33 கிமீ மைலேஜ்! விலை வெறும் 3.50 லட்சம்தான்! இத்தன நாளா யாரும் கண்டுக்காம இருந்த காருக்கு வந்த வாழ்வை பாருங்க!

இந்திய சந்தையில் மிகவும் குறைவான விலையில் கிடைத்தாலும், வாடிக்கையாளர்களை பெரிய அளவில் ஈர்க்க தவறிய ஹேட்ச்பேக் ரக கார்களில் ஒன்று மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ (Maruti Suzuki S-presso). இதன் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 3.50 லட்ச ரூபாய் மட்டுமே. இது இந்திய சந்தையில் கிடைக்கும் பெரும்பாலான பைக்குகளை விட குறைவான விலை ஆகும்.

அதே நேரத்தில் மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ காரின் டாப் வேரியண்ட்டின் விலையும் கூட வெறும் 5.25 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது. இவை அனைத்துமே எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். விலை குறைவானதாக இருந்தாலும் கூட, இந்தியாவில் நீண்ட காலமாகவே மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ காரின் விற்பனை மிகவும் மந்தமாகவே இருந்து வருகிறது.

Maruti Suzuki S-presso Interior

பாதுகாப்பு சோதனைகளில் சிறப்பான பாதுகாப்பு ரேட்டிங் பெற தவறியது மற்றும் காம்பேக்ட் எஸ்யூவி கார்களின் மீது இந்திய வாடிக்கையாளர்களின் கவனம் திரும்பியது போன்றவற்றை இதற்கு மிக முக்கியமான காரணங்களாக குறிப்பிடலாம். ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ காரின் விற்பனை தற்போது திடீரென உயர்ந்துள்ளது.

நடப்பு 2026ம் ஆண்டு மே மாதம் மாருதி சுஸுகி நிறுவனம் 6,388 எஸ்-பிரெஸ்ஸோ கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2025ம் ஆண்டு மே மாதம் வெறும் 1,806 மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. அதாவது இம்முறை 4,582 மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

Maruti Suzuki S-Presso

இதன் மூலம் விற்பனையில் 254 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ அசத்தியுள்ளது. இந்த பிரம்மாண்ட வளர்ச்சியின் காரணமாக நடப்பு 2026ம் ஆண்டு மே மாதம் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 ஹேட்ச்பேக் கார்களின் பட்டியலில் (Top 10 Hatchback Cars), மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ 5வது இடத்தை பிடித்துள்ளது.

இந்த பட்டியலில் முதல் 4 இடங்களில் முறையே மாருதி சுஸுகி பலேனோ (Maruti Suzuki Baleno), மாருதி சுஸுகி வேகன் ஆர் (Maruti Suzuki Wagon R), மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift) மற்றும் மாருதி சுஸுகி ஆல்டோ கே10 (Maruti Suzuki Alto K10) ஆகிய கார்கள் உள்ளன.

அதே நேரத்தில் 6, 7, 8, 9 மற்றும் 10வது இடங்களில் முறையே ஹூண்டாய் ஐ20 (Hyundai i20), டாடா டியாகோ (Tata Tiago), டொயோட்டா க்ளான்சா (Toyota Glanza), மாருதி சுஸுகி செலிரியோ (Maruti Suzuki Celerio) மற்றும் ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் (Hyundai Grand i10 Nios) ஆகிய கார்கள் உள்ளன.

டாப் 10 பட்டியலில் இடம்பிடித்துள்ள கார்களிலேயே விற்பனையில் அதிக வளர்ச்சி விகிதத்தை பதிவு செய்த கார் என்ற பெருமையையும் மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ பெற்றுள்ளது. இதற்கு அடுத்தபடியாக அதிக வளர்ச்சி விகிதத்தை பதிவு செய்திருப்பது மாருதி சுஸுகி ஆல்டோ கே10 ஆகும். அதன் வளர்ச்சி விகிதம் 99 சதவீதமாக இருக்கிறது. காடிவாடி தளத்தில் வெளியாகியுள்ள சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) மூலமாக இந்த தகவல் நமக்கு தெரிய வந்துள்ளது.

மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ காரின் Std (O) மேனுவல் மற்றும் LXi (O) மேனுவல் ஆகிய வேரியண்ட்கள் ஒரு லிட்டருக்கு 24.12 கிலோ மீட்டர் மைலேஜ் (Mileage) வழங்க கூடியவையாக உள்ளன. அதே நேரத்தில் VXi (O) மேனுவல், VXi+ (O) மேனுவல் ஆகிய வேரியண்ட்கள் ஒரு லிட்டருக்கு 24.76 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குகின்றன.

இந்த வரிசையில் VXi (O) ஆட்டோமேட்டிக், VXi+ (O) ஆட்டோமேட்டிக் ஆகிய வேரியண்ட்கள் ஒரு லிட்டருக்கு 25.30 கிலோ மீட்டர் மைலேஜ் கொடுக்கின்றன. இவை அனைத்துமே பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்ட வேரியண்ட்கள் ஆகும். இந்த வரிசையில் சிஎன்ஜி இன்ஜின் பொருத்தப்பட்ட LXi (O) மேனுவல் மற்றும் VXi (O) மேனுவல் ஆகிய வேரியண்ட்கள் ஒரு கிலோவிற்கு 32.73 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குகின்றன. இவை அராய் (ARAI) மைலேஜ் ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த ஜூன் 1ம் தேதி தனது கார்களின் விலையை உயர்த்தியது. ஆனால் மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ காரின் விலை இன்னும் உயர்த்தப்படவில்லை. இன்று (ஜூன் 14) வரை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு பழைய விலையிலேயே மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பின் விலை உயர்த்தப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ காரை வாங்க திட்டமிட்டுள்ள வாடிக்கையாளர்கள் இன்றுக்குள் முன்பதிவு செய்து கொண்டால், விலை உயர்வை தவிர்க்கலாம். எஸ்-பிரெஸ்ஸோ மட்டுமல்லாது, ஆல்டோ கே10, செலிரியோ மற்றும் வேகன் ஆர் என மொத்தம் 4 கார்களுக்கு மாருதி சுஸுகி நிறுவனம் இந்த சலுகையை வழங்கியுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

இந்த 4 கார்களுக்கு மட்டும் விலை உயர்வு இன்று வரை தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இன்றுக்குள் முன்பதிவு செய்து விட்டால், விலை உயர்வை தவிர்த்து விடலாம். எனவே ஓரளவிற்கு பணத்தை சேமிக்க வேண்டும் என நினைக்க கூடிய வாடிக்கையாளர்கள் தங்கள் முடிவை சற்று விரைவாக எடுப்பது நன்மை பயக்கும்.

இந்தியாவில் தற்போது பெட்ரோல், டீசல் விலை (Petrol, Diesel Price) கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. எனவே குறைவான விலையில் கிடைக்க கூடிய, அதே நேரத்தில் அதிக மைலேஜ் வழங்க கூடிய கார்களின் பக்கம் மக்களின் கவனம் தற்போது திரும்பியுள்ளது. மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ காரின் திடீர் எழுச்சிக்கு இது மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக இருக்கலாம் என நாங்கள் கருதுகிறோம்.

Article Published On: Sunday, June 14, 2026, 5:26 [IST]
English summary
Maruti suzuki s presso sales boom in india in may 2026 254 per cent growth
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out