ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 35 கிமீ மைலேஜ் தரும் காரை களமிறக்கும் மாருதி! டாடா, மஹிந்திராலாம் இனி அவ்ளோதான்!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் (Maruti Suzuki Fronx). சப்-4 மீட்டர் க்ராஸ்ஓவர் (Sub-4-metre Crossover) ரகத்தை சேர்ந்த மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் கார், கடந்த 2023ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

சுமார் 3 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், மாருதி சுஸுகி நிறுவனம் தற்போது ஃப்ரான்க்ஸ் காரின் வெகுவாக அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் (Facelift) மாடலை, இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. இது குறித்த விரிவான தகவல்களின் தொகுப்புதான் இந்த செய்தி.

Maruti Fronx Side Design

தற்போது விற்பனையில் உள்ள மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரில் மொத்தம் 3 இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options) வழங்கப்படுகின்றன. அவை 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.2 லிட்டர் கே-சீரிஸ் ட்யூயல் ஜெட் ட்யூயல் விவிடி பெட்ரோல் மற்றும் 1.2 லிட்டர் கே-சீரிஸ் ட்யூயல் ஜெட் ட்யூயல் விவிடி சிஎன்ஜி இன்ஜின் ஆகியவை ஆகும்.

இதில், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் உடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் (Gear Box Options) வழங்கப்படுகின்றன. அதே நேரத்தில் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் உடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

Maruti Suzuki Fronx

மறுபக்கம் 1.2 லிட்டர் சிஎன்ஜி இன்ஜின் உடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது. இதில், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல்/மேனுவல் மாடல் ஒரு லிட்டருக்கு 21.5 கிலோ மீட்டர் மைலேஜையும், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல்/ஆட்டோமேட்டிக் மாடல் 20.01 கிலோ மீட்டர் மைலேஜையும் வழங்குகின்றன.

அதே நேரத்தில் 1.2 லிட்டர் பெட்ரோல்/மேனுவல் மாடல் ஒரு லிட்டருக்கு 21.79 கிலோ மீட்டர் மைலேஜையும், 1.2 லிட்டர் பெட்ரோல்/ஏஎம்டி மாடல் ஒரு லிட்டருக்கு 22.89 கிலோ மீட்டர் மைலேஜையும் வழங்க கூடியவையாக உள்ளன. மறுபக்கம் 1.2 லிட்டர் சிஎன்ஜி/மேனுவல் மாடல் ஒரு கிலோவிற்கு 28.51 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்க கூடியதாக உள்ளது.

இவை அனைத்தும் மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அராய் மைலேஜ் (ARAI Mileage) ஆகும். ஆனால் மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் இவற்றுடன் புதிய ஸ்ட்ராங் ஹைப்ரிட் இன்ஜின் ஆப்ஷன் ஒன்றும் வழங்கப்படலாம் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் மற்றும் மாருதி சுஸுகி டிசையர் ஆகிய கார்களில் தற்போது 1.2 லிட்டர் Z12E பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. இந்த இன்ஜினை அடிப்படையாக கொண்ட ஸ்ட்ராங் ஹைப்ரிட் தொழில்நுட்பம்தான் மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் மைலேஜ் ஒரு லிட்டருக்கு 30-35 கிலோ மீட்டர்கள் என்ற அளவில் இருக்கலாம் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே இந்த புதிய இன்ஜின் ஆப்ஷன்தான் மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் மிகப்பெரிய அப்டேட் ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரின் டிசைன் (Design) இன்னும் ஃப்ரெஷ் ஆகதான் உள்ளது. எனவே டிசைனில் மிகப்பெரிய அளவிலான மாற்றங்கள் எதுவும் செய்யப்படாது என தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் ஒரு சில டிசைன் மாற்றங்களை நாம் உறுதியாக எதிர்பார்க்க முடியும்.

அதேபோல் தற்போது விற்பனையில் உள்ள மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரில் வழங்கப்படும் பெரும்பாலான வசதிகள் (Features) ஃபேஸ்லிஃப்ட் மாடலிலும் அப்படியே வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் கூடுதலாக ஒரு சில புதிய வசதிகளையும் கூட நாம் எதிர்பார்க்க முடியும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் வருகை, இந்திய சந்தையில் டாடா நெக்ஸான் (Tata Nexon), மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ (Mahindra XUV 3XO), கியா சொனெட் (Kia Sonet), ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue) மற்றும் ஸ்கோடா கைலக் (Skoda Kylaq) ஆகிய கார்களுக்கு எல்லாம் விற்பனையில் நெருக்கடிகளை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

Article Published On: Sunday, May 10, 2026, 21:52 [IST]
English summary
Maruti suzuki fronx facelift to get strong hybrid engine check all details here
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+