மாருதில இப்படி ஒரு கார் இருக்கறதையே எல்லாரும் மறந்துட்டாங்க! ஆனா திடீர்னு விற்பனை அதிகமாயிருச்சு!
இந்திய சந்தையில் கிடைக்கும் மிகவும் விலை குறைவான கார்களில் ஒன்று மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ (Maruti Suzuki S-presso). இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 3.50 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது.
இது மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். இது மிகவும் விலை குறைவானது என்பதுடன், அதிக மைலேஜ் (Mileage) வழங்க கூடிய கார்களில் ஒன்றாகவும் இருக்கிறது. மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ காரின் சிஎன்ஜி வேரியண்ட்கள் ஒரு கிலோவிற்கு 32.73 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்க கூடியவையாக உள்ளன. இது அராய் மைலேஜ் (Arai Mileage) என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

இருப்பினும் மோதல் சோதனைகளில் சிறப்பான பாதுகாப்பு ரேட்டிங் பெற தவறியது போன்ற காரணங்களால் மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ காரின் விற்பனை இந்திய சந்தையில் மிகவும் மந்தமாக இருந்து வந்தது. அதிலும் குறிப்பாக நடப்பு 2026ம் ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ காரின் விற்பனை அதலபாதாளத்திற்கு சென்றது.
அதாவது வி3 கார்ஸ் தள தரவுகளின்படி, நடப்பு 2026ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 451 மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ கார்களும், அதன் பின் வந்த மார்ச் மாதம் 226 மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ கார்களும் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ காரின் விற்பனை எந்த அளவிற்கு மோசமாக உள்ளது? என்பதற்கு இந்த புள்ளி விபரம் ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே.

ஆனால் நடப்பு 2026ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ காரின் விற்பனை திடீரென பல மடங்கு உயர்ந்துள்ளது. அதாவது ரஸ்லேன் தள தரவுகளின்படி, நடப்பு 2026ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5,210 மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
ஆனால் கடந்த 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெறும் 726 மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. அதாவது கடந்த 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும்போது, நடப்பு 2026ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 4,484 மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இதன் மூலம் மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ கார் விற்பனையில் 617.63 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது. நடப்பு 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மாருதி சுஸுகி நிறுவனத்தின் வேறு எந்தவொரு காரும் விற்பனையில் இவ்வளவு பெரிய வளர்ச்சியை பதிவு செய்யவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மிகவும் குறைவான விலையில் அதிக மைலேஜ் வழங்க கூடிய ஒரு காரை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ மிகச்சிறந்த ஆப்ஷன் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து. குறிப்பாக முதல் முறையாக கார் வாங்க கூடிய இந்திய வாடிக்கையாளர்கள், மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோவை பரிசீலனை செய்யலாம் என நாங்கள் கருதுகிறோம்.


Click it and Unblock the Notifications