33 கிமீ மைலேஜ்! வெறும் மூனரை லட்சத்துக்கு புது கார்! டுவீலர் மாதிரி யார் வேணாலும் ஈஸியா ஓட்டலாம்!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ (Maruti Suzuki S-presso). இது ஓட்டுவதற்கு மிகவும் எளிமையான ஒரு கார் ஆகும். மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ காரின் நீளம் (Length) மற்றும் அகலம் (Width) முறையே வெறும் 3,565 மிமீ மற்றும் 1,520 மிமீ ஆக மட்டுமே இருக்கிறது.

அதே நேரத்தில் மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ காரின் 'டர்னிங் ரேடியஸ்' (Turning Radius) வெறும் 4.5 மீட்டராக மட்டுமே உள்ளது. இந்த குறைவான நீள, அகலம் மற்றும் சிறிய டர்னிங் ரேடியஸ் காரணமாக போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளிலும், குறுகலான சாலைகளிலும், மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ காரை ஓட்டுவது மிகவும் எளிமையான ஒரு விஷயமாக உள்ளது.

Maruti Suzuki S-presso Interior

அத்துடன் பார்க்கிங் செய்வது மற்றும் யூ-டர்ன் எடுப்பது போன்றவற்றையும், இவை மிகவும் எளிமையாக மாற்றியுள்ளன. இது கையாள்வதற்கு மிகவும் எளிமையான ஒரு கார் என்பதுடன், சிறப்பான மைலேஜ் வழங்க கூடிய கார்களில் ஒன்றாகவும் உள்ளது. மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ காரின் சிஎன்ஜி வேரியண்ட்கள் ஒரு கிலோவிற்கு 32.73 மைலேஜ் வழங்க கூடியவையாக இருக்கின்றன.

இது மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அராய் மைலேஜ் (ARAI Mileage) ஆகும். அத்துடன் இது இந்திய சந்தையில் கிடைக்க கூடிய மிகவும் விலை குறைவான கார்களில் ஒன்றாகும். தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 3.50 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது.

Maruti Suzuki S-presso

அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலையும் கூட வெறும் 5.25 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது. இவை அனைத்துமே மாருதி சுஸுகி இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும். கையாள்வது எளிது, மைலேஜ் அதிகம் மற்றும் விலை குறைவு என்றாலும் கூட, மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ காரின் விற்பனை ஒவ்வொரு மாதமும் மிகவும் மந்தமாகவே இருந்து வருகிறது.

இதற்கு நடப்பு 2026ம் ஆண்டு பிப்ரவரி மாதமும் விதிவிலக்கு அல்ல. ரஸ்லேன் தளத்தில் வெளியாகியுள்ள சேல்ஸ் ரிப்போர்ட்படி (Sales Report) பார்த்தால், மாருதி சுஸுகி நிறுவனம் நடப்பு 2026ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெறும் 451 கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 1,685 மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன.

அதாவது இம்முறை 1,234 மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ கார்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 73.23 சதவீத வீழ்ச்சி ஆகும். மறுபக்கம் மாதாந்திர ரீதியிலான ஒப்பீட்டில், மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ கார் இன்னும் மிக கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

அதாவது நடப்பு 2026ம் ஆண்டு ஜனவரி மாதம் 1,954 மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன. ஆனால் அதன் பின் வந்த பிப்ரவரி மாதம், நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி வெறும் 451 கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த வகையில் பார்த்தால் 1,503 மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ கார்கள் குறைவாக விற்பனையாகியுள்ளன. இது 76.92 சதவீத வீழ்ச்சி ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஓட்டுவதற்கு மிகவும் எளிமையானது, அதிக மைலேஜ் வழங்க கூடியது மற்றும் மிகவும் விலை குறைவானது போன்ற சிறப்பம்சங்கள் இருந்தாலும் கூட, மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ காரின் விற்பனை மிகவும் மந்தமாக இருந்து வருவது வருத்தமான ஒரு விஷயம்தான்.

ஆனால் இந்தியாவில் தற்போது மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ போன்ற ஆரம்ப நிலை ஹேட்ச்பேக் ரக கார்களுக்கு, வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பு இல்லை. அதற்கு பதிலாக எஸ்யூவி ரக கார்களைதான் வாடிக்கையாளர்கள் பெரிதும் விரும்புகின்றனர். மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ காரின் விற்பனை மந்தமாக இருப்பதற்கு இது மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாகும்.

More from DriveSpark

Article Published On: Sunday, March 22, 2026, 17:51 [IST]
English summary
Maruti suzuki s presso sales report february 2026 77 per cent down
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+