மிடில் க்ளாஸ் மக்களின் பென்ஸ்! 29 கிமீ மைலேஜ்! ஆனா குறைவான விலையில் களமிறக்கி டாடா, ஹூண்டாயை கதற விடும் மாருதி
இந்தியாவில் மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனம் 2 வகையான ஷோரூம்கள் மூலமாக கார்களை விற்பனை செய்து வருகிறது. அவை அரேனா (Arena) மற்றும் நெக்ஸா (Nexa) ஆகியவை ஆகும். மாருதி சுஸுகி வேகன் ஆர் (Maruti Suzuki Wagon R), மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki SWift), மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga) போன்ற கார்கள் எல்லாம் அரேனா ஷோரூம்கள் மூலமாக விற்பனை செய்யப்படுகின்றன.
அதே நேரத்தில் மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara), மாருதி சுஸுகி ஜிம்னி (Maruti Suzuki Jimny) மற்றும் மாருதி சுஸுகி இன்விக்டோ (Maruti Suzuki Invicto) போன்ற கார்கள் எல்லாம் நெக்ஸா ஷோரூம்கள் மூலமாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இந்தியாவிலேயே ஒவ்வொரு மாதமும் மிகவும் அதிகமாக விற்பனையாகி வரும் கார்களில் ஒன்றான மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் (Maruti Suzuki Fronx) காரும், நெக்ஸா ஷோரூம்கள் மூலமாகதான் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த காரின் நடப்பு 2026ம் ஆண்டு மார்ச் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) ரஸ்லேன் தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது.
இதன்படி பார்த்தால் மாருதி சுஸுகி நிறுவனம் நடப்பு 2026ம் ஆண்டு மார்ச் மாதம் 15,540 ஃப்ரான்க்ஸ் கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. ஆனால் கடந்த 2025ம் ஆண்டு மார்ச் மாதம் வெறும் 13,669 மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. அதாவது இம்முறை 1,871 மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இதன் மூலம் மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் கார் விற்பனையில் 13.69 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது. அத்துடன் நடப்பு 2026ம் ஆண்டு மார்ச் மாதம் இந்திய சந்தையில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 கார்களின் பட்டியலில் (Top 10 Cars March 2026), மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் 9வது இடத்தையும் பிடித்துள்ளது.
இதில் முதல் 8 இடங்களில் முறையே மாருதி சுஸுகி டிசையர் (Maruti Suzuki Dzire), டாடா பன்ச் (Tata Punch), டாடா நெக்ஸான் (Tata Nexon), ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta), மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga), மாருதி சுஸுகி வேகன் ஆர் (Maruti Suzuki Wagon R), மாருதி சுஸுகி பலேனோ (Maruti Suzuki Baleno), மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza) உள்ளன.
மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரின் விற்பனை சிறப்பாக இருந்து வருவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. இதில், அந்த காரில் ஏராளமான வசதிகள் (Features) வழங்கப்படுவது முதல் காரணம் ஆகும். வயர்லெஸ் செல்போன் சார்ஜர், க்ரூஸ் கண்ட்ரோல், ரியர் ஏசி வெண்ட்கள், 9 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 40க்கும் மேற்பட்ட வசதிகளுடன் கூடிய சுஸுகி கனெக்ட் கனெக்டட் கார் தொழில்நுட்பம் போன்றவை எல்லாம் குறிப்பிடத்தக்கவை ஆகும்.
அத்துடன் 360 டிகிரி கேமரா, ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, பின் பகுதியில் டீஃபாகர், அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகள், ஹில் ஹோல்டு அஸிஸ்ட் மற்றும் எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல் போன்ற பாதுகாப்பு வசதிகளையும் (Safety Features) மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் கார் கொண்டுள்ளது.
இது அதிக வசதிகள் நிரம்பிய கார் என்பதுடன், சிறப்பான மைலேஜ் (Mileage) வழங்க கூடிய கார்களில் ஒன்றாகவும் இருக்கிறது. மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரின் சிஎன்ஜி வேரியண்ட்கள் ஒரு கிலோவிற்கு அதிகபட்சமாக 28.51 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்க கூடியவையாக உள்ளது. இது மாருதி சுஸுகி நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படும் அராய் மைலேஜ் (ARAI Mileage) ஆகும்.
இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள் நிரம்பிய மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 6.85 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலையும் கூட வெறும் 11.98 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: வாடிக்கையாளர்கள் வழங்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக இருப்பதால்தான் மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரின் விற்பனை மிகவும் சிறப்பாக இருந்து வருகிறது. இது இந்திய சந்தையில் டாடா நெக்ஸான், ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue) மற்றும் கியா சொனெட் (Kia Sonet) போன்ற கார்களுக்கு எல்லாம் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷன் ஆகும்.


Click it and Unblock the Notifications








