வெறும் ரூ.6.85 லட்சத்தில் கிடைக்கும் மாருதி காரை இதுக்காகவே இனி வாங்கலாம்! பாதுக்காப்புக்கு முழு உத்தரவாதம்!

மாருதி சுஸுகி நிறுவனம் அதன் ஃபிரான்க்ஸ் காரில் ADAS வசதியை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. ADAS வசதிக்காக ஃபிரான்க்ஸ் காரில் சுற்றிலும் ரேடார்கள் மற்றும் சென்சார்கள் பொருத்தப்படும் நிலையில், அவ்வாறு பொருத்தப்பட்ட ஃபிரான்க்ஸ் கார் ஒன்று பொது வெளியில் ஓட்டிப் பார்க்கப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளது. காரின் அறிமுகத்திற்கு முன்னதாக மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த சோதனை ஓட்டம் குறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

ஃபிரான்க்ஸ் ஆனது மாருதி சுஸுகியில் இருந்து விற்பனை செய்யப்படும் பிரபலமான கார்களுள் ஒன்றாகும். ஒவ்வொரு மாதமும் ஆயிரக்கணக்கில் விற்பனையாகும் மாருதி கார்களில் ஃபிரான்க்ஸ் முக்கியமானதாக உள்ளது. மாருதி சுஸுகியின் லேட்டஸ்ட் கார்களுள் ஒன்றான ஃபிரான்க்ஸில் முக்கியமான பாதுகாப்பு அப்கிரேடாக ADAS வழங்கப்பட உள்ளது.

maruti suzuki fronx

இன்றைய கால மாடர்ன் கார்களில் அடிப்படை அம்சமாக மாறிவரும் ADAS, ஃபிரான்க்ஸ் காரிலும் வழங்கப்பட உள்ளது. இதன் விளைவாக ஃபிரான்க்ஸ் காரின் விலைகளும் அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ADAS உடனான ஃபிரான்க்ஸ் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில், அதற்கு முன்னதாக இந்த கார் டெல்லி என்சிஆர் பகுதியில் பொது சாலையில் ஓட்டிப் பார்க்கப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பான ஸ்பை படங்கள் 'டீம் பிஎச்பி' செய்தித்தளம் மூலமாக நமக்கு கிடைக்கப் பெற்றுள்ளன. முன்னதாக இந்த 2026ஆம் ஆண்டு துவக்கத்திலும் ADAS பொருத்தப்பட்ட ஃபிரான்க்ஸ் கார் ஒன்று பொது வெளியில் சோதனை செய்யப்பட்டு இருந்தது. மாருதி சுஸுகி கார்களில் தற்போதைக்கு விக்டோரிஸ் மற்றும் இ-விட்டாரா எலெக்ட்ரிக் கார் என இரு கார்களில் மட்டுமே ADAS வழங்கப்படுகிறது.

maruti suzuki fronx spotted

ஆதலால், எங்களுக்கு தெரிந்தவரையில் விக்டோரிஸ் காரில் வழங்கப்படும் ADAS சிஸ்டம் தான் ஃபிரான்க்ஸ் காரிலும் வழங்கப்படும். ADAS வழங்கப்பட்ட ஃபிரான்க்ஸ் காரின் தற்போதைய சோதனை ஓட்டத்தில் காரின் பின்பக்கத்தில் 'ஹைப்ரீட்' என குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, 'ஸ்மார்ட் ஹைப்ரீட்' என குறிப்பிடப்படாமல், 'ஹைப்ரீட்' என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் இருந்து, ஃபிரான்க்ஸ் கார் ஸ்ட்ராங் ஹைப்ரீட் ஆப்ஷனிலும் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதை அறிய முடிகிறது. இருப்பினும், ஃபிரான்க்ஸ் ஹைப்ரீட் காரில் என்ன மாதிரியான என்ஜின் மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார் செட்-அப் வழங்கப்பட உள்ளது என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை. நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, குறைவான செலவில் உருவாக்கப்படும் இசட் சீரிஸ் என்ஜினை ஹைப்ரீட் பவர்டிரெயின் ஆக ஃபிரான்க்ஸ் பெறலாம்.

மாருதி சுஸுகியின் இந்த இசட் சீரிஸ் என்ஜின்கள் தான் ஸ்விஃப்ட் மற்றும் டிசையர் கார்களில் வழங்கப்படுகின்றன. தற்சமயம் ஃபிரான்க்ஸ் காரில் இரு விதமான பெட்ரோல் என்ஜின்கள் ஆப்ஷன்களாக வழங்கப்படுகின்றன. அவையாவன, 1.2 லிட்டர் கே12என் 4-சிலிண்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் மற்றும் 1 லிட்டர் டர்போசார்ஜ்டு 3-சிலிண்டர் பூஸ்டர் ஜெட் பெட்ரோல் என்ஜின் ஆகும்.

இதில் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 88 பிஎச்பி மற்றும் 113 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக் கூடியதாக உள்ளது. இதுனுடன், 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 5-ஸ்பீடு AMT கியர்பாக்ஸை பெறலாம். அதுவே, 1 லிட்டர் டர்போசார்ஜ்டு 3-சிலிண்டர் பூஸ்டர் ஜெட் என்ஜின் அதிகப்பட்சமாக 98.6 பிஎச்பி மற்றும் 147.6 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக் கூடியதாக உள்ளது. இதுனுடன், 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸை பெறலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஆரம்பத்தில் அதிகமாக விற்பனையாகா விடினும் சமீப மாதங்களாக ஃபிரான்க்ஸ் காரின் விற்பனை சிறப்பாக உள்ளது. இத்தகைய சூழலில் புதியதாக ADAS மற்றும் ஸ்ட்ராங் ஹைப்ரீட் என்ஜின் ஆப்ஷன்கள் அறிமுகம் செய்யப்படுவது அதன் விற்பனையை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம். இருப்பினும், இதன் அறிமுகம் குறித்த தகவல் எதுவும் தற்போதைக்கு இல்லை.

Article Published On: Wednesday, June 10, 2026, 11:38 [IST]
English summary
Maruti suzuki fronx spotted with adas and strong hybrid powertrain in delhi ncr
மேலும்... #maruti suzuki #spy pics #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out