மாருதி எர்டிகாவை விட குறைந்த விலையில் கொண்டுவரும் போதே டவுட் வந்துச்சு! புதிய நிசான் சிஎன்ஜி காரை வாங்கலாமா?

மாருதி சுஸுகி நிறுவனத்தில் இருந்து அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படும் கார்களுள் ஒன்றாக எர்டிகா (Ertiga) உள்ளது. அளவில் பெரியதான எம்பிவி (MPV) ரக காராக இருப்பினும், ஒவ்வொரு மாதத்திலும் 10 ஆயிரத்தில் இருந்து 15 ஆயிரம் எர்டிகா கார்கள் அசால்ட்டாக விற்பனை செய்யப்படுகின்றன. இதனாலேயே எர்டிகா எஸ்-சிஎன்ஜி (Ertiga S-CNG) காருக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இதற்கு போட்டியாக, நிசான் (Nissan) நிறுவனம் அதன் கிராவைட் (Gravite) எம்பிவி காரில் புதியதாக சிஎன்ஜி ஆப்ஷனை அறிமுகப்படுத்தி உள்ளது. கடந்த மே 4ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்ட கிராவைட் சிஎன்ஜி கார் ஆனது எர்டிகா சிஎன்ஜி காரை விட எந்த அளவிற்கு சிறந்ததாக விளங்குகிறது என்பதையும், என்ஜினில் இரண்டிற்கும் இடையேயான வித்தியாசங்களை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

maruti suzuki ertiga s-cng vs new nissan gravite cng

என்ஜின் & மைலேஜ்: என்ஜினில் இந்த இரு சிஎன்ஜி கார்களுக்கும் இடையே பெரிய வித்தியாசம் உள்ளது. கிராவைட் சிஎன்ஜி காரில் 1 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. சிஎன்ஜி எரிபொருளில் இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 71 பிஎச்பி மற்றும் 96 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக் கூடியது ஆகும்.

கிராவைட் சிஎன்ஜி காரை 5-ஸ்பீடு மேனுவல் அல்லது நிசானின் இ.இசட் ஷிஃப்ட் ஆட்டோமேட்டட் மேனுவல் கியர்பாக்ஸ் உடன் வாங்கலாம். கிராவைட் சிஎன்ஜி காரில் அதிகப்பட்சமாக ஒரு கிலோ சிஎன்ஜி-க்கு 24கிமீ மைலேஜை பெறலாம் என நிசான் தெரிவித்துள்ளது. எர்டிகா எஸ்-சிஎன்ஜி காரில் பெரிய அளவிலான 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜினை மாருதி சுஸுகி வழங்குகிறது.

maruti suzuki ertiga s-cng vs new nissan gravite cng

ஆனால், என்ஜின் உடன் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனை மட்டுமே பெற முடியும். எர்டிகா எஸ்-சிஎன்ஜி காரில் அதிகப்பட்சமாக 86.6 பிஎச்பி மற்றும் 121.5 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலையும், ஒரு கிலோ சிஎன்ஜி-க்கு 26.11கிமீ வரையிலான மைலேஜையும் பெறலாம்.

அளவுகள்: நீளத்தை பொறுத்தவரையில், கிராவைட் சிஎன்ஜி காரை விட சுமார் 40 செ.மீ கூடுதல் நீளமானதாக எர்டிகா எஸ்-சிஎன்ஜி விளங்குகிறது. இதனால், முன் & பின் சக்கரங்களுக்கு இடையேயான தூரமும் எர்டிகாவில் அதிகமாக உள்ளது. இதன் விளைவாக, எர்டிகா காரினுள் கேபினில் விசாலமான இடவசதி கிடைக்கிறது. குறிப்பாக, கடைசி 3வது இருக்கை வரிசையில் அமர்பவர்கள் சவுகரியமாக அமர முடிகிறது.

சஸ்பென்ஷன் & சிஎன்ஜி டேங்க்: கிராவைட் காரில் சஸ்பென்ஷனுக்கு முன்பக்கத்தில் மக்பெர்சன் சுருள்களும், பின்பக்கத்தில் முறுக்கப்பட்ட பீம் அமைப்பும் வழங்கப்படுகிறது. கிராவைட் சிஎன்ஜி காரில் பின்பக்கத்தில் பொருட்களை வைக்கும் பகுதியில் 25 லிட்டர்கள் கொள்ளளவில் இரு சிஎன்ஜி சிலிண்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. எர்டிகா எஸ்-சிஎன்ஜி காரிலும் முன்பக்க சஸ்பென்ஷனுக்கு மக்பெர்சன் சுருள்கள் வழங்கப்படுகின்றன.

ஆனால், பின்பக்க சஸ்பென்ஷனுக்கு இந்த கார் வலிமையான பீம் செட்-அப்பை பெறுகிறது. எர்டிகா எஸ்-சிஎன்ஜி காரில் இரு சிஎன்ஜி டேங்குகள் இல்லாமல் ஒரே டேங்க் ஆனது சுமார் 60 லிட்டர்கள் கொள்ளளவில் வாங்கப்படுகிறது. இதனால், சிஎன்ஜி டேங்கை ஃபுல் செய்தால் எர்டிகா எஸ்-சிஎன்ஜி காரில் அதிக தொலைவிற்கு பயணிக்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி சுஸுகி எர்டிகா எஸ்-சிஎன்ஜி காரை காட்டிலும் குறைந்த விலையில் கிராவைட் சிஎன்ஜி கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இன்னும் சொல்லப்போனால், இந்தியாவிலேயே குறைந்த விலையில் 7 இருக்கைகள் உடன் கிடைக்கும் சிஎன்ஜி கார் கிராவைட் சிஎன்ஜி ஆகும். அதேநேரம், எர்டிகா எஸ்-சிஎன்ஜி காரில் அதிகப்படியான செயல்படுதிறன் மற்றும் தொழிற்நுட்ப வசதிகள் கிடைப்பதால், இந்த இரண்டில் ஒன்றை தேர்வு செய்வது சற்று குழப்பமானதே.

Article Published On: Thursday, May 7, 2026, 21:37 [IST]
English summary
Maruti suzuki ertiga s cng competes with new nissan gravite cng check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+