எர்டிகா போல் இன்னொரு 7 சீட்டர் காரை களமிறக்கும் மாருதி... ஆனா ஒரு ட்விஸ்ட்...
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga). 7 சீட்டர் எம்பிவி ரக காரான மாருதி சுஸுகி எர்டிகாவின் நடப்பு 2026ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report), ரஸ்லேன் தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது.
இதன்படி பார்த்தால் நடப்பு 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19,063 மாருதி சுஸுகி எர்டிகா கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 2925ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15,780 மாருதி சுஸுகி எர்டிகா கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. அதாவது இம்முறை 3,283 மாருதி சுஸுகி எர்டிகா கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இது 20.80 சதவீத வளர்ச்சி ஆகும். இதன் மூலம் நடப்பு 2026ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்திய சந்தையில் அதிகமாக விற்பனையான டாப் 10 கார்களின் (Top 10 Cars April 2026) பட்டியலில், மாருதி சுஸுகி எர்டிகா 3வது இடத்தை பிடித்துள்ளது. இந்த பட்டியலின் முதல் 2 இடங்களில் மாருதி சுஸுகி டிசையர் (Maruti Suzuki Dzire) மற்றும் டாடா பன்ச் (Tata Punch) ஆகிய கார்கள் உள்ளன.
இந்த வரிசையில் மூன்றாவது இடம் பிடித்துள்ள மாருதி சுஸுகி எர்டிகா காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 8.80 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. இந்திய சந்தையில் மாருதி சுஸுகி நிறுவனம் தற்போதைய நிலையில் எர்டிகா மட்டுமல்லாது, மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 (Maruti Suzuki XL6) என்ற மற்றொரு எம்பிவி காரையும் விற்பனை செய்து வருகிறது.

இந்த வரிசையில் மேலும் ஒரு எம்பிவி காரை மாருதி சுஸுகி நிறுவனம் கூடிய விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. ஆனால் இது எர்டிகா அல்லது எக்ஸ்எல்6 போல் ஐசி இன்ஜின் மூலம் இயங்க கூடியது அல்ல. அது எலெக்ட்ரிக் கார் ஆகும். இந்திய சாலைகளில் இதன் சோதனை ஓட்டம் தற்போது மிகவும் ரகசியமாக நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனவே 7 பேர் பயணம் செய்ய கூடிய மாருதி சுஸுகி நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் கார் கூடிய விரைவில் விற்பனைக்கு வரும் என நாம் நம்பலாம். இது இந்திய சந்தையில் மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ள 2வது எலெக்ட்ரிக் கார் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
முன்னதாக மாருதி சுஸுகி இ விட்டாரா (Maruti Suzuki e Vitara) என்ற எலெக்ட்ரிக் காரை, மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. வெகு சமீபத்தில்தான் மாருதி சுஸுகி இ விட்டாரா எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு களமிறக்கப்பட்டது. இதை தொடர்ந்து மாருதி சுஸுகி நிறுவனம் தனது எலெக்ட்ரிக் எம்பிவி காரை விற்பனைக்கு அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மாருதி சுஸுகி எலெக்ட்ரிக் எம்பிவி காரின் வருகை, இந்திய சந்தையில் கியா கேரன்ஸ் க்ளாவிஸ் இவி (Kia Carens Clavis EV) போன்ற எலெக்ட்ரிக் எம்பிவி ரக கார்களுக்கு எல்லாம், விற்பனையில் மிக கடுமையான நெருக்கடிகளை ஏற்படுத்தும் என டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் கருதுகிறது.
கடைசி 3 பத்திகளில் கூடுதல் தகவல்கள் சேர்க்கப்பட்டுள்ளன.


Click it and Unblock the Notifications