வெறும் மூனரை லட்சத்துக்கு புது கார்! பைக்ல போய்ட்டு இருக்கவங்க எல்லாம் இனி சொந்த கார்ல போக போறாங்க!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ (Maruti Suzuki S-presso). இந்த காரின் கடந்த 2025ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report), வி3 கார்ஸ் தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது.

இதன்படி பார்த்தால், கடந்த 2025ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்திய சந்தையில் 3,396 மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் அதற்கு முந்தைய நவம்பர் மாதம் வெறும் 1,747 மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன.

Maruti Suzuki S-Presso Side View

அதாவது கடந்த 2025ம் ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது, அதன்பின் வந்த டிசம்பர் மாதத்தில் 1,649 மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ கார் விற்பனையில் 48.56 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது.

பொதுவாக சமீப காலமாகவே மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ காரின் விற்பனை மந்தமாகதான் உள்ளது. ஆனால் கடந்த டிசம்பர் மாதம் மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ காரின் விற்பனையில் திடீரென எழுச்சி ஏற்பட்டுள்ளது. பொதுவாக வருட இறுதியில் கார்களின் விற்பனை அதிகரிப்பது வழக்கம். மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ காரின் விற்பனையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சிக்கு இதுவும் ஒரு முக்கியமான காரணமாக இருக்கலாம்.

Maruti Suzuki S-Presso

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 3.50 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. இதன் மூலம் இந்திய சந்தையில் கிடைக்கும் மிகவும் விலை குறைவான கார்களில் ஒன்றாக மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ திகழ்கிறது.

அதே நேரத்தில் மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ காரின் டாப் வேரியண்ட்டின் விலையும் கூட வெறும் 5.25 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது. இவை அனைத்துமே மாருதி சுஸுகி இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

இது மிகவும் விலை குறைவானது என்பதுடன், அதிக மைலேஜ் வழங்க கூடிய கார்களில் ஒன்றாகவும் இருக்கிறது. மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ காரின் Std (O) மேனுவல், LXI (O) மேனுவல் வேரியண்ட்கள் ஒரு லிட்டருக்கு 24.12 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்க கூடியவையாக உள்ளன.

அதே நேரத்தில் VXI (O) மேனுவல், VXI+ (O) மேனுவல் ஆகிய வேரியண்ட்கள் ஒரு லிட்டருக்கு 24.76 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்க கூடியவையாக இருக்கின்றன. மறுபக்கம் VXI (O) ஆட்டோமேட்டிக், VXI+ (O) ஆட்டோமேட்டிக் ஆகிய வேரியண்ட்கள் ஒரு லிட்டருக்கு 25.30 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குகின்றன.

அதே நேரத்தில் மாருதி சுஸுகி எஸ்-பிரேஸ்ஸோ காரின் சிஎன்ஜி மூலம் இயங்க கூடிய LXI (O) மேனுவல் மற்றும் VXI (O) மேனுவல் ஆகிய வேரியண்ட்கள் ஒரு கிலோவிற்கு 32.73 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்க கூடியவையாக உள்ளன. இவை அனைத்துமே மாருதி சுஸுகி நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படும் அராய் மைலேஜ் (ARAI Mileage) ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மாருதி சுஸுகி ஆல்டோ கே10, டாடா டியாகோ மற்றும் ரெனால்ட் க்விட் போன்ற கார்களுக்கு எல்லாம், மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ மிகச்சிறந்த மாற்று ஆப்ஷன் ஆகும். குறிப்பாக பைக்குகளில் இருந்து அப்டேட் ஆகி முதல் முறையாக ஒரு புதிய காரை வாங்குபவர்கள் மற்றும் இந்த காரை பரிசீலனை செய்யலாம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, January 14, 2026, 23:16 [IST]
English summary
Maruti suzuki s presso sales report december 2025 48 56 per cent growth
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+