மாருதி எர்டிகாவை விட ரூ.3 லட்சம் குறைவான விலையில் 7 சீட்டர் கார்! மார்க்கெட்ட மிரள விட போகும் ஜப்பான் நிறுவனம்
இந்தியாவிலேயே மிகவும் அதிகமாக விற்பனையாகி கொண்டுள்ள எம்பிவி ரக கார் எது? என கேட்டால், மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga) என பச்சை குழந்தை கூட சரியாக கூறி விடும். நடப்பு 2026ம் ஆண்டு ஜனவரி மாதமும், இந்தியாவில் மிகவும் அதிகமாக விற்பனையான எம்பிவி கார் என்ற பெருமையை, மாருதி சுஸுகி எர்டிகா தக்க வைத்து கொண்டுள்ளது.
மாருதி சுஸுகி எர்டிகா காரின் சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report), ரஸ்லேன் தளத்தில் வெளியாகியுள்ளது. இதன்படி பார்த்தால், நடப்பு 2026ம் ஆண்டு ஜனவரி மாதம் 17,892 மாருதி சுஸுகி எர்டிகா கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் வெறும் 14,248 மாருதி சுஸுகி எர்டிகா கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன.

அதாவது கடந்த 2025ம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடும்போது, நடப்பு 2026ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 3,644 மாருதி சுஸுகி எர்டிகா கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் மாருதி சுஸுகி எர்டிகா கார் விற்பனையில் 25.58 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது.
இந்த சிறப்பான வளர்ச்சியின் மூலமாக, நடப்பு 2026ம் ஆண்டு ஜனவரி மாதமும், இந்தியாவில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட எம்பிவி கார் என்ற பெருமையை மாருதி சுஸுகி எர்டிகா தக்க வைத்து கொண்டுள்ளது. அதே சமயம் நடப்பு 2026ம் ஆண்டு இந்தியாவில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 கார்களின் பட்டியலில் (Top 10 Cars January 2026), மாருதி சுஸுகி எர்டிகாவிற்கு 5வது இடம் கிடைத்துள்ளது.

இந்த பட்டியலில் முதல் 4 இடங்களில் முறையே டாடா நெக்ஸான், மாருதி சுஸுகி டிசையர், டாடா பன்ச் மற்றும் ஹூண்டாய் க்ரெட்டா ஆகிய கார்கள் உள்ளன. இந்த வரிசையில் 5வது இடம் பிடித்துள்ள மாருதி சுஸுகி எர்டிகா காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 8.80 லட்ச ரூபாயாக உள்ளது.
அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 12.94 லட்ச ரூபாயாக உள்ளது. இவை அனைத்துமே மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். கூடிய விரைவிலேயே மாருதி சுஸுகி எர்டிகா காருக்கு போட்டியாக ஜப்பானை சேர்ந்த நிறுவனத்தின் தயாரிப்பு ஒன்று விற்பனைக்கு வரவுள்ளது.
அது நிஸான் க்ராவைட் (Nissan Gravite) ஆகும். இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள நிஸான் க்ராவைட் கார், வரும் பிப்ரவரி 17ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதன் ஆரம்ப விலை அனேகமாக வெறும் 5.75 லட்ச ரூபாய் அல்லது 6 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே மாருதி சுஸுகி எர்டிகாவிற்கு இது விற்பனையில் நெருக்கடிகளை ஏற்படுத்தலாம்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்தியாவின் 7 சீட்டர் எம்பிவி கார் செக்மெண்ட்டில் மாருதி சுஸுகி எர்டிகா காருக்கு போட்டியாக நிஸான் க்ராவைட் வரவுள்ளது. ஆனால் இடவசதி போன்ற விஷயங்களில் எல்லாம், மாருதி சுஸுகி எர்டிகாவிற்கு இணையாக நிஸான் க்ராவைட் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே மாருதி சுஸுகி எர்டிகாவே தொடர்ந்து இந்தியாவின் நம்பர்-1 எம்பிவி காராக இருக்கும் என நாங்கள் கருதுகிறோம்.


Click it and Unblock the Notifications








