2 லட்சத்தை கடந்த உள்நாட்டு விற்பனை... மாத விற்பனையில் மாபெரும் சாதனைப் படைத்த மாருதி!!

நாட்டின் மிகப்பெரிய கார் நிறுவனமான மாருதி சுஸுகி ஜூலை மாத உள்நாட்டு விற்பனையில் புதிய உச்சத்தை தொட்டு சாதனை படைத்துள்ளது. கடந்த மாதம் 2 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்களை இந்திய சந்தையில் விற்பனை செய்து அசத்தி உள்ளது. இது அந்நிறுவனத்தின் மாத விற்பனையில் உச்சபட்ச எண்ணிக்கையாக அமைந்துள்ளது.

மாருதி சுஸுகி நிறுவனம் பங்கு சந்தைக்கு அளித்துள்ள விற்பனை ஆவணங்களின்படி, கடந்த மாதம் மொத்தமாக 2,41,421 யூனிட்டுகளை விற்பனை செய்துள்ளது. கடந்த 2025ம் ஆண்டு ஜூலை மாதம் 1,80,526 யூனிட்டுகளை விற்பனை செய்திருந்த அந்நிறுவனம், 33.73 சதவீதம் என்ற பிரம்மாண்ட விற்பனை வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

Maruti Alto K10

கடந்த மாதம் உள்நாட்டு சந்தையில் 2,00,123 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதில், கார்கள் மற்றும் இலகு ரக வர்த்தக வாகன விற்பனையும் அடங்கும். மேலும், கடந்த மாதம் மட்டும் 1,96,203 கார்களை விற்று அசத்தி உள்ளது. கடந்த ஆண்டு ஜூலையில் 1,47,187 யூனிட்டுகளை விற்பனை செய்திருந்த அந்த நிறுவனத்தின் விற்பனை தற்போது 33.3 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.

வாகன வகை ஜூலை 2026 ஜூலை 2025 நிதியாண்டு 26-27 (ஏப்ரல்-ஜூலை) நிதியாண்டு 25-26 (ஏப்ரல்-ஜூலை)
A: மினி (ஆல்டோ, எஸ்-பிரெஸ்ஸோ) 12,634 6,822 56,391 26,344
A: காம்பேக்ட் + மிட்-சைஸ் (பலேனோ, செலெரியோ, சியாஸ், டிசையர், ஸ்விஃப்ட், வேகன்ஆர்) 90,822 65,840 316,851 244,917
மொத்தம் A: பயணிகள் கார்கள் 103,456 72,662 373,242 271,261
B: யுட்டிலிட்டி வாகனங்கள் (பிரெஸ்ஸா, எர்டிகா, இ-விட்டாரா, ஃப்ரான்க்ஸ், கிராண்ட் விட்டாரா, இன்விக்டோ, ஜிம்னி, விக்டோரிஸ், எக்ஸ்எல்6) 78,851 52,773 297,736 214,641
C: வேன்கள் (ஈக்கோ) 13,896 12,341 50,453 45,446
மொத்த உள்நாட்டு பயணிகள் வாகன விற்பனை (PV) 196,203 137,776 721,431 531,348
இலகுரக வணிக வாகனங்கள் (சூப்பர் கேரி) 3,920 2,794 13,499 11,304
LCV உட்பட மொத்த உள்நாட்டு விற்பனை (PV+LCV) 200,123 140,570 734,930 542,652
டொயோட்டாவுக்கு சப்ளை 11,242 8,211 34,423 37,018
மொத்த உள்நாட்டு விற்பனை (PV+LCV+OEM) 211,365 148,781 769,353 579,670
மொத்த ஏற்றுமதி 30,056 31,745 154,792 128,717
மொத்த விற்பனை (உள்நாடு + ஏற்றுமதி) 241,421 180,526 924,145 708,387

ஆல்ட்டோ, ஸ்விஃப்ட், பலேனோ, டிசையர், வேகன் ஆர் போன்ற சிறிய ரக கார் பிரிவில் 1,03,456 யூனிட்டுகளை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் 72,662 யூனிட்டுகளை மட்டுமே இந்நிறுவனம் விற்பனை செய்திருந்த நிலையில், தற்போது கணிசமாக உயர்ந்துள்ளது.

அதேபோன்று, பிரெஸ்ஸா, எர்டிகா, ஃப்ரான்க்ஸ், கிராண்ட் விட்டாரா, எக்ஸ்எல்6, விக்டோரிஸ் உள்ளிட்ட யுட்டிலிட்டி ரக வாகனங்கள் பிரிவில் 78,851 கார்களை விற்றுள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் இந்த பிரிவில் 52,773 கார்களை அந்நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

தவிரவும், டொயோட்டா நிறுவனத்தின் கூட்டணியில் ரீபேட்ஜ் செய்யப்பட்ட கார்களை மாருதி சுஸுகி சப்ளை செய்து வருகிறது. அந்த வகையில், டொயோட்டா நிறுவனத்திற்கு 11,242 கார்களை சப்ளை செய்துள்ளது.

இந்த நிலையில், மாருதி சுஸுகி நிறுவனத்தின் ஏற்றுமதியில் சிறிய சரிவு ஏற்பட்டுல்ளது. கடந்த மாதம் 30,056 கார்களை வெளிநாடுகளுக்கு அந்நிறுவனம் ஏற்றுமதி செய்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலையுடன் ஒப்பிடுகையில் ஏற்றுமதி 5.32 சதவீதம் சரிந்துள்ளது.

மேலும், ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான நடப்பு நிதி ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் மொத்தமாக 9,24,145 வாகனங்களை மாருதி சுஸுகி விற்பனை செய்துள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்துடன் ஒப்பிடும்போது 30.46 சதவீதம் அளவுக்கு விற்பனை அதிகரித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Article Published On: Saturday, August 1, 2026, 17:06 [IST]
English summary
Maruti suzuki july 2026 highest monthly sales record
மேலும்... #maruti suzuki #car sales #exports
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out