ஒரு கிலோ மீட்டர் ஓட்றதுக்கு வெறும் 1 ரூபா மட்டுமே செலவு! டாடா, ஹூண்டாயை கதற விடும் மாருதியின் புது கார்!
இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனமாக மாருதி சுஸுகி (Maruti Suzuki) இருந்து வருகிறது. ஆனால் மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார்கள், இந்தியா மட்டுமல்லாது, உலகின் பல்வேறு நாடுகளிலும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. உலகின் 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு, இந்தியாவில் இருந்து மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இதன் காரணமாக இந்தியாவின் உள்நாட்டு விற்பனையில் முழுமையாக ஆதிக்கம் செலுத்துவதை போல், ஏற்றுமதியிலும் மாருதி சுஸுகி நிறுவனமே ஆதிக்கம் செலுத்தி கொண்டுள்ளது. இதற்கு நடப்பு 2026ம் ஆண்டு ஜனவரி மாதம் ஒரு உதாரணம் ஆகும். நடப்பு 2026ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவில் இருந்து அதிக கார்களை ஏற்றுமதி செய்த டாப்-10 நிறுவனங்களின் பட்டியல், ரஸ்லேன் தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது.

இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது மாருதி சுஸுகி ஆகும். கடந்த 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் மாருதி சுஸுகி நிறுவனம் 26,781 கார்களை மட்டுமே இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்திருந்தது. ஆனால் இந்த எண்ணிக்கையானது, நடப்பு 2026ம் ஆண்டு ஜனவரி மாதம் 50,716 ஆக உயர்ந்துள்ளது.
அதாவது கடந்த 2025ம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடும்போது, நடப்பு 2026ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 23,935 கார்களை மாருதி சுஸுகி நிறுவனம் அதிகமாக ஏற்றுமதி செய்து அசத்தியுள்ளது. இது 89.37 சதவீத வளர்ச்சி ஆகும். மாருதி சுஸுகி நிறுவனத்தின் பல்வேறு கார்களுக்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு இருக்கிறது.

இதில், மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் (Maruti Suzuki Fronx), மாருதி சுஸுகி ஜிம்னி (Maruti Suzuki Jimny), மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ (Maruti Suzuki S-presso), மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift) போன்றவை எல்லாம் குறிப்பிடத்தக்கவை ஆகும். அத்துடன் இந்திய சந்தையில் புதிதாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள மாருதி சுஸுகி இ விட்டாரா (Maruti Suzuki e Vitara) எலெக்ட்ரிக் காருக்கும் வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு இருக்கிறது.
மாருதி சுஸுகி நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் காரான இ விட்டாரா, கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்புதான் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பாகவே, இந்தியாவில் இருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கும் மாருதி சுஸுகி இ விட்டாரா எலெக்ட்ரிக் கார் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
இந்திய சந்தையில் மாருதி சுஸுகி இ விட்டாரா எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 15.99 லட்ச ரூபாயாக மட்டுமே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதுவே பாஸ் (BAAS - Battery As A Service) முறையில் வாங்கினால், மாருதி சுஸுகி இ விட்டாரா எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 10.99 லட்ச ரூபாய் மட்டுமே.
ஆனால் மாருதி சுஸுகி இ விட்டாரா எலெக்ட்ரிக் காரை பாஸ் முறையில் வாங்கினால், ஒரு கிலோ மீட்டருக்கு 3.99 ரூபாயை நீங்கள் கட்டணமாக செலுத்த வேண்டும். மாருதி சுஸுகி இ விட்டாரா எலெக்ட்ரிக் காரில், லெவல் 2 அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems), சன்ரூஃப், 7 ஏர்பேக்குகள், வயர்லெஸ் செல்போன் சார்ஜர் மற்றும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் போன்ற பல்வேறு வசதிகள் (Features) வழங்கப்படுகின்றன.
மாருதி சுஸுகி இ விட்டாரா எலெக்ட்ரிக் காரின் 49 kWh பேட்டரி (Battery) ஆப்ஷனின் டிரைவிங் ரேஞ்ச் (Driving Range) 440 கிலோ மீட்டர்கள் எனவும், 61 kWh பேட்டரி ஆப்ஷனின் டிரைவிங் ரேஞ்ச் 543 கிலோ மீட்டர்கள் எனவும் மாருதி சுஸுகி நிறுவனம் தெரிவித்துள்ளது. எனவே வாடிக்கையாளர்கள் வழங்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக மாருதி சுஸுகி இ விட்டாரா எலெக்ட்ரிக் கார் கருதப்படுகிறது.
மாருதி சுஸுகி இ விட்டாரா எலெக்ட்ரிக் காரை ஒரு கிலோ மீட்டர் இயக்குவதற்கு மின்சாரத்திற்காக சுமார் 1 ரூபாய் 20 பைசா முதல் அதிகபட்சமாக 2 ரூபாய் வரை மட்டுமே செலவு (Running Cost) ஆகும் என ஆட்டோகார் ப்ரொஃபஷனல் தளம் தெரிவித்துள்ளது. வீட்டு மின்சாரம் மற்றும் பொது இடங்களில் கிடைக்கும் ஃபாஸ்ட் சார்ஜிங் ஸ்டேஷன் மின்சாரம் ஆகியவற்றை பொறுத்து, இந்த செலவு சற்றே மாறுபடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
மாருதி சுஸுகி இ விட்டாரா எலெக்ட்ரிக் காரின் வருகை, டாடா நெக்ஸான் இவி, ஹூண்டாய் க்ரெட்டா எலெக்ட்ரிக், எம்ஜி விண்ட்சர் இவி மற்றும் எம்ஜி இஸட்எஸ் இவி போன்ற எலெக்ட்ரிக் கார்களுக்கு எல்லாம் விற்பனையில் மிக கடுமையான நெருக்கடிகளை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மாருதி சுஸுகி இ விட்டாரா எலெக்ட்ரிக் கார் மட்டுமல்லாது, மாருதி சுஸுகி நிறுவனத்தின் பெரும்பாலான தயாரிப்புகள், வாடிக்கையாளர்கள் வழங்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்தவையாக இருக்கின்றன. இதன் காரணமாகவே மாருதி சுஸுகி நிறுவனத்தால் உள்நாடு மற்றும் வெளிநாடு என அனைத்து இடங்களிலும் விற்பனையில் ஜொலிக்க முடிகிறது.


Click it and Unblock the Notifications








