லிட்டருக்கு 20கிமீ மைலேஜ் தரும் காரை கம்மி விலையில் விற்றாலும் வாங்க ஆள் இல்ல! விற்பனையை நிறுத்தும் மாருதி!

மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனத்தில் இருந்து ஒரு விலை குறைவான கார் சைலண்டாக விற்பனையில் இருந்து ஒதுக்கப்பட்டு வருகிறது. அதாவது, அந்த காரை உற்பத்தி செய்து விற்பனை செய்யும் பணிகளை மாருதி சுஸுகி நிறுவனம் படிபடியாக நிறுத்திக் கொள்ள ஆரம்பித்துள்ளது. இருப்பினும், அந்த மாருதி கார் கடந்த 2026 மார்ச் மாதத்தில் ஆயிரத்திற்கும் அதிகமான யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதுகுறித்த கூடுதல் விபரங்களை தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம். வாருங்கள் செய்திக்குள் போகலாம்.

மாருதி சுஸுகி கார்கள் என்றாலே அதிக எண்ணிகையில் விற்பனையாகக் கூடியவை என நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், மாருதி சுஸுகி கார்களிலும் சில கார் மாடல்கள் பலரால் வாங்கப்படாமல் உள்ளன. அத்தகைய கார்களுள் ஒன்றுதான், இக்னிஸ் (Ignis) ஆகும். அளவில் சிறியதான மற்றும் நன்கு மைலேஜ் (Mileage) தரக்கூடிய காராக இருப்பினும் ஏனோ இக்னிஸின் விற்பனை பெரிய அளவிற்கு இல்லை.

maruti suzuki ignis car sales

இதனாலேயே இக்னிஸ் காரின் விற்பனையை மாருதி சுஸுகி படிபடியாக நிறுத்திக் கொள்ள உள்ளதாகவும், இதற்கான வேலைகளில் மாருதி சுஸுகி ஏற்கனவே ஈடுப்பட ஆரம்பித்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், இக்னிஸ் காருக்கு மாற்றாக புதியதாக மைக்ரோ-எஸ்யூவி (Micro-SUV) வகை கார் ஒன்றை மாருதி நிறுவனம் களமிறக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மற்ற மாருதி கார்கள் அளவிற்கு இல்லையென்றாலும், இக்னிஸ் ஒவ்வொரு மாதமும் 1,000- 2,000 யூனிட்கள் விற்பனையாகிறது. கடந்த 2026 மார்ச் மாதத்திலும் ஆயிரத்து 250 இக்னிஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. உண்மையில் கடந்த மார்ச் மாதத்தில்தான் இக்னிஸின் விற்பனை குறைந்துள்ளது. அதற்கு முன்பு வரையில் ஓரளவிற்கு சுமாராக இருந்தது என்றே சொல்ல வேண்டும்.

maruti suzuki ignis car sales

எந்த அளவிற்கு என்றால், இந்த 2026ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் 1,902 இக்னிஸ் கார்களும், பிப்ரவரி மாதத்தில் 1,848 இக்னிஸ் கார்களும் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. கடந்த 2025ஆம் ஆண்டின் கடைசி மூன்று மாதங்களில் முறையே 2645, 2316 மற்றும் 1910 இக்னிஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டன.

கடந்த 2026 மார்ச் மாதத்தில் 1,250 இக்னிஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில், கடந்த 2025ஆம் ஆண்டில் இதே மார்ச் மாதத்தில் 1,990 இக்னிஸ் கார்களை மாருதி சுஸுகி விற்பனை செய்திருந்தது. இந்த வகையில் பார்க்கும்போது, கடந்த ஆண்டு மார்ச்சை காட்டிலும் இந்த ஆண்டு மார்ச்சில் சுமார் 740 இக்னிஸ் கார்களை மாருதி சுஸுகி நிறுவனம் குறைவாக விற்பனை செய்துள்ளது.

இக்னிஸ் காரை பற்றி சொல்ல வேண்டுமென்றால், இந்த அளவில் சிறியதான ஹேட்ச்பேக் (Hatchback) வகையை சேர்ந்த காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் (Ex-Showroom Prices) தற்சமயம் ரூ.5.35 லட்சத்தில் இருந்து ரூ.7.55 லட்சம் வரையில் உள்ளன. ஆனால், விலையுயர்ந்த மாருதி கார்கள் விற்பனை செய்யப்படும் மாருதி சுஸுகியின் நெக்ஸா (NEXA) டீலர்ஷிப் ஷோரூம் வாயிலாக இக்னிஸ் விற்பனை செய்யப்படுவதுதான் இதில் ஆச்சிரியமான விஷயமாகும்.

1.2 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் என்கிற ஒரேயொரு என்ஜின் ஆப்ஷன் உடன் மட்டுமே விற்பனை செய்யப்படும் இக்னிஸில் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் 5-ஸ்பீடு ஏஎம்டி ஆட்டோமேட்டிக் என இரு விதமான கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இந்த காரினுள் டாஷ்போர்டில் 7 இன்ச்சில் 'ஸ்மார்ட்ப்ளே' டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 6-ஸ்பீக்கர் ஆடியோ மற்றும் க்ளைமேட் கண்ட்ரோல் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்படுகின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: முதன்முதலாக 2017ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட இக்னிஸ் கடந்த பல வருடங்களாகவே விற்பனையில் போராடிக் கொண்டிருக்கிறது. இதே அளவிலான மற்ற மாருதி சுஸுகி கார்கள் மாதத்திற்கு 10,000- 20,000 யூனிட்கள் விற்பனை செய்யப்படும் நிலையில், இக்னிஸ் அதில் 10% மட்டுமே விற்பனையாகுவது மாருதி சுஸுகி நிறுவனத்திற்கு பெரிதும் ஏமாற்றமாக உள்ளது. இதன் காரணமாகவே, இதற்கு மாற்றாக வேறொரு புதிய காரை களமிறக்க மாருதி தயாராகி வருகிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, April 15, 2026, 20:44 [IST]
English summary
Maruti suzuki ignis sales report march 2026 slow sales and low demand
மேலும்... #maruti suzuki #ignis #car sales #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+