78,000 கம்மி! மாருதி இக்னிஸ் வாங்கி காசை கரியாக்கறதுக்கு பதிலா டாடா டியாகோ வாங்கலாம்! பாதுகாப்பும் இருக்கும்!
இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனம் மாருதி சுஸுகி (Maruti Suzuki). மாருதி சுஸுகி நிறுவனத்தின் பெரும்பாலான கார்கள் ஒவ்வொரு மாதமும் 5 இலக்க விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து வருகின்றன. ஆனால் மாருதி சுஸுகி நிறுவனத்தின் தயாரிப்பாக இருந்தாலும் கூட, ஒரு சில கார்கள் விற்பனையில் தடுமாறி கொண்டுதான் உள்ளன.
இதில், மாருதி சுஸுகி இக்னிஸ் (Maruti Suzuki Ignis) காரும் ஒன்றாகும். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ஒவ்வொரு மாதமும் சராசரியாக வெறும் 2 ஆயிரம் மாருதி சுஸுகி இக்னிஸ் கார்கள் மட்டுமே விற்பனையாகி வருகின்றன. மாருதி சுஸுகி இக்னிஸ் காரின் மந்தமான விற்பனை நடப்பு 2026ம் ஆண்டு ஜனவரி மாதமும் தொடர்ந்துள்ளது.

மாருதி சுஸுகி நிறுவனம் நடப்பு 2026ம் ஆண்டு ஜனவரி மாதம் வெறும் 1,902 இக்னிஸ் கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் 3,780 மாருதி சுஸுகி இக்னிஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன. அதாவது கடந்த 2025ம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடும்போது, நடப்பு 2026ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 1,878 மாருதி சுஸுகி இக்னிஸ் கார்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இது 49.68 சதவீத வீழ்ச்சி ஆகும். ரஸ்லேன் தளத்தில் வெளியாகியுள்ள சேல்ஸ் ரிப்போர்ட்டி (Sales Report) மூலமாக இந்த தகவல் தெரிய வந்துள்ளது. இக்னிஸ் காரானது, மாருதி சுஸுகி நிறுவனத்தின் நெக்ஸா (Nexa) ஷோரூம்கள் மூலமாக விற்பனை செய்யப்படுகிறது. நெக்ஸா ஷோரூம்கள் மூலமாக விற்பனை செய்யப்படுவதிலேயே மிகவும் விலை குறைவான காராக மாருதி சுஸுகி இக்னிஸ் திகழ்கிறது.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி இக்னிஸ் காரின் ஆரம்ப விலை வெறும் 5.35 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் மாருதி சுஸுகி இக்னிஸ் காரின் டாப் வேரியண்ட்டின் விலையும் கூட வெறும் 7.55 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது. இவை மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.
விலை குறைவான காராக இருந்தாலும் கூட, மாருதி சுஸுகி இக்னிஸ் காரில், ரியர் வியூ பார்க்கிங் கேமரா, ரியர் பார்க்கிங் சென்சார், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி ப்ரோகிராம், ஹில் ஹோல்டு அஸிஸ்ட் மற்றும் ஏர்பேக்குகள் போன்ற பாதுகாப்பு வசதிகள் (Safety Features) எல்லாம் வழங்கப்பட்டுள்ளன.
அத்துடன் 17.78 செமீ டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வாய்ஸ் கமாண்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், இன்ஜின் புஷ் பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப், ரிமோட் கீலெஸ் எண்ட்ரி மற்றும் உயரத்தை அட்ஜெஸ்ட் செய்து கொள்ளும் வகையிலான டிரைவர் இருக்கை போன்ற வசதிகளையும், மாருதி சுஸுகி நிறுவனம் இக்னிஸ் காரில் வழங்கியுள்ளது.
மாருதி சுஸுகி நிறுவனத்தின் பெரும்பாலான கார்களில் சிஎன்ஜி இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. ஒரு சில மாருதி சுஸுகி கார்களில் மட்டுமே சிஎன்ஜி இன்ஜின் ஆப்ஷன் இல்லை. இதில், மாருதி சுஸுகி இக்னிஸ் காரும் ஒன்றாகும். மாருதி சுஸுகி இக்னிஸ் காரில், 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்படுகிறது. இந்த இன்ஜின் உடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் டாடா டியாகோ (Tata Tiago) போன்ற கார்கள் உடன் மாருதி சுஸுகி இக்னிஸ் போட்டியிட்டு வருகிறது. டாடா டியாகோ காரின் ஆரம்ப விலை வெறும் 4.57 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. இது டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும்.
அதாவது மாருதி சுஸுகி இக்னிஸ் காரின் ஆரம்ப விலை உடன் ஒப்பிடும்போது, டாடா டியாகோ காரின் ஆரம்ப விலை 78 ஆயிரம் ரூபாய் குறைவு ஆகும். மாருதி சுஸுகி இக்னிஸ் உடன் ஒப்பிடும்போது, டாடா டியாகோ விலை குறைவானது. அத்துடன் மாருதி சுஸுகி இக்னிஸ் உடன் ஒப்பிடும்போது, டாடா டியாகோ பாதுகாப்பானது எனவும் வாடிக்கையாளர்கள் கருதுகின்றனர். இதன் காரணமாக மாருதி சுஸுகி இக்னிஸ் விற்பனையில் தடுமாறும் நிலையில், டாடா டியாகோ சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து வருகிறது.


Click it and Unblock the Notifications








