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில், 2025 மே மாதத்தை காட்டிலும் 2026 மே மாதத்தில் இன்னோவா கார்களின் விற்பனை 16% அதிகரித்துள்ளது. அதுவே, இதற்கடுத்துள்ள கியா கேரன்ஸ் MPV கார்களின் விற்பனை சுமார் 37% அதிகரித்துள்ளது.

MPV Car Name May-26 Apr-26 May-25
Maruti Ertiga 20,350 19,063 16,140
Maruti Eeco 13,240 13,087 12,327
Toyota Innova (Crysta+Hycross) 10,325 9,630 8,882
Kia Carens (Includes Clavis) 6,208 5,465 4,524
Maruti XL6 3,770 3,527 3,507
Toyota Rumion 2,119 2,585 1,917
Renault Triber 1,890 1,917 1,411
Nissan Gravite 1,283 1,428
Maruti Invicto 301 237 223
Total 59,486 56,702 48,931

2025 மே மாதத்தில் வெறும் 4,524 கேரன்ஸ் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில், நடப்பாண்டு மே மாதத்தில் 6,208 கேரன்ஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதற்கடுத்து 5வது இடத்தில் மீண்டும் ஒரு மாருதி சுஸுகி MPV காராக XL6 3,770 யூனிட்கள் விற்பனை உடன் உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவற்றிற்கு அடுத்துள்ள நிலைகளில் டொயோட்டா, ரெனால்ட், நிசான் உள்ளிட்ட நிறுவனங்களின் MPV கார்கள் உள்ளதை மேலே அட்டவணையில் காணலாம். மாருதி சுஸுகி நிறுவனம் மிகவும் எதிர்பார்ப்போடு அறிமுகம் செய்த இன்விக்டோ இன்னும் விற்பனையில் பெரியதாக சோபிக்க துவங்கவில்லை. தற்போதைக்கு இந்தியாவில் 9 MPV கார் மாடல்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அவை மொத்தமாக கடந்த மாதத்தில் 59 ஆயிரத்து 486 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

Article Published On: Sunday, June 21, 2026, 14:34 [IST]
English summary
Maruti suzuki ertiga as top most selling mpv car in india as per may 2026 sales
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out