பாதி விலைக்கு மாருதி சுஸுகியின் புதிய அறிமுகம்... வெளியே வாங்கினால் அதிக பணம் செலவாகும்!

மாருதி சுஸுகி (Maruti Suzki) நிறுவனத்தில் இருந்து சமீபத்தில் ஆம்னி (Omni) வேனின் விற்பனை நிறுத்தப்பட்டது. இந்த நிலையில், தனது மற்றொரு வேன் மாடலான ஈக்கோ (Eeco)-ஐ மாருதி சுஸுகி மேலும் பலப்படுத்தியுள்ளது. இதற்காக புதியதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஸ்டார் எடிஷன் ஆக்ஸஸரீ பேக்கேஜ் (Star Edition Accessory Package)-ஐ பற்றி விரிவாக இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் வேன் மாடலாக மாருதி சுஸுகி ஈக்கோ விளங்குகிறது. இதனை மேலும் அதிகரிக்கும் விதமாகவும், சமீபத்தில் ஆம்னியின் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளதை ஈடுச்செய்யும் விதமாகவும் புதியதாக ஸ்டார் எடிஷன் ஆக்ஸஸரீ தொகுப்பை மாருதி சுஸுகி அறிமுகம் செய்துள்ளது. இந்த ஆக்ஸஸரீ தொகுப்புக்கான விலையாக ரூ.19,999 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

maruti suzuki eeco star edition accessories package

இந்த தொகுப்பில் அடங்கும் ஆக்ஸஸரீகளின் மொத்த மதிப்பு ரூ.37 ஆயிரம் என்றும், ஆனால் அதனை வெறும் ரூ.19,999இல் வழங்குவதாகவும் மாருதி சுஸுகி தெரிவித்துள்ளது. ஈக்கோ வாகனத்தை வாங்குபவர்கள் இந்த புதிய ஆக்ஸஸரீ தொகுப்பை கூடுதலாக ரூ.19,999 தொகையை செலுத்தி பெறலாம். மார்க்கெட்டில் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி (CNG) ஆப்ஷன்களில் ஈக்கோ விற்பனை செய்யப்படுகிறது.

இதில் எந்த ஆப்ஷனில் வாங்கினாலும் புதிய ஸ்டார் எடிஷன் ஆக்ஸஸரீ பேக்கேஜை பெறலாம் என மாருதி சுஸுகி தெரிவித்துள்ளது. அதேபோல், பயணிகளை ஏற்றிச் செல்ல அல்லது சரக்கு பொருட்களை ஏற்றிச் செல்ல என இரு விதமான வெர்சன்களில் ஈக்கோ விற்பனை செய்யப்படும் நிலையில், இவை இரண்டிலும் புதிய ஸ்டார் எடிஷன் ஆக்ஸஸரீ பேக்கேஜை பெறலாம்.

maruti suzuki eeco star edition accessories package

இந்த ஆக்ஸஸரீ பேக்கேஜில் மொத்தம் 18 ஆக்ஸஸரீகள் அடங்குகின்றன. இதன் மூலமாக, ஈக்கோ வேனின் வெளிப்பக்கத்திற்கான பின்பக்க ஸ்பாய்லர், கார்னிஷ் உடன் ஃபாக் விளக்குகள், வீல் கவர்கள், டோர் விஸர்ஸ், சக்கரத்தில் இருந்து சகதி தெறிப்பதை தடுக்கும் ஃபிளாப் செட் மற்றும் வாகனத்தை சுற்றிலும் பளபளப்பான க்ரோம் ஃபினிஷிங்கில் ஈக்கோ பேட்ஜை பெறலாம்.

கிரே நிறத்திலான பம்பர்களை மெட்டாலிக் க்ளிஸ்டெனிங் கிரே மற்றும் மெட்டாலிக் பிரிஸ்க் நீல நிற தீம்களில் பெறலாம். வாகனத்தின் உட்புறத்தையும் புதிய ஸ்டார் எடிஷன் ஆக்ஸஸரீ பேக்கேஜ் மூலம் அலங்கரித்துக் கொள்ளலாம். இந்த பேக்கேஜில், இருக்கைகளுக்கான கவர்கள் புதிய டிசைனில் கிடைக்கும். மேலும், வாகனத்திற்குள் சவுகரியமான பயணம் மற்றும் விசாலமான கேபினையும் இந்த புதிய ஆக்ஸஸரீ பேக்கேஜ் மூலம் பெறலாம்.

மாருதி சுஸுகி ஈக்கோவில் ஹீட்டர் உடன் ஏசி, 3-பாயிண்ட் ELR சீட்பெல்ட்கள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் (ESP), இபிடி உடன் ஏபிஎஸ், ரிவர்ஸில் பார்க் செய்வதற்கு உதவியாக சென்சார்கள் மற்றும் ஆறு ஏர்பேக்குகள் உள்ளிட்டவை ஏற்கனவே ஸ்டாண்டர்ட் அம்சங்களாக வழங்கப்படுகின்றன. இந்த வாகனத்தில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது.

ஏற்கனவே கூறியதுபோல், இந்த என்ஜினை பெட்ரோலில் இயங்கக் கூடியதாகவோ அல்லது சிஎன்ஜி-இல் இயங்கக் கூடியதாகவோ பெறலாம். பெட்ரோல் வெர்சனில் அதிகப்பட்சமாக 60.5 கிலோவாட்ஸ் மற்றும் 105.5 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலும், சிஎன்ஜி வெர்சனில் 52.7 கிலோவாட்ஸ் மற்றும் 95 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலும் கிடைக்கிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: அதிக பயணிகள் மற்றும் சரக்கு பொருட்களை கொண்டு செல்வதற்கு ஏற்ற வாகனத்தை சிறந்த மைலேஜ் உடன் வாங்குவதற்கு மாருதி சுஸுகி ஈக்கோ ஏற்றதாக உள்ளது. இத்தகைய வாகனத்தை ஸ்டைலான தோற்றத்தில் பெறுவதற்கு புதிய ஸ்டார் எடிஷனை பயன்படுத்தலாம். இதற்கான விலையும் குறைவாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாகவே கருதுகிறோம்.

Article Published On: Friday, May 8, 2026, 15:19 [IST]
English summary
Maruti suzuki introduces star edition accessories package for eeco check all details here
மேலும்... #maruti suzuki #eeco #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+