பிப்ரவரியில் அறிமுகமாகிறது மாருதியின் புதிய 7 சீட்டர் எலெக்ட்ரிக் கார்!

இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி, எலெக்ட்ரிக் கார் சந்தையில் தனது கார் வரிசையை விரிவுப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

ஏற்கெனவே இ விட்டாரா எலெக்ட்ரிக் எஸ்யூவியை அறிமுகப்படுத்தியுள்ள நிலையில், இரண்டாவது பேட்டரி எலெக்ட்ரிக் காரை வரும் பிப்ரவரி மாதம் நடைபெற இருக்கும் பாரத் மொபிலிட்டி வாகன கண்காட்சியில் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மாருதி நிறுவனம் வெளியிட்டு இருக்கும் நடப்பு நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டு வருவாய் அறிக்கையின் மூலமாக இந்த புதிய கார் வருகையை மாருதி சுஸுகி உறுதிப்படுத்தி இருக்கிறது.

Maruti Ertiga

(Maruti Suzuki Ertiga image used for representational purposes)

தற்போது சோதனை ஓட்டத்தில் இருக்கும் இந்த கார், ஒய்எம்சி (YMC) என்ற ரகசிய குறியீட்டுப் பெயரில் உருவாக்கப்பட்டு வருகிறது. மாருதி எர்டிகா கார் அடிப்படையிலான இந்த கார் எலெக்ட்ரிக் எம்பிவி ரகமாக இருக்கலாம் என்று தெரிகிறது. இதனால், இந்த கார் மீதான ஆவல் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

மாருதி சுஸுகி எர்டிகா மற்றும் எக்ஸ்எல்6 ஆகிய எம்பிவி கார்களுக்கு அதிக வரவேற்பு இருந்து வருகிறது. எனவே, தனது அடுத்த எலெக்ட்ரிக் காரை 7 சீட்டர் மாடலாக மாருதி அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இது குடும்பப் பயணங்களுக்கும் வணிகப் பயன்பாட்டிற்கும் ஏற்றதாக இருக்கும்.

Also Read

தற்போது வெளியாகி இருக்கும் ஸ்பை படங்களின்படி, இந்த எலெக்ட்ரிக் எம்பிவி காரில் உயரமான முன்பக்க வடிவமைப்பு, எல்இடி ஹெட்லைட்டுகள், மூடிய கிரில் அமைப்பு மற்றும் காற்றின் எதிர்ப்பைக் குறைக்கும் அலாய் வீல்கள் இடம்பெறும் என்று தெரிகிறது. மேலும், பெரிய ஜன்னல்கள், சதுர வடிவ வீல் ஆர்ச்சுகள், பின்புற ஸ்பாய்லர் ஆகியவையும் எதிர்பார்க்கப்படுகின்றன.

இந்த புதிய எலெக்ட்ரிக் காரில் பல்வேறு நவீன வசதிகள் இடம்பெற வாய்ப்புள்ளது. குறிப்பாக, பனோரமிக் சன்ரூஃப், முன்பக்க இருக்கைகளில் குளிரூட்டும் வசதி, தானியங்கி ஏசி, 360 டிகிரி கேமரா மற்றும் லெவல் 2 அடாஸ் பாதுகாப்புத் தொழில்நுட்பம் ஆகியவை இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read

மாருதி சுஸுகி நிறுவனத்தின் இ விட்டாரா காரில் பயன்படுத்தப்படும் ஹார்டெக்ட்-இ (HEARTECT-e) எலெக்ட்ரிக் தளத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படலாம். இதனால், இ விட்டாராவில் இடம்பெறும் பேட்டரி மற்றும் மோட்டார் தொழில்நுட்பங்களை இந்த காரிலும் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.

மாருதி சுஸுகியின் புதிய எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு உள்நாட்டு சந்தையிலும் வெளிநாடுகளிலும் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக குஜராத்தில் உள்ள ஹன்சல்பூர் உற்பத்தி ஆலையை நிறுவனம் பயன்படுத்தப்பட உள்ளதாக தெரிகிறது. இந்த ஆலை
ஆண்டுக்கு 2.5 லட்சம் வாகனங்களைத் தயாரிக்கும் திறன் கொண்டது.

இந்த புதிய எலெக்ட்ரிக் எம்பிவியின் விலை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இருப்பினும், இந்தியாவில் குடும்பங்களைக் குறிவைத்து விற்பனை செய்யப்படும் வகையில் விலை நிர்ணயிக்கப்படலாம். இது கியா கேரன்ஸ் கிளாவிஸ் இவி உள்ளிட்ட எலெக்ட்ரிக் கார்களுக்குப் போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் எலெக்ட்ரிக் கார் பயன்பாடு அதிகரித்து வரும் சூழலில், மாருதி சுஸுகி நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் எம்பிவி அறிமுகம் முக்கியத்துவம் பெறுகிறது. குறிப்பாக, அதிக இடவசதி, நவீன வசதிகள் மற்றும் நம்பகமான பிராண்ட் ஆகியவற்றை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த கார் சிறந்த தேர்வாக அமையும்.

Via- Team BHP

Article Published On: Thursday, November 5, 2026, 9:42 [IST]
English summary
Maruti suzuki new electric mpv debut bharat mobility expo 2027
மேலும்... #maruti suzuki
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out